Header Ads



பொலிஸார் மீது பாரத்தைபோட்டு, தப்ப முயற்சிக்கும் தயாசிறி

ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின்போது பொலிஸார் ஏற்கனவே முன்னாயத்தங்களை மேற்கொண்டு தயார் நிலையிலிருந்திருந்தால் அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற தாக்குதலை தடுத்திருக்க முடியும். அவர்களின் அசமந்தப் போக்கினாலேயே இத்தகைய சம்பவம் நேர்ந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அன்றைய தினம் பல்வேறு கட்சிகளுக்கும் ஆதரவான இளைஞர்கள் வன்முறைத் தாக்குதலை நடத்துவதற்கு ஒன்றிணைந்திருந்தார்கள்.

அத்தோடு நன்றாக மதுபானமும் அருந்தியிருந்தார்கள். கோபத்துடன் நிதானமில்லாதிருந்த அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

ஆனால் அன்று நான் அங்கு சென்றமையால் நிலைமையை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவருக்கு அப்பிரதேச பொலிஸார் பிணை வழங்குவதற்குத் தீர்மானித்தனர்.

அதேவேளை பிங்கிரிய பிரதேசத்தில் தாக்குதல்கள் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பது சாத்தியமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

எனவே அவர்களில் 6 பேரை பிங்கிரிய பொலிஸ் நிலையத்திலும், மேலும் 6 பேரை ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திலும் வைத்திருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் கடைகள், குடியிருப்புக்கள் என்பன காணப்பட்டமையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி மக்கள் கூடினர்.

அந்த பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை விட வெளியே கூடிய மக்களின் தொகை அதிகமாகும்.

எனவே நான் அங்கு சென்றிருக்காவிட்டால் நிச்சயம் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும். அப்படியொரு பொலிஸ் நிலையமே தற்போது அங்கு இல்லாத நிலையொன்று ஏற்பட்டிருக்கும்.

இந்நிலையில் அன்றைய தினம் காலை பிங்கிரியவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஹெட்டிபொலவிற்கு கொண்டுசெல்லப்பட்ட 6 பேருக்கு பொலிஸார் பிணை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி அவர்களுக்கு கைவிலங்கிட்டபடி, பொலிஸாரின் பாதுகாப்புடன் தான் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திலிருந்து அந்த 6 பேரையும் அழைத்துவந்து பிங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. பொலிசார் மீது அமைச்சர் பாரத்தை போட்டால்,ஏன் அந்த பொலிசாருக்கு வாய் இல்லையா? உன்மையாக நடந்த விடயத்தை கூற முடியும்தானே,ஏன் அவர்கள் இன்னும் போலிசார் அமைதி

    ReplyDelete
  2. Ippudi oru m.p.yaa solrathu....police nilayame irikkaathaam.....mmmmh..nalla iriki sir unga tik tok....
    Appudi kudihharanuhalukku saarfa pesuriye neeyellam oru m.p.....wetkamilla...
    Suyanalawaathy....
    Sandarppawaathi....
    Ungala pola ullawarhal irikkum waray intha naadu naasamthaanda....
    Ingathaanda unga unmay kaattuthu....

    ReplyDelete

Powered by Blogger.