May 11, 2019

அபாயா அணிந்த ஆசிரியைகள், தம்மை பரிசோதிக்க அனுமதிக்கவில்லை - இனவாத வாடை வீசும், மனோவின் புதிய கதை

அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை எனவும், இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும்  இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருக்கின்றதாகவும், ஆனால் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாததால், ஆளுனர் ஆசாத் சாலியை சந்திக்க செல்ல அவர்களுக்கு தாம் இடம் கொடுத்ததாகவும் அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர என்னிடம் தெரிவித்துள்ளார்.

எனவே, “உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிசாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை” என்ற உண்மையை மறைத்து, புனைகதைகளை பரப்பி, அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் பாடசாலை விடயத்தை திரிக்க வேண்டாம் எனவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் எனவும் அனைவரையும் கோருகிறேன். இத்தகைய ஒரு தேசிய பாதுகாப்பு நெருக்கடி மிக்க சூழலில், அனைவரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். அவிசாவளை எனது கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

ஆகவே இது தொடர்பில் நாம் பொறுப்புடனும், நிதானமாகவும் நடந்துக்கொண்டு தீர்வை தேட வேண்டுமென, மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலியிடம் நான் இன்றும், நேற்றும் கூறியுள்ளேன். திங்கட்கிழமை நான் இப்பாடசாலைக்கு நேரடியாக சென்று, பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து, நிலைமைகளை அவதானித்து பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளதாவது, நாடாளுமன்ற நுழைவாயிலில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள்நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம். எமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு தரம் உள்நுழையும் போதும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. இதுபற்றி அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும். இதை அறியாதவர்களுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் விளயாட முடியாது.

இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியர்கள், கடந்த வருடம் பின்தங்கிய தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு என விசேடமாக வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று பணிக்கு வந்தவர்களாவர். இவர்களின் நியமனம் குறிபிட்ட பாடசாலையின் பெயர் குறிப்பிட்டு வழங்கப்பட்டவையாகும். ஆகவே இவர்களுக்கு இடமாற்றம் ஒருபோதும் வழங்கப்பட முடியாது. இதை இந்த ஆசிரியர்களும், பாடசாலை பெற்றோர்களும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆசிரிய சேவை செய்து இவர்கள் அரசாங்க சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், வேதனம் பெறுகின்ற ஆசிரியர்களின் தொழிலை விட பிள்ளைகளின் கல்வியே முக்கியமானது. அதற்காகவே பாடசாலைகள் இருக்கின்றன. இந்த விதி இந்நாட்டின் எல்லா இடங்களுக்கும் பொதுவானதாகும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஏற்கனவே பின்தங்கி உள்ள தோட்டப்புற தமிழ் பாடசாலைகளின் கல்வி தரம் மேலும் மோசமடைவதற்கு   இடம் கொடுக்க மாட்டேன்.

இவர்களால் இனி இங்கே பணியாற்ற முடியாவிட்டால், அவர்களுக்கு பதில் வேறு ஆசியர்கள் எமக்கு தேவை. இதுபற்றி எனக்கு விபர அறிக்கை சமர்பிக்கும்படி மாகாண உதவி கல்வி பணிப்பாளர் உதயகுமாருக்கும், பாதுகாப்பு நியதிகளை இந்த பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கடைபிடிக்கும் முகமாக இப்பாடசாலை கல்வி நடவடிகைகளை முன்னெடுக்கும்படி, இப்பாடசாலை உள்வரும் ஹோமகம வலய கல்வி பணிப்பாளர் வீரசூரியவுக்கும் நான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

முகத்தை மூடக்கூடாது என்பது மட்டுமே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே உடை தொடர்பாக சட்டப்படி எவரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆசிரியைகளின் உடை தொடர்பாக பாடசாலைகளில் பாரம்பரியம் மாத்திரமே இருக்கின்றது. இத்தகைய உடை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்னரே இந்நாட்டில் ஆங்காங்கு பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் முகம் கொடுத்துள்ளனர். பாடசாலை பாரம்பரிய உடைகளுக்கு சட்ட அடிப்படை கிடையாது. எனினும் எந்த ஒரு சமூகத்திலும் சட்டம், சம்பிரதாயம் ஆகிய இரண்டுமே செல்வாக்கு செலுத்துகின்றன. உண்மையை சொல்லப்போனால், கொழும்பு நகரின் பல பிரபல தேசிய பாடசாலைகளில், பெண் ஆசிரியர்கள் சேலை அணிந்து மட்டுமே பாடசாலைகளுக்குள் நுழைய முடியும். இது அந்த பாடசாலைகளின் சம்பிரதாயம் ஆகும்.

பாடசாலை ஆசிரியர்களுக்கான பொதுவான உடை பற்றி இப்போது அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுபற்றி செவ்வாய்கிழமை அமைச்சரவையில் உரையாட உள்ளேன். இந்நிலையில் அபாயா அணிந்து வரவேண்டாம் என கூற சட்டத்தில் இடமில்லை. எனினும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும், தமது பாடசாலை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் தம்மை உடற்பரிசோதனை செய்ய உரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோருக்கு இடமளிக்க வேண்டும். இது இந்நாட்டில் இன்றைய பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை கட்டாயமாகும். இதில் எவருக்கும் எந்த ஒரு காரணம் கொண்டும் விலக்களிக்க முடியாது.

நடந்து முடிந்த கோர படுகொலைகளின் பின்னர், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பது மிகவும் நியாயமானது. இன்று தமது பிள்ளைகளின் கல்வியை விட, தமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்கே பெற்றோர் முதலிடம் வழங்குகின்றனர். இது சரியானது. மேலும் ஒரு பாடசாலை தொடர்பில் அங்கே கல்வி பயிலும் அந்த பிரதேச மக்களுக்கே அதிக உரிமை இருக்கின்றது. கடமை நிமித்தம் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாற்ற வரும் ஆசிரியர்கள், இதை புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

14 கருத்துரைகள்:

Thuwesam peasum mano antha school enna nadathatu teady parrum

அந்த பெண் ஆசிரியர்களுக்கும் மானம், மரியாதை என்று இருக்க்கிறது. பரிசோதனை செய்வதற்கும் முறை இருக்கிறது. அங்கு கூடி நின்றவர்கள் முன்னிலையில் அவர்களை பரிசோதிக்க எத்தனித்தார்களா? இல்லைஎன்றால் , அவர்களை பரிசோதிக்க முனையும் போது அந்த மானம்கெட்ட கூட்டம் ஒன்றுசேர்ந்ததா?

சிந்திக்க வேண்டும்.

அமைச்சர் மனோகணேசன் அவர்களே
பொறுப்புணர்வோடும், நிதானத்தோடும் செயல்படவேண்டும் என்று அசாத் சாலியிடம் சொல்வதற்கு பதிலாக இனவாதத்தை கக்கும் ஊடகங்களுக்கு ஒரு பொறுப்புள்ள சமூக மேம்பாடு, தேசிய ஒருமைபாடு அமைச்சராக நீங்கள் கூறியிருக்க வேண்டும்.


We didn’t see a police stopping the teacher, some old boys of the school taking law and order in their hand to a government servant to go to school, Minister can explain the
Incident accurately. We didn’t hear they saying help the police woman to do the job, rather
Follow the principle decision.

எவன் சார் கேட்கிறான், கண்ட நாயெல்லாம் நாட்டாமை பண்ணும், அவனுக இன்ட நாட்டை சீரழிச்சது எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு பேசுவானுக வேணான்னு சொன்னா அந்த நாய்ங்க கேட்கணுமே...! இந்தா இப்போ நீங்க நாட்டமைக்கு நிற்கிறீங்க....!எல்லாம் தலையெழுத்து.

என்ன சார் இவ்வளவு நாளும் கோமாவுலயா இருந்த..?

Mano ganeshan exceeding his limit......

If the story is true, there is no “Ina Waatham” in it. Consider changing the title.

திரு.மனோ அவர்களே,பாடசாலையில்,அதுவும் பல வருடங்லாக சேவையாற்றும் அவர்களை பரிசோதிக்கும் அவசியம் பொலிசாருக்கு முதலில் இருக்கவில்லை.ஆனால் அந்த பாடசாலையின் அயோக்கியப் தாய்,தந்தையர்கள் செய்த பிரச்சினைதான் காரணம்.ஆனால் நீங்கள் அந்த நேரத்தில் அமைதியாக பேசாமல்,கண்ணை மூடிக் கொண்டு அனியாயத்துக்கு அங்கீகாரமலித்து விட்டு,இப்போது முழுப் பூசனிக்காயை சோத்தில் மறைக்க முயலவேண்டாம். சில Muslim பெயர்தாங்கிய பயங்கரவாதிகள் செய்த குண்டு வெடிப்புக்கல் காரணமாக இப்போது மிக,மிக இலகுவில் அனைத்தும் எங்களின் தலையில் போடும் கலாசாரத்தை நீங்களும் பின்பற்றுவதை நினைக்கும் போது கொஞ்ஞம் கவலயாக உள்ளது.திருக்கோனமலையில் உள்ள பாடசாலையி இதே பிரச்சினை வந்த போது எந்த குண்டுவெடிப்பும் இல்லை,போலிசார் அங்கே பரிசோதனை செய்யவில்லை ஆனால் அங்கும் இதே பிரச்சினையை தமிழ் மக்கள் கையில் எடுத்தார்கள் என்பதையும் உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா

எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை இலாபம் என்று அலையும் தமிழ் பயங்கரவாதிகள் யாரையும் நம்புவது எம்மடமை

Video aatharam irundum mulup pusanikkaayai setril maraikkum muyatchi #tamil inap payangaravaatham

இந்தக் கதை நம்பும்படியாக இல்லை.போலீசுக்கு இவர்தான் இந்தக்கதையை சொல்லியிருப்பாரோ ? அந்த teachers தெளிவு படுத்தட்டும்

Not only here, but muslims should cordinate with the security checks in every where like supermarkets, Hospitals and School, i mean only Muslims

சோடிக்கபட்ட கதைகள்.இல்லையேல் இவ்வளவு தாமதமாய் வரக்காரணமென்ன?சோதனை என்பது எல்லோருக்கும் பொதுவானது, அதை யாரும் தடுக்கமுடியாது, ஆனால் அங்கு நடக்கவிருந்தது சோதனையின் பெயரில் தனியாள் அதிகார துஷ்பிரயோகம். மூலைக்கும் பேச்சுக்கும் சம்மதமில்லா தவற்றையே அபாயா எதிர்ப்பாளர்கள் பேசுகின்றனர்.படிப்பறிவு இலன்கையில் 98 வீதம் இருந்து என்ன பயன்? பொதி அறிவும் எதார்த்தமான சிந்தனையும் அல்லவா மிக அவசியம்.

Anush
As per your statement, what happened to Tamil people is correct. This is what you want to say.

Post a Comment