Header Ads



முஸ்லிம் ஆசிரியைகளை சாரி, அணிந்து வருமாறு கொடுமை - புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் அட்டகாசம்

அவிசாவளை, புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் நாட்டிலுள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த பாடசாலைக்குச் சென்றிருந்த முஸ்லிம் ஆசிரியர்களை மறுநாளில் இருந்து அபாயாவுடன் வரவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். இன்றைய தினம் (07) நோன்பு நோற்ற நிலையில் கலர் அபாயா அணிந்து சென்ற ஆசிரியர்களை பாடசாலை நிர்வாகமும் பெற்றோரும் சூழ்ந்து மோசமான வார்த்தைகளால் ஏசியுள்ளனர். 

அதிலுள்ள முஸ்லிம் ஆசிரியை ஒருவர் 15 வருடங்களாக அதே பாடசாலையில் கற்பித்து வருபவர். ஆனால் அவரையும் அவமதித்துள்ளனர். விடயம் மேல் மாகாண ஆளுனர் வரை சென்றதுடன், அவர் வலயக் கல்விப் பணிப்பாளரை அனுப்பியுள்ளார்.

ஆனால் வலயக் கல்விப் பணிப்பாளரான பெரும்பான்மை இன சமூகப் பெண், முஸ்லிம் ஆசிரியைகளை பாடசாலை வருவதாக இருந்தால் சாரி அணிந்து வருமாறு இனவாதம் கலந்த தொனியில் பேசியுள்ளார்.

இது குறித்து அப்பாடசாலை ஆசிரியை ஒருவரின் தந்தை என்னைத் தொடர்பு கொண்டதுடன், குறித்த விடயத்தைக் கூறி ஆசிரியைகள் ஆளுனரிடம் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.

நான் உடனே ஆளுனர் அஸாத் சாலியைத் தொடர்பு கொண்ட போது இந்தப் பிரச்சினை சம்பந்தமான புகார் குறித்து தான் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

SLMC  தலைமையகம் தாருஸ்ஸலாமிலுள்ள TASK FORCE இனைத் தொடர்பு கொண்ட போது, சம்பவத்தின் பின்னர் திங்கட்கிழமை தான் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே வைத்தியசாலைகளில் ஹிஜாப் பிரச்சினை ஏற்பட்ட போது, சுகாதார இராஜாங்க அமைச்சு கட்சியிடம் இருந்ததால் இலகுவாக சுற்றறிக்கையை வெளியிட முடிந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் குறித்த விடயத்தில் மேல் மாகாண ஆளுனர் உட்பட உயர்மட்டத்தினர்  கவனம் செலுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கூறினர்.
mohamed riyas

8 comments:

  1. Purka thadaikku neengathan pachchai kodi kaatininga... ippo habayada nilamai enna? Yethayum yosichchi suttarikkai velividanum.

    ReplyDelete
  2. iwanga thirunda powadu illai

    ReplyDelete
  3. சிங்கள பாடசாலைகளில் கூட நடக்காதது இந்த இனவாத பன்றிகளின் பாடசாலைகளில் நடக்கின்றது முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள் தமிழ் பயங்கரவாதம் விழுங்கிவிட முன் வீதியில் இறங்குங்கள்

    ReplyDelete
  4. கல்விப்பணிப்பாளர் ஒரு சிங்க பெண்மணியாம்.
    சிங்கள பெண் உத்தரவு போட்டால் yes madam என அடங்கிப்போவது தானே முஸ்லிம்களின் வழக்கம். ஆனால் தமிழ் பாடசாலை என்பதால் ஒரு சலசலப்பு போடுறியல் போல.

    ReplyDelete
  5. எமது Muslim பாடசாலையிக்கு வரும் அனைத்து தமிழ் ஆசிரியைகலும் அபாயா அனியுமாரு நாளை முதல் அனைத்து Muslim பாடசாலைகளின் நிர்வாகமும்,தாய்,தந்தையரும் கோரிக்கை வைத்து அவர்களையும் பாடசாலயை விட்டு வெளியே அனுப்பவும்.

    ReplyDelete
  6. சிங்கலப் பென் கல்விப்பணிப்பாலர் உண்மைதான்.ஆனால் பிரச்சினையை உருவாக்கியது யார்? என்பதை மீண்டும் அந்த செய்தியை நண்றாக வாசியுங்கள் ajan

    ReplyDelete
  7. சால சலப்புப் போட அவர்கள் ஆற்று நீரோ மானங் கேட்ட வர்க்கமோ அல்ல,
    கண்ணியமாக ஒழுக்கமாக வாழ ஆசைப் படுகிறார்கள் என்று அர்த்தம்,
    புரிகிறவர்களுக்குப் புரியும், புரியாதவருக்குப் புரியாது,
    தெரிந்து கொள்க.
    அவர் அவர் உரிமைக்கும் தடையா?
    என்ன சமூகம், என்ன அநியாயம்டா இது?

    ReplyDelete
  8. தமிழ் சோனகர்கள் இலங்கையின் பூர்வீக மக்கள். இவர்களின் பெண்கள் முக்காட்டுடன் சேலை அணிபவர்கள். யார் இந்த அபாயா அணியும் அரபிகள்? இவர்களா பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.