Header Ads



எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களின் செல்லக்குழந்தைகளாக முஸ்லிம்கள் இருந்தார்கள்

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது இன்று தமிழ் மக்களின் கைகளிலேயோ அல்லது முஸ்லிம் மக்களின் கைகளிலிலேயோ தற்போது இல்லை.

அது அவர்களின் கைகளில் இருந்து விடுபட்டு போய்விட்டது. தற்போது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சிங்கள அரசின் கைகளுக்கு சென்று விட்டது” என  எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “அண்மையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல் காரணமாக முஸ்லிம் மக்கள் பழிச் சொல்லுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த பழிச்சொல்லில் இருந்து நாம் இலகுவாக மீண்டு வரமுடியாது. இது இன்னும் பல்வேறு பரிமாணங்களில் இந்த பழிச் சொல் தொடரும்.

இவ்வளவு காலமும் சைவமும் தமிழும் என்று பேசி வந்த கிழக்கு மாகாணத்தில் தற்போது இந்துத்துவம் பேசுகின்ற அளவிற்கு மாறிப்போயுள்ளது. தமிழ் இளைஞர்களும் தங்களது நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் காரணமாக கை கட்டி, வாய்ப் பொத்திக்கொண்டு இருந்து போக வேண்டியதுதான். விடுதலைப் புலிகள் குண்டு வைத்தார்கள் என்றால் அதில் ஒரு இலக்கு, நோக்கம் இருந்தது.

தற்போது எந்த நோக்கத்திற்காக குண்டு வைக்கப்பட்டது. இது ஏன் வைக்கப்பட்டது. என்ன காரணம்? எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசாங்கத்தின் செல்லக்குழந்தைகளாக முஸ்லிம்கள் இருந்தார்கள்.

எனினும், அந்த நிலைமை தற்போது முற்றிலும் மாறிப்போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. விடுதலைப் புலிகள் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தார்கள். இதில் உள்ள இலக்கு, நோக்கம் என்பவைற்றை ஹனீபா அவர்களால் விளக்க முடியுமா?

    ReplyDelete
  2. செல்லக் குழந்தைகளாக இருந்தவர்கள் இன்னும் இருப்பவர்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள்தான்.
    முஸ்லிம்கள் எல்லா அரசிலும் "செல்லா" குழந்தைகளே

    ReplyDelete
  3. 1998 என ஞாபகம் தோழர் பசீர் சேகுதாவுத் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு முஸ்லிம் மக்களின் வயல் நிலங்கள் மந்தைகள் தடுக்கபட்ட பிரச்சினை தொடர்பாக பேச ஆபத்துக்களை மேற்கொண்டு படுவான் கரைக்கு போயிருந்தேன். அதற்க்கு முதல்நாள் தோழர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் ஓட்டமாவடியில் இருந்து ஒரு குழு போயிருக்கிறது. என்னுடைய பேச்சுவார்தையில் யாழ்பாணத்தில் இருந்து வந்திருந்த உளவ்ய்த்துறை முன்னணி தலைவர் ஒருவர் வேந்தன் என்கிற பெயரில் கலந்துகொண்டிருந்தார். யாழ்பாணத்தவரான அவருக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தமிழ் புலமையை நம்பவே முடியவில்லை. சந்திப்பு முழுவதும் தோழர் எஸ்.எ.எம்.ஹனீபாவின் தமிழின் மயக்கத்தில் இருந்தார். அவர் பிரச்சினைகளை தீர்துவைக்க விரும்பியும் கிழக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கவில்லை. மயங்கிபோயிருந்தார். தோழர் கலைஞர் எஸ்.எல்.எம்,ஹனீபாவின் கருத்துக்கள் முக்கியமானவை. ஆனால் வடகிழக்கு இணைப்பு சிங்களவர் கையில் எப்பவும் இருக்கவில்லை. தமிழர் வரலாற்றை சிங்களவர் எழுதவில்லை. தமிழர் வரலாற்றை தமிழர் தங்கள் வீரமிகு போராட்டத்தினூடாகவும் உலக நாடுகளை எதிர்த்த முஸ்லிம்களை பகைத்த தவறுகளாலும் தமிழர்களே எழுதினார்கள். வெளிநாடுகளின் அனுசரணையுடன் இந்தியாவே வடகிழக்கை இணைத்தது. சிங்களவர் புலிகள் வெளிநாடுகளை எதிர்ததை சாதகமாக்கி வடகிழக்கை பிரித்தமைதான். பிரபாகரனின் தவற்றை இன்று தமிழர்கள் உணர்ந்து திருத்தியுள்ளனர். இப்பவும் வடகிழக்கு இணைப்பு அழுத்தம் தலையீடு என இந்தியா மற்றும் வெளிநாடுகளின் கையில்தான் உள்ளது. அது திகதி குறிப்பிடபடாது தீர்மானிக்கபட்ட தீர்மானம். என் கவலையெல்லாம் முஸ்லிம் அலகுகளின் சுயநிர்ணய உரிமைபற்றியது. அவர்கள் தமிழருடன் இணைந்திருக்க சிங்களவருடன் இணைய அல்லது சிங்கள அரசின் அனுசரனைய்டன் தனி அலகாக இயங்க அல்லது போராடி தனித்தேசமாக உரித்துள்ளவர்கள். இதே உரித்து தமிழருக்கும் உள்ளது.

    ReplyDelete
  4. வாய் பொத்தி இருப்பதெல்லாம் கோலைத்தனம் Mr.ஹனிபா நீங்கள் சொல்வதை பார்த்தால் மார்க்கத்தை இழிவு படுத்துகிரீர்கள் என்பது போல் தெரிகிரது நீங்கள் தவறுயிலைக்கவில்லை என்றால் எதுக்காக பயப்பிட வேண்டும் நியாயத்தை தட்டி கேலுங்கள் நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள் இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் உரிய நாடல்ல தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லோருக்கும் உரிமையான நாடு எங்கள் தாய் நாடு நீங்கள் கூனிக் குனிந்து நிற்பிர்கலேயானால் எதிர்காலத்தில் அழிந்துபோய் விடுவீர்கள் அல்லாஹ் அழித்து விடுவான் உங்களை

    ReplyDelete

Powered by Blogger.