Header Ads



ஷரிஆ பல்கலைக்கழகத்தை, சுற்றுலாத்துறைக்கான கேந்திர நிலையமாக மாற்றலாம் - ஜனகன்

மட்டக்களப்பு கல்வி நிறுவனத்தை சுற்றுலாத்துறைக்கான கல்லூரியாக மாற்றுவதன் மூலம் குறித்த கல்லூரியை சுற்றுலாத்துறைக்கான கேந்திர மத்திய நிலையமாக மாற்றலாமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஷரியா பல்கலைக்கழகம் அமைவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் அனுமதி வழங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். உண்மையில் இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம் அரச பல்கலைக்கழகங்களைத் தவிர வேறு உள்நாட்டு கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகம் என்ற பெயரால் அழைக்க முடியாது. உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட கல்விநிறுவனம் என்றுதான் அதனைக் கூறமுடியும்.

இங்கு மட்டக்களப்பு கம்பஸ் எனப்படும் தனியார் கல்வி நிறுவனம் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கல்வி நிறுவனம். இந்த ஆணைக்குழுவில் நாடுபூராகவும் 600 இற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனத்திற்கான பதிவு செய்யப்பட்ட காலமும் காலாவதியுள்ளதாக தெரியவருகிறது. 

இப்படியான நிலையில்இந்த நிறுவனத்தின் முதலீடு தொடர்பாகவும் பல்வேறு சந்தேகங்கள் இன்னும் தொக்கியுள்ளன. இது இவ்வாறிருக்க, ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் இதனுடைய உண்மையான உரிமையாளர் தொடர்பாகவும் அதனுடைய முதலீடு தொடர்பாகவும் சந்தேகம் இருக்கும் சூழலில், வேறுவடிவில் இதற்கு பல்கலைக்கழகமாக அனுமதி வழங்க முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வலுக்கின்றது.

குறித்த கல்வி நிறுவனம் உயர்கல்வி அமைச்சின் பதிவுக்குட்படுத்தப்படும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதாவது உயர்கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஒரு கல்வி நிறுவனமாக மாற்றப்படும். இதனால் இந்த நிறுவனம் ஏதாவது தவறான எண்ணத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அதற்கான பாதையை இந்த அரசாங்கமே அங்கிகாரத்துடன் வழங்குவதற்கு ஒப்பானது.

ஏனெனில் இவ்வாறு உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் எவ்வாறான கற்கைநெறிகளை வழங்குகின்றது என்பதனை நடைமுறையில் கண்காணிப்பதற்கு உயர்கல்வி அமைச்சில் எந்த பொறிமுறையும் இல்லை.

அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறிகளை மாத்திரமே கண்காணித்து நெறிப்படுத்துவார்கள். ஆனால் அவ்வாறு உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் அந்த அங்கீகாரத்துடன் வெளிநாட்டு கற்கைநெறிகளையும் தங்களுடைய வேறு கற்கைநெறிகளையும் வழங்க முடியும். இது இலங்கையில் இன்று பல நிறுவனங்களில் நடைபெற்று வருகின்றது.

ஆக ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி இல்லை என்ற பிரதமரின் கருத்து உண்மையில் வேடிக்கையாக உள்ளது. இப்படி அனுமதி இல்லை ஆனால் அப்படி அனுமதி கொடுக்கிறோம் என்பது போல் உள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீட்டின் உண்மையான நோக்கம் அறியாது இதற்கு உயர்கல்வி அமைச்சில் பதிவுசெய்யக்கூடிய அனுமதி கிடைத்தால் நிச்சயமாக இதனைப் பயன்படுத்திஅவர்கள் என்ன திட்டமிட்டு உள்ளார்களோ அதனை சிறப்பாக செய்யமுடியும் என்பதே உண்மை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்ததே உயர்கல்வி அமைச்சில் பதிவு மாத்திரமே. இதனை எந்தவடிவில் இந்த அரசாங்கம் வழங்கினாலும் அது அவர்களுக்கு வெற்றிதான்.

இந்தக் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போது மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கல்வி நிறுவனம். ஆகவே இதனுடைய நோக்கம் தொழில் சார் கல்வியினை வழங்குவதே. பிறகு ஏன் பல்கலைக்கழகமாக மாற்ற தடுமாற வேண்டும்? இந்த நிறுவனத்தின் முதலீடுதொடர்பாக ஒரு சந்தேகம் இருப்பதால் இதனை ஒரு தனியார் நிறுவனமாக இயங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கிழக்கில் ஏற்கனவே இரண்டு அரச பல்கலைக் கழகங்கள் உள்ளன. அதிலும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிம் மக்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற இனங்களுக்கு இல்லாத ஒரு வரப்பிரசாதம். இதனை முஸ்லிம்இனத் தலைவர்கள் சரிவர செய்துள்ளார்கள் என்பதே உண்மை.

இலங்கையில் கிழக்கு பிரதேசமானது இயறக்கையாகவே சுற்றுலாத்துறைக்குப் பிரசித்தி பெற்றது. எமது நாட்டில் சுற்றுலாத்துறையின் பல்வேறு பரிமானங்களை கற்பித்துக் கொடுக்கக்கூடிய ஒரு அரச தொழில்சார் கல்வி நிறுவனம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த துறை சார்ந்த தொழில்சார் கல்வியினை வழங்குவதனூடாக இன்று கீழ் நோக்கி இருக்கும் சுற்றுலாத்துறையினை மீண்டும் அசுர வேகத்தில் மக்கள்மயப்படுத்தப்பட்டதாக வளர்க்க முடியும்.

ஆகவே இந்த நிறுவனத்தினை சுற்றுலாத்துறை அமைச்சு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இதில் சுற்றுலாத்துறை சார்ந்த குறுகிய கால நீண்ட கால தெழிற்கல்விகள் நாடாத்த முடியும். இதில் பல்வேறு சர்வதேச மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் . அதில் ஒரு மொழியாக அரபு மொழியும் அமையலாம். இதில் இஸ்லாமிய நாகரிகம், பௌத்த நாகரிகம், இந்து நாகரிகம் மற்றும் கிறிஸ்தவநாகரிகம் என்பன கற்பிக்கப்படுவதும் சிறப்பு.

இவ்வாறு சுற்றுலாத்துறையும் அதனுடனான பல்வேறு கற்கைநெறிகளும் முழுமையாக சுற்றுலாத்துறை அமைச்சு ஊடாக வழங்கப்படுமாயின் நிச்சயமாக இந்த கட்டிடத் தொகுதி ஒரு சுற்றுலாத்துறை சார்ந்த கல்விக்கான கேந்திர நிலையமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை.

நிச்சயமாக இதற்காக நிதி வழங்கிய கொடைவள்ளள் அல்லது வள்ளல்கள் மகிழ்சியடைவார்கள். ஒரு கல்வி நிறுவனத்தினை மையப்படுத்திஇனங்களுக்கிடையில் உருவாகக் கூடிய நம்பிக்கையீனமும் தடுக்கப்படும் என அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 comments:

  1. ஜயா ராசா கொஞ்ஞ நாட்களாக உங்களின் ஆட்டம் தாங்கமுடியல அழுதுடுவேன்.இப்படி வடிவேல் கதை போல இருக்கு.ஜயா,மலைக்காடுகலில் வெயிலிலும்,பணியிலும் ,சிறுத்தை,கரடி,இடி,மின்னல்,மழை என அனைத்தையும் தாங்கி உழைத்தும் இன்னும் 1000 ரூபாய் சம்பளம் கனவாகவே உள்ளது மலையக மக்களுக்கு.முதலில் தயவு செய்து அவர்களுக்கு 1000 பெற்றுக் கொடுத்துவிட்டு வாருங்கள் கிழக்கில கட்ட பஞ்ஞாயம் பன்னுவதுக்கு.ஏனெனில் உங்களுக்கு அரசியல் முகவரி தந்தது கிழக்கு மக்கலல்ல மலையக மக்கள்.இன்னும் அவர்களுக்கே ஒன்னயும் பன்னல,இதுக்குல்ல சும்மா....

    ReplyDelete
  2. தமிழ் இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு இருந்து கொள்ள முடியவில்லை ஒரு பல்கலைக்கழத்தையே மற்றும் ஏனைய தொழிற்சாலைகளையே அமைக்க சக்தியில்லாத மற்றும் திறமையில்லாத தலைவர்கள் முஸ்லிம் இனத்தைப் பார்த்து கொக்கரித்துக் கொண்டு திறிகின்றது. அந்த பல்கழைக்கழகத்தின் மொத்தச் செலவையும் கொடுத்துவிட்ட அதை பெற்றுக் கொள்ள முடியாத பிச்சைக் கராக் கூட்டங்கிளல் கருத்துக்கள் வேறு

    ReplyDelete
  3. ADI SERUPALA... THATS NOT SHARIYA UNIVERSITY.

    ReplyDelete
  4. யாருடைய பல்கலை கழகத்தை யார் கேட்பது? இந்த நாட்டிற்கு அடிமை சேவகம் செய்ய வந்த தோட்ட காட்டன் உங்கள் வரையைக்குள் இருந்துவிடுங்கள்

    ReplyDelete
  5. Nice idea, pls distribute the diaspora money sent to Nalloor kovil to Jaffna tourist board, does this sound a good idea

    ReplyDelete
  6. thamilinathin poramai pai bayangaramanadhu. unmayiley iwangalin naai buthiyai kaanbikindraner. kaaniyilum thamilanda kaani muslimda kaani wetruma pakura alawuku owworu pidi mannilaim thamil ielam andru eludhi ullarhalpola.........

    ReplyDelete
  7. At times you Hindus say we are Tamil speaking people and we should live peacefully but when the opportunity arises you stab us on our back. What a bunch of hypocrites!

    ReplyDelete
  8. @ NGK : நீங்கள் எல்லாம் நாடே இல்லாத கடல் கொள்ளையர்கள் , சமூக விரோதிகள் ஒதுங்க இடமே இல்லாமல் இங்கு வந்து ஒதுங்கிய நீயெல்லாம் கருத்து தெரிவிக்கிறாய் !

    ReplyDelete

Powered by Blogger.