Header Ads



மாணவர்களுக்கு டெப் வேண்டாம், பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று -09- சபையில் கோரிக்கையொன்றை விடுத்தார்.

அனுமதி கிடைத்துள்ள டெப்களை கொண்டுவரும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள். டெப் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு, பாடசாலைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு வருவதற்கு பணத்தை வழங்குங்கள். அது பெரிய புண்ணியமாக அமையும். மாணவர்களின் பெயரினால் வியாபாரிகளிடம் இருந்து டெப்களை கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டு 11,000 பாடசாலைகளுக்கும் பிரிவெனாக்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குங்கள். தேசிய தேவையாகக் கருதி மாணவர்களுக்காக அந்த பணத்தை வழங்குங்கள்.

என பந்துல குணவர்தன கோரிக்கை முன்வைத்தார்.

விலை மனு முறைமையை மீறி, காலாவதியான விடயங்களை செய்வதை விட மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பணத்தை செலவு செய்வது சிறந்தது அல்லவா?

1 comment:

  1. It's a copy paste from India and it's a simple example to prove Sri Lanka is following Indian stupids.
    There are most wanted things in this country to develop rather than issuing free Tabs. Water and electricity are in completed resources in our country. Government may provide grants in issuing Solar Power systems instead issuing free Tabs.
    There are certain political groups behind the benefit of issuance of Tabs, that's why there are very interested on it.

    ReplyDelete

Powered by Blogger.