May 28, 2019

முஸ்லீம்களே மனம் தளர்ந்து விடாதீர்கள், உறுதியாக இருங்கள், காலத்திற்கு தேவையான முத்தான அறிவுரை

-சில நாட்களுக்கு முன்னர் கொத்ததுவ ஜப்பார் ஜூம்மா மஸ்ஜிதில் இடம்பெற்ற ரமழான் விசேட நிகழ்வில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் அப்துல் ஹாலிக் ஹஸ்ரத் அவர்களால் நிகழ்த்தப்பட்ட விசேட உரையில் இருந்து காலத்திற்கு தேவையான ஒரு முக்கிய பகுதி எழுத்து வடிவத்தில்.

(By: இப்னு மீரா முஹைதீன்)

மேலான பெரியோர்களே! சகோதர்களே!
தற்போதய சூழ்நிலையில், ஊடகங்கள் மேற்கொள்ளும் முயற்சி,  ஆயுதங்கள் ரீதியான யுத்தம் அல்ல, உளவியல் ரீதியான யுத்தம் நடைபெறுகின்றது.

இப்போது முஸ்லீம்களில் சிலரே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்,                   இதற்கு மேல் எங்களால் ஏலாது,  நாங்க மலேசியா போகப் போறோம்,  நாங்க Uk போகப்போகின்றோம், நாங்க Family யுடன் அவுஸ்திரேலியா போகப் போகின்றோம்,            

எத்தனை பேர் போக முடியும், எங்கட நாட்டிலுள்ள ஒரு 5 வீத செல்வந்தர்கள் போக முடியும்,  மீதமுள்ள 95 வீதமுள்ள எங்களால் போக முடியுமா?

நாங்கள் கடந்த 1200 வருடங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள், ஆனால் உளவியல் ரீதியாக எங்களை கீழே போட்டு இந்த நாட்டில் வாழ முடியாது, இதற்கு பின்னால் தொழில்செய்ய ஏலாது, இதற்கு பின்னால் முகம் காட்ட முடியாது என்று உளவியல் ரீதியாக பின் தள்ளுவதற்குரிய பெரியதோர் யுத்தம் நடைபெறுகின்றது.

எனவே மேலான பெரியோர்களே, சகோதர்களே!

எனவே இந்த நேரத்தில் ரொம்ப கவனமாக தூர நோக்குடன் எப்படி நடக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்,  நடந்து முடிந்ததை பேசுவதை விட்டு விட்டு எதிர்காலத்தை பற்றி பேசுவோம், 
எதிர்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி பேசுவோம்.

அனைத்தை சோதனைகளையும் தைரியமாக எதிர்கொள்வோம் ,

சில நேரத்தில் சரியான கஷ்டங்களை முகங்கொடுக்க நேரிடும். ,ஏனெனில் அவர்கள் 15பேர் எங்களில் ஒருவர் அவர்களோடு Office இல் வேலை செய்வது இலேசான காரியமல்ல, ஆனால் முஸ்லீம் நினைக்க வேண்டும், இல்லை இதுதான் எனக்குரிய ஜிஹாத்(மனப்போராட்டம்)

ஆனால், தற்போது சிலர் பெயரை மாத்திட்டாங்க, முஸ்லீம் பெயர் இருந்தாலே பிரச்சினையாம், இன்னும் சிலர் முகத்தை மட்டும்தான் திறக்க கூறப்பட்டால் தலையையும் திறந்து கொண்டு போறாங்க,  நாளைக்கு நீங்க Denim, டீசேர்ட் உடுங்க என்றால் அதற்கும் தயாராகுவதா??

மேலான பெரியார்களே,சகோதர்களே!

எங்கட கலாச்சாரத்தை விடுவதில்லை, இஸ்லாமிய விழுமியங்களை விடுவதில்லை,  அவர்களோடு நெருங்குவோம், அவர்களுடைய தப்பெண்ணங்களுக்கு அழகான முறையில் பதில்களைக் கொடுப்போம்,  அதற்கு நாம் மார்க்கத்தை தெளிவாக கற்க வேண்டும்!

குறிப்பாக நாம் சொல்ல வருவது, தற்போது  உளவியல் ரீதியாய அப்படியே எம்மை கீழே போட பாக்கிறாங்க,  அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது, முந்தியதை விட வேகமாக எமது தொழிலோ! வியாபாரமோ! எங்களின் உத்தியோகமோ அமைய வேண்டும்,

சில சோதனைகள் இருக்கும்,சில வேளை எங்கட கடைக்கு வர மாட்டார்கள்,எங்கட Autoவில் ஏற மாட்டார்கள். பரவாயில்லை,

மனம் தளர்வதல்ல,  மனம் தளர்ந்து விட்டால் அப்படியே எம்மை ஓரமாக்கி விடுவார்கள்,  கடைசியில் இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு வாழ ஏலாது என்று ஓரம் கட்டிவிடுவார்கள்.  எனவே மேலான பெரியார்களே சகோதர்களே!

அதனால் தைரியத்தை விடுவதில்லை,நாம் உறுதியாஇருப்போம்.  ஆனால் அவர்களோடு அஹ்லாக்காக பழகுவோம்,அவர்களோடு பண்பாக பழகுவோம்,அவர்களுக்கு உதவி செய்வோம்ம்,பாதிக்கப்பட்டவர்களுக்கும் எம்மால் முடிந்த உதவிகளை வழங்குவோம்.

அதே நேரம் இந்த நாசகார தீவிரவாதத்தோடு தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் காட்டிக்கொடுப்பது எம் கடமை என்பது போல , தனிப்பட்ட கோபத்துக்காக, சுயநலத்திற்காக அநியாயமாக ஒருவரை காட்டிக்கொடுப்பதையும்  தவிர்ந்து கொள்வோம்....

4 கருத்துரைகள்:

பேராயர் அவர்கள் இக்கட்டான நிலையில் நடந்து கொண்ட விதம் ஞாபகம் வருகிறது. நல்ல செய்தி.

May Allah Bless this Alim for this valuable timely advice needed for our society.

We should remember the backlash the American Muslims went through after 9/11. It was the same we go through today.
Muslims felt the effects of verbal harassment, threats, profiled and denied civil liberties that are granted to fellow U.S. citizens. Discrimination - Religious hatred- threatened and traumatized.

என்னுடைய ஒரு தாழ்மையான கருத்தை பகிர விரும்புகிறேன். இத்தருணத்தில் அண்ணியர்களின் மனதை வெல்ல வேண்டிய ஒரு நிலையில் நாம் அனைவரும் இருக்கிறோம். நான் நினைக்கிறேன் சாகத் என்னும் கடமையின் மூலம் இதை செய்ய முடியும் என்று.
சகாத்தை பெர தகுதியான கூட்டங்களில் "முஅல்லபத்துல் குலூப்" எனும் ஒரு கூட்டத்தினரும் உள்ளனர். இன்று நாம் இதை வெறும் நவமுஸ்லிம்களுக்கு மாத்திரம் வரையறுத்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். காரணம் அனேகமான இஸ்லாமிய நிபுணர்கள் இந்த கூட்டத்தில் முஸ்லிம் அல்லாத ஆனால் இஸ்லாத்தின் பாக்கம் சாயக்கூடிய உள்ளம் கொண்டவர்களும் இக்கூட்டத்தில் அடங்குவார்கள் என்பதாகவே கூறுகின்றனர். அப்படியானால் காலாகாலமாக நாம் பல ஏழை முஸ்லிம் அல்லாதவர்களுடன் பழகுகிறோம் எத்தனையோ சிங்களவர்கள் எம் கடைகளிலும் வீடுகளிலும் வருடம் பூராவும் நாள் கூலிக்காக வேலை செய்கின்றனர். எனவே ஒரு வருடத்தில் ஒரு முறை வரும் இந்த சகாத்தை ஏன் அவர்களுக்கும் கொடுத்து அவர்களின் மனதை மகிழ்விக்க முடியாது? அவர்களின் உள்ளங்களை வெல்வதற்கும் இது உதவும். இது ஒரு அல்லாஹ்வின் கட்டளையாக இருந்து அதை நாம் சரியாக நிறைவேற்ற தவறி இருந்தோமானால் இது அல்லாஹ்வின் கோபத்தை கொண்டு வருவதற்கு காரணமாகவும் அமைந்து விடும். பெரும்பாலான எமது முஸ்லிம் ஊர்கள் சுற்றுவர சிங்கள ஊர்களாலே சூழ்ந்து உள்ளன. அவற்றில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் மக்களே. இவர்களுக்கு எம்முடைய சகாத் பணத்தை கொடுத்து உதவ முடியுமென்றால் எத்தனையோ ஏழை மக்கள் இஸ்லாத்தின் பக்கம் சாய்வதற்கு காரணமாக அமைந்து இருக்கலாம். ஆகக் குறைந்தது பல அபூதாலிப்களையாவது உருவாக்கி இருக்கலாம். இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றம்தான் முஸ்லிம்கள் சுயநலவாதிகள் என்பது. இந்த சகாத்தில் அவர்களுக்கு சேர வேண்டியதை நாம் நிறைவேற்றியிருந்தால் இந்த பலியில் இருந்தும் விடுபடலாம் அத்துடன் அல்லாஹ்வின் கட்டளையையும் சரியாக நிறைவேற்றிய நண்மையையும் பெறலாம்.
சில இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் இன்று பாரிய அளவில் நிதிகளை நன்கொடையாக பெற்று இன நல்லிணக்கத்தை வளர்க்கிறோம் எனறு இனப்பாகுபாடு இல்லாமல் உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் சாகத் பணங்களையும் அவர்களின் நிதிநிறுவனங்களுக்கு பெற்றுக் கொள்கின்றனர். இதன்மூலம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ம் உதவிகளை வழங்குகின்றனர். ஆனால் சகாத்தை தனியா அன்னியர்களுக்கு வழங்க முடியாது என்று கூறுகின்றனர். இது அவர்களின் கருத்துக்கும் செயலுக்கும் ஒன்றுக்கு ஒன்று முறனாகவே காணப்படுகிறது.
ஆகவே எமது உலமாக்கள் மற்றும் முப்திளும் இது சம்பந்தமாக தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயத்தேவை எனபது என்னுடைய தாழ்மையான கருத்து.

Post a comment