Header Ads



வெசாக் கொண்டாட்டங்களில் பங்கொடுக்கும் முஸ்லீம்கள் பற்றி காரசாரமான விமர்சனங்களாலும், பத்வாக்களாலும் நிரம்பிவழிகின்றது பேஸ்புக்

அவர்களை விட்டுவிடுங்கள்;அவர்கள் அப்பாவிகள். அவர்களுக்கு வரையறை தெரியாது. எவை வணக்க வழிபாடாக கருதப்படக்கூடியவை, எவை பாரம்பரிய கலாசார வழக்காறுகள், எவை சாதாரண கொண்டாட்டங்கள் என்பது பற்றிய தெளிவில்லாதவர்கள். தமது சமூகத்தின்மீது விழுந்திருக்கும் கரையை நீக்க, தமது நல்லிணக்கத்தை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் பல்லின சமூக அமைப்பில் சகோதர இனத்தவர்களின் சமயம்சார்,கலாசாரம்சார் விவகாரங்களின் பங்கெடுப்பதன் வரையரை குறித்த தெளிவை வழங்காத மார்க்கத் தலைமைகளைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவரை வரவேற்க கைகூப்பி வணக்கம் வைப்பதற்கும், வணங்குவதற்கும் இடையிலான வித்தியாசத்தைக்கூட புரியாமல், விருந்தோம்பலைக்காட்ட வழங்கப்படும் தன்சலையும், கடவுளுக்கு படைத்து வழிபடும் ஆகாரங்களையும் வேறுபடுத்திப்பார்க்கத் தெரியாமல் எல்லாமே ஷிர்க், பித்அத், ஹராம், நரகம் என்று பயமுறுத்திவந்த மெளலவிமாரை கேளுங்கள்
முஸ்லீம் அல்லாத எல்லோரும் "காபிர்கள்" என்றும் அவர்களோடு நட்பு பாராட்டுவது வெறுக்கத்தக்க செயலாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வெறுப்பை விதைத்துவந்தவர்களையும் கேள்விக்குட்படுத்துங்கள்.

அன்பும் சமாதானமும் நிறைந்திருக்கும் இஸ்லாத்தின் பெயராலேயே வெறுப்பும் வன்முறையும் கருத்தியல் தீவிரவாதமும் போதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் மனங்கொள்ளல் வேண்டும்.

Ramees Abdul Salam

9 comments:

  1. பௌத்தர்கள் அவர்கள் சமயத்தின் படி முஸ்லிம்களை வரவேற்பார்கள், இந்துக்கள் அவர்களின் சமயத்தின் படி முஸ்லிம்கள் வரவேற்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் முஸ்லிம் சமயத்தின் படி வரவேற்க கூடாது. நல்லிணக்கம் என்பது அடுத்த மதக் கலச்சாரங்களை நம்மில் விதைப்பது அல்ல நாம் அவர்களின் கலச்சரத்தை மதித்து நடப்பது.இங்கே மாற்று மத சகோதர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவினையும் நமது நடைமுறைகள் மூலம் காட்டத் தவரியதன் விளைவே இதற்கான காரணம்.

    ReplyDelete
  2. முஸ்லீம் சமூகத்துக்குப் பிரச்சினையாக உள்ளவர்கள் எமது அறிவற்ற மௌலவிமார்களே .கண்டதற்கெல்லாம் சுவர்க்கமும் நரகமும் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.ஏதோ பழைய கிதாபுகளைப் பாடமாக்கிவிட்டு நாட்டிலும் சமூகத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்த மட்டுமே அவர்களுக்குத் தெரியும். எமது சமூகம் உருப்படியாக வாழ வேண்டுமாயின் இப்படிப்பட்டவர்களை அகற்றி அம்ஹர் மௌலவியைப்போல உருப்படியான,நல்ல மௌலவிகளை உருவாக்க வேண்டும்.குத்துபாக்களில் பழைய புராணங்களை பாடுவதையும் சுவர்க்கம் நரகத்தைப் பேசுவதையும் விட்டு அவ்வப்பபோது சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும், மக்களின் அன்றாடத் தேவையான விடயங்கள் பற்றியும் விளக்குதல் வேண்டும்.

    ReplyDelete
  3. முஸ்லீம் சமூகத்துக்குப் பிரச்சினையாக உள்ளவர்கள் எமது அறிவற்ற மௌலவிமார்களே .கண்டதற்கெல்லாம் சுவர்க்கமும் நரகமும் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.ஏதோ பழைய கிதாபுகளைப் பாடமாக்கிவிட்டு நாட்டிலும் சமூகத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்த மட்டுமே அவர்களுக்குத் தெரியும். எமது சமூகம் உருப்படியாக வாழ வேண்டுமாயின் இப்படிப்பட்டவர்களை அகற்றி அம்ஹர் மௌலவியைப்போல உருப்படியான,நல்ல மௌலவிகளை உருவாக்க வேண்டும்.குத்துபாக்களில் பழைய புராணங்களை பாடுவதையும் சுவர்க்கம் நரகத்தைப் பேசுவதையும் விட்டு அவ்வப்பபோது சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும், மக்களின் அன்றாடத் தேவையான விடயங்கள் பற்றியும் விளக்குதல் வேண்டும்.

    ReplyDelete
  4. முஸ்லீம் சமூகத்துக்குப் பிரச்சினையாக உள்ளவர்கள் எமது அறிவற்ற மௌலவிமார்களே .கண்டதற்கெல்லாம் சுவர்க்கமும் நரகமும் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.ஏதோ பழைய கிதாபுகளைப் பாடமாக்கிவிட்டு நாட்டிலும் சமூகத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்த மட்டுமே அவர்களுக்குத் தெரியும். எமது சமூகம் உருப்படியாக வாழ வேண்டுமாயின் இப்படிப்பட்டவர்களை அகற்றி அம்ஹர் மௌலவியைப்போல உருப்படியான,நல்ல மௌலவிகளை உருவாக்க வேண்டும்.குத்துபாக்களில் பழைய புராணங்களை பாடுவதையும் சுவர்க்கம் நரகத்தைப் பேசுவதையும் விட்டு அவ்வப்பபோது சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும், மக்களின் அன்றாடத் தேவையான விடயங்கள் பற்றியும் விளக்குதல் வேண்டும்.

    ReplyDelete
  5. சின்ன வயசுகளில் நான் கண்ட தமிழ் முஸ்லிம் உலகம் எவ்வளவு அழகாய் இருந்தது.சூபி ஞான மார்க்கம் ஒருபுறமும் சைவ கிறிஸ்துவ பக்தி மார்க்கம் மறுபுறமுமாக உறவு கொண்டாடி வாந்த காலங்கள். அரசியலில் தந்தை செல்வாவின் தாக்கத்தால் ஆறு ஏழு வயசிலேயே அப்பா அம்மா பேசும் தந்தை செல்வா அரசியலும் சுதந்திரன் வாசிப்பும் எங்களுக்கு முஸ்லிம்களை மதித்து போற்றும் மனசை தந்ததிருந்தது.தொப்பி போட்ட மாமா முக்காடு போட்ட அம்மா அக்கா என உறவுகளாய் கொண்டாடிய பொற்காலமது. எங்கள் பிள்ளைகளின் உலகத்தை நாசமாக்கியது யார்? ....எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்ல மெல்ல போனதுவே

    ReplyDelete
  6. Also there are imams saying you cannot greet non-muslims with Salam. these imams should be educated properly what is real Islam...

    ReplyDelete
  7. மிகவும் நன்றி Mr.Ramees Abdul Salam மிக மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  8. (நபியே !) யஹுதிகளும் , நசாராக்களும் நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரை உம்மைப்பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள்;(ஆகவே) அல்லாஹ்வின் (இஸ்லாம் எனும்) நேர்வழிதான் நிச்சயமாக நேர்வழி (அதனையே பின்பற்றுவேன்) என கூறிவிடுவீராக! அன்றியும் உமக்கு (உண்மையான )அறிவு வந்ததன்
    பின்னும் அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றுவீரானால் அல்லாஹ்விடமிருந்து
    (உம்மை காப்பாற்ற ) எந்தப் பாதுகாவலனும் எவ்வித உதவி செய்பவனும் உமக்கில்லை
    (சூரா அல்பகரா :120)
    "சாணுக்கு சாண் முழத்துக்கு முழம் அவர்களை நீங்கள் பின்பற்றுவீர்கள் அவர்கள் உடும்பின் பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள்" எனஅல்லாஹ்வின் தூதர்(ஸல் )
    கூறியபோது; "சஹாபாக்கள் யூத ,கிறிஸ்தவர்கலையா கூறுகிறீர்கள்!" என கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதர் அதற்கு "வேறு யார்?!" என பதில் கூறினார்கள் .
    (முஸ்லிம் )

    ReplyDelete

Powered by Blogger.