May 03, 2019

இது சக்தி செய்திகள் (தெரிவிப்பது நாங்கள், கூட்டுவது நீங்கள்)

சக்தி செய்திகள்!

"முஸ்லிம் நபர் ஒருவரின் வீட்டிலிருந்து பாரிய ஆயுதங்கள் மீட்ப்பு! 
தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் "

விரிவான செய்திகள்....

பொது மக்கள் குடியிருக்கும் பகுதி ஒன்றிலிருந்து சமையல் வாசனை மற்றும் மீன் அறுக்கும் சத்தங்களை உணர்ந்த பொது மக்கள் பொலிஸ் அதிரடி படையினருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைவாக தளத்துக்கு விரைந்த படையினர் பாரிய ஆயுதங்களை மீட்டனர்.

இதில் DR 54 ரக பெரிய அகப்பை ஒன்றும், சிறிய ரக அகப்பை ஒன்றும், ரொட்டி சுட பயன்படும் ரோலர் ரக உருட்டி ஒன்டும், மீன் வெட்ட பயன்படும் கத்தி ஒன்றும் , மாங்கா, அப்பில், கரட் போன்ற பாரிய பழவகைகளை சீவும் தடை செய்யப்பட்ட சீவுலி ஒன்னும், சிரிய ரக கத்திகள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குஞ்சுமணி தெரிவித்தார்.

மேலும், இவ்வீடு முகம்மட் என்பவருக்கு சொந்தமான வீடாக இருக்கலாம் எனவும், கைப்பற்றப்பட்ட கத்திகள் பாரிய தாக்குதலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், ஏனைய பொருட்கள் தீவிரவாதிகளுக்கு சமைத்துக் கொடுக்க வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக செய்தியாளர் குஞ்சுமணி தெரிவித்தார்.

மேலும் இவ்ஆயுதங்கள் குறித்து நாம் ஏற்க்கனவே அறிந்திருந்ததாக இந்திய உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். இவ் ஆயுதங்கள் அனைத்தும் பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாகவும், மாவுருட்டும் ரோலர் மாத்திரம் அவுஸ்ரெலியாவில் தயாரிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

தெரிவிப்பது நாங்கள், 
......... கூட்டுவது நீங்கள்

சக்தி செய்திகளுக்காக குஞ்சுமணி..

- வட்சப்பில் வந்தது -

16 கருத்துரைகள்:

இதுதான் இப்போ நிலமை

Mappilla kootrathula shakthi a adichuka aale illa vesai oodaham

Let us laugh for some time after big depression of this disaster

சக்தி

கொட்டுவது நாங்கள் ..
கூட்டுவது நீங்கள். . சக்தி ஊடகவியலாளர்கள் வெளியே சென்று உன்மை செய்திகளை சேகரிக்குற இல்லை போல விளங்குது.

இப்படி இவங்க நியுஸ் சொல்ரத விட்டு போட்டு
தெருவில் உட்கார்ந்து ஜோசியம் சொல்லி பிழைக்க முடியும்!

இலங்கையின் முன்னனி ஊடக விபச்சார நிறுவனம்

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த இனவாத வெறி கொண்ட சக்தி டீவிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த முன்வரவேண்டும்

One correction - mohamed Ibrahim mohamed osman mohamed fawas mohamed inham என்பவரின் வீடு

SAKTHI TV NEWS OMITTING ALL IN NEWS

Editor Sir, Jafna Muslim: எத்தனையோ உங்களது வாசகர்கள் எவ்வளவோ மனச் சுமைகளை தாங்கிக் கொண்டு இத்தளத்திற்கு வருகின்றார்கள். தயவுசெய்து “மிக” அடிக்கடி இப்படியான நகைப்பூட்டும் செய்திகளை வெளியிட பெரு முயற்சி செய்யுங்கள். Serious ஆகத்தான் சொல்கின்றேன். - நல்ல பேருங்க குஞ்சுமணி!

you showing your face by this cheapest Updates,

This comment has been removed by the author.

Therivippathu nangal kuttuvathu neengal.... sarithaanae

உண்மையான போக்கு, இந்த ஆக்கத்தை எழுதிய, பிரசுரித்த அனைவருக்கும் நன்றி.

Not only sakthi TV programmes but we need to boycott whatever advertising in sakthi TV

Post a comment