Header Ads



ஞானசாரருக்கான மன்னிப்பும், விடுதலையும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பொதுபல சேனாவின்  ஞானசார தேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளது.

ஞானசார தேரரிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஜனாதிபதியும் அரசாங்கமும் இது குறித்து பதில் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிபிழைத்த தருணங்களில் அதனை சரிசெய்வதற்காகவே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு பயன்படுத்தப்படுகின்றது அதனை  மிகுந்த அவதானத்துடன் எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஞானசார தேரரிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை இதன் அடிப்படையிலேயே  இடம்பெற்ற உரிய பொருத்தமான நடவடிக்கை  என எந்த அடிப்படையிலும் தெரிவிக்க முடியாது எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பொதுமன்னிப்பு பல பாரதூரமான கரிசனைகளை எழுப்புகின்றது என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் நீதிமன்றத்தை அவமதித்த பின்னர்  அதற்கான தண்டனை பெற்ற பின்னர் அரசியல் காரணங்களிற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு மூலம் தண்டனையின் பிடியிலிருந்து விடுதலையாகலாம் என்ற கருத்தை இது சட்டபூர்வமானதாக்குகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு, பௌத்த மதகுருமார் போன்ற சில பிரிவை சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படும் விடயத்தில் விசேடசலுகைகளை அனுபவிக்கலாம் என செய்தியை தெரிவிக்கின்றது எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது

மேலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி தண்டிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியும் அரசாங்கமும் விரும்பினால் விடுதலையாகலாம் என்ற பிழையான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றது எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Now these people will start to do all kind of malfuntions based on this concept, president will back up them even they voilate the rule

    ReplyDelete

Powered by Blogger.