Header Ads



மைத்திரி - ரணில் கருத்து முரண்பாடுகள் உக்கிரம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடகவியலாளர் முன்னிலையில் விசாரணை நடத்திய விவகாரம் கடும் முரண்பாட்டு நிலையை தோற்றுவித்துள்ளது.

விசாரணைகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதனால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் விசாரணை நடத்திய அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் நடத்தப்பட்ட முறைமை குறித்து ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணிலிடம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் இந்த விசாரணைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.