May 28, 2019

“முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” என கூறியதன் நோக்கம் என்ன...?

ஆளும் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சினைகளையும் தமிழர் பிரச்சனைகளையும் ஒன்றாக இணைத்துவிட கங்கணம் கட்டி ஒருமித்து செயற்படுவது போல் தெரிகிறது.

அதன் வெளிப்பாடாகவே நேற்றைய தினம் அமைச்சர் ராஜித சேனாரட்ன “முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” என கூறியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் மற்றும் பாரம்பரிய முஸ்லிம்கள் அண்மையில் இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதலும் அதன் பின்னணியில் இருப்போரையும் தமிழர் போராட்டத்தினுடனோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினோடோ ஒப்பிட முடியாது என்கிறார்கள். 

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு ஒரு நியாயம் அல்லது தேவை இருந்தது.ஆனால்  இவர்களுக்கு அவ்வாறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை வெறுமனவே ஒரு சிறந்த கொள்கைகள் உடைய மதத்தின் பெயரை பயன்படுத்தி அப்பாவிகளை கொன்றிருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்.

ஆனால் இக்காலத்தில் ஆளும் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சினைகளையும் தமிழர் பிரச்சனைகளையும் ஒன்றாக கோர்த்துவிட கங்கணம் கட்டி ஒருமித்து செயற்படுவது போல் தெரிகிறது.

நேற்று ராஜித்த அவர்கள் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம் என்கிறார்.ராஜித்த அவர்களே நீங்கள் வாக்குகளை முஸ்லிம் மக்களிடம் வாங்குவதற்காவும் தேவைக்கு உங்கள் வருவாயை பெருக்குவதற்காகவும் தமிழர்கள் பிரச்சனையை இங்கு கோர்க்க வேண்டாம். 

1983 ஆண்டு அமிர்தலிங்கம் அவர்களும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் இன்று இந்தப் படுகொலை தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களை வெளியேற்ற கோருவதற்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?? இங்கு உங்களுடைய உள் நோக்கம் என்ன?

அமைச்சர் ரவிகருணாயக்க அவர்களே, இப்பொழுது தான் உங்களுக்கு தெரிகின்றதா தமிழ் மக்கள் அன்று சந்தேக கண்கொண்டு பார்க்கப்பட்டார்கள் என? ஏன் அப்போது இந்த வார்த்தைகள் உங்களுக்கு வரவில்லையா? 

இப்பொழுது ஏன் இந்த பிரச்சனையோடு தமிழ் மக்களை சந்தேக கண்கொண்டு பார்த்தது போல் முஸ்லிம் மக்களை பார்க்க வேண்டாம் என தமிழரை இதனுள் கோர்த்துவிடுகிறீர்கள்? இன்றுள்ள பிரச்சனையை மாத்திரம் பேசுங்கள். தயவுசெய்து ஏதோ நல்லது சொல்வதுபோல் இந்த குண்டுத் தாக்குதலிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழரை மேலும் நோகடிக்காதீர்கள்.

இப்படி கூறிய உங்களுக்கு இந்த குண்டுத் தாக்குதலிலும் மீண்டும் மீண்டும் தமிழர் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களை பாதுகாப்போம் என்று ஏன் உங்களால் கூற முடியவில்லை?

இன்று நாட்டில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கபட வேண்டும் என முஸ்லிம் தரப்பில் இருந்தே பலமான குரல்கள் வருகின்றன. ஆனால் இந்த வேளையில் உங்களுடைய இந்த செயற்பாடுகள் தீவிரவாதிகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் தான் தீனி போடுகின்றது.

ஆனால் நிச்சயமாக சமாதானத்தினை விரும்புகின்ற முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் அபிமானத்தினை உங்கள் இப்படியான செயற்பாடுகளால் பெறமுடியாது. தமிழர்களை மாற்றார் தாய் பிளைகளாகவும் கருவேப்பிலையாகவும் பார்ப்பதை நிறுத்துங்கள்.

இப்பொழுது இந்த அரசாங்கத்திற்கு தேவை ஆட்சி கலையாமல் இருக்க வேண்டும் அதற்கு தீவிரவாதிகளின் கைக் கூலிகளையும் பாதுகாக்க எந்த அளவிற்கும் செல்ல முடியும் அவ்வளவு தான். அதற்காக தமிழர் பிரச்சினையை உங்கள் ஊழல் வேலைக்கு விறகாக பயன்படுத்த வேண்டாம் என்று கோருகிறோம் என தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

உங்கள் மக்களுக்கு கொடுக்கும் கடின வேலைக்கு இன்னும் 1000 சம்பளம் இல்லை.அதை போய் பாரும்.எப்ப பார்த்தாலும் Muslim Muslim என மயிர் பிடுங்காமல்.உனக்கெல்லாம் எந்த வேல வெட்டி இல்லையா?

இந்த தோட்ட காட்டான் சமீப காலமாக முஸ்லிம்களிடம் வாங்கி பருகுவதன் மர்மம் என்னவென்று தேடி பார்த்தால். பின்னாலிருந்து மனோ கணேசன் பேச சொல்கிறான் என்று ஒரு அன்பர் கூறினார்

அமைச்சர்கள் கூறியதையே பட்டறிதல் என படித்தவர்கள் சொல்லுவார்கள். சிலருக்கு பட்டறியும் சக்தியும் இல்லை. இவர்களுக்கு சமகாலத்திற்கு வர நீண்டகாலம் எடுக்கும். அதுவரையில் பொறுமை காத்து கேட்டுக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.

Post a Comment