May 30, 2019

முஸ்லிம் பேரினவாதிகளை முஸ்லிம் வாக்குகளுக்காக, காப்பாற்ற முயலும் ரணில், மைத்திரி வெட்கித் தலைகுனிய வேண்டும்

கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதியின் செயல்பாடுகளையோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கைகளையோ வெளிக்கொண்டுவர முடியாமல் இருந்தேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணசன் தெரிவித்துள்ளார். 

ஆனால் இன்று ஜனாதிபதியின் தவறுகளைப் பற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கை சம்பந்தமாகவும் வெளிப்படையாக பேசுவதறகான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடையும் அதே சந்தரப்பத்தில் வன்னி மாவட்டத்திற்கான எனது அரசியல் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன் எனவும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணசன் தெரிவித்துள்ளார். 

மேலும், கடந்த காலங்களில் எனது சொந்த நிதியின் ஊடாக வன்னி மாவட்ட மக்களுக்கு நான் ஆற்றி சேவையினை தொடர்ந்து அலை அலையாக இளைஞர்களும் பெரியோர்களும் தாய்மார்களும் எனக்கு பாரிய ஆதரவினை வழங்கி வருகின்றார்கள். 

வன்னி மாவட்டத்தில் எனது பாரிய வளர்ச்சியினை பொருக்காத அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தமானும் ஏனைய சில்லறை அரசியல்வாதிகளும் எனது நடவடிக்கைகளுக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி வந்தனர். இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்காளி கட்சி என்ற வகையில் அமைதி காத்து வந்தேன். நான் எனது வன்னி மாவட்ட தமிழ் மக்களுக்கு ஆற்றி வரும் சேவையினை எவராலும் தடுக்க முடியாது. 

கடந்த தேர்தல்களில் வன்னி மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள கூடிய எந்தவொரு சிறந்த தலைமைத்துவமும் இல்லாததால் தான் தமிழ் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க நேர்ந்தது. குண்டு வெடிப்பிற்கு முன்னே இதனை நான் தகர்த்தெரிந்து விட்டேன். 

இருப்பினும் குண்டு வெடிப்புக்குப் பின் வன்னி மாவட்ட தமிழ் மக்கள் மேலும் தெளிவாக சிந்திக்க தொடங்கி விட்டனர். ஆகவே இந்த மாற்று இன அரசியல்வாதிகளுக்கு இனி ஒரு போதும் தமிழ் வாக்குகளை விலைகொடுத்து வாங்க முடியாது. அவர்களுடன் இங்கே இருக்கும் ஓரிரு தமிழ் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் தமிழ் தரகர்களை (Broker)இன்று கிராம மக்கள் அடையாளம் கண்டு துரத்தியடிக்க தயாராக உள்ளனர். தமிழர்களின் வாக்குகள் தமிழர்களுக்கே என்ற கோஷம் இன்று பரவலாக தமிழ் மக்கள் மனங்களிலே வேரூன்றியுள்ளது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயல்பாடுகளினால் அதிருப்தியுற்ற மக்களே மாற்று இனத்தவர்களுக்கு வாக்களித்தனர். இன்று அந்த நிலை மாற்றப்பட்டு வன்னி மாவட்ட மக்களின் கட்சியான எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸிற்கு ஆதரவளிக்க அணி அணியாக திரண்டு வருகின்றனர். 

நான் கிராமங்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் அங்குள்ள தாய்மார்கள் என்னை அவர்களது பிள்ளையாக பார்க்கின்றனர். அங்குள்ள சகோதர சகோதரிகள் என்னை ஒரு சகோதரனாக பார்க்கின்றார்கள். 

முஸ்லிம் பேரினவாதிகளை பயங்கரவாதிகளை அல்லது பயங்கரவாதத்திற்கு துணை போன அரசியல்வாதிகளை முஸ்லிம் வாக்கு வங்கிக்காக காப்பாற்ற முயலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெட்கி தலைகுனிய வேண்டிய காலம் வெகு விரைவில் மலரும். நாம் பலம் மிக்க சக்தியாக உருவெடுத்து வன்னி மாவட்ட மக்களுக்கான நேர்மையானரூபவ் ஊழலற்ற ஒரு அரசியல் தலைமையை உருவாக்குவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணசன் தெரிவித்துள்ளார்.

2 கருத்துரைகள்:

என்ன பிறப்புடா உன் குடும்பம்? அண்ணண் ஒரு பக்கம் தம்பி ஒரு பக்கம் இப்படி அரசியலுக்காக இனவாதத்தை தூக்கிப்பிடிப்பதற்கு பதிலாக கூட்டி கொடுத்து வாழுங்கள் நாய்களே

அண்ணனுக்கு ஆப்படித்த நீர் வெட்கித் தலை குனியும்.சொந்த அண்ணன் என பார்க்காமல் பதவி,பணத்துக்காக துரோகம் செய்த நீங்கள் பேசுவதர்கே தகுதி அற்றவர்.

Post a comment