Header Ads



தற்கொலை தாக்குதல் நடந்த, வீடுகள் சுத்திகரிப்பு


சாய்ந்தமருது வெலிவோரியன் சுனாமி வீடமைப்புத் திட்ட குடியிருப்பு பிரதேசத்தின்பீ/83வது இலக்க வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சாய்ந்தமருது அல்லாத வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலரினால் கடந்த (26) மாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட வீட்டினை கல்முனை மாநகர சபையின் சுகாதார தொழிலாளியினதும் மற்றும் தீ அனைப்பு பிரிவு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதார பரிசோதகர்க ளின் உதவியுடன் இன்று (03) வெள்ளிக்கிழமை காலை  துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்

கடந்த 26ம் திகதி ஏற்பட்ட குண்டு வெடிப்பின் பின்னர் அப்பிரதேசத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்கி வருகின்றனர் அவர்களை மீண்டும் அவ்விடத்திற்கு வரவைத்து மீண்டும் குடியிருப்பு பிரதேசத்தில் மக்களை குடி அமர்த்துவதற்கு முன்னோடியாக சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல், வர்த்தக சங்கம், ஜம்மிய்யத்துல் உலமா சபை, கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது உறுப்பினர்கள், பொதுமக்கள் இணைந்து அப்பிரதேசத்தில் சகல மக்களையும் நாளை (04) சனிக்கிழமை அப்பிரதேசத்தில பொதுவான இடத்தில் சமைத்து அவர்களுக்கான உணவினை வழங்கு வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

யூ.கே.காலித்தீன்




No comments

Powered by Blogger.