Header Ads



இஸ்லாமிய‌ருக்கு இல‌வ‌ச‌ 'அறிவுரைக‌ள்' கூறுபவ‌ர்களின் கவனத்திற்கு

- Kalai Marx -

- அரபி மொழிக்கும், பார்சி மொழிக்கும் வித்தியாச‌ம் தெரியாது.

- அபாய‌வுக்கும், பூர்க்காவுக்கும் வித்தியாச‌ம் தெரியாது.

- ம‌சூதிக்கும், த‌ர்க்காவுக்கும் வித்தியாச‌ம் தெரியாது.

- சுன்னி, ஷியா, அஹ‌ம‌தியா, சூஃபிச‌ம் போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ப் பிரிவுக‌ளுக்கு இடையிலான‌ வித்தியாச‌ம் தெரியாது.

அதே மாதிரி....

- குரானுக்கும், பைபிளுக்குமான‌ ஒற்றுமை தெரியாது.

- (இஸ்லாமிய‌) ஹ‌லாலுக்கும், (யூத‌) கோஷ‌ருக்கும் இடையிலான‌ ஒற்றுமை தெரியாது.

- இஸ்லாமிய‌ரின் ர‌ம‌ழான் நோன்புக்கும், க‌த்தோலிக்க‌ரின் கார்னிவ‌ல் விர‌த‌த்திற்கும் உள்ள‌ ஒற்றுமை தெரியாது. 

- இஸ்லாமிய- ஷரியா ச‌ட்ட‌த்திற்கும், கிறிஸ்த‌வ‌- ஐரோப்பிய‌ ச‌ட்ட‌த்திற்கும் இடையிலான‌ ஒற்றுமை தெரியாது.

இன்னும்....

- இஸ்லாமிய பொருளாதாரத்திற்கும், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றித் தெரியாது.

- இஸ்லாமியரின் கடமைகளில் ஒன்றான "ஸகாட்" (Zakat) எனும் ஏழைகள் நலன்களுக்கான வரி அறவிடுதலுக்கும், மேற்கு ஐரோப்பாவில் உள்ள "நலன்புரி" அரசமைப்புக்கும் (Welfare state) இடையிலான தொடர்பு பற்றி எதுவும் தெரியாது.

இப்ப‌டிப் பல‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளைக் கூட‌ அறிந்து கொள்ளாம‌ல், தாம் அரைகுறைவாக தெரிந்து கொண்டதை அல்லது பிழையாக‌ புரிந்து கொண்ட‌தை உண்மை என்று ந‌ம்பும் ப‌ல‌ர் உண்டு. 

ப‌டிக்காத‌ பாம‌ர‌ர் முத‌ல் மெத்த‌ப் ப‌டித்த‌ ப‌ட்ட‌தாரிக‌ள் வ‌ரை இந்த‌ அறியாமை நில‌வுகின்ற‌து. பிர‌ப‌ல‌மான‌ வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளும் இத‌ற்கு விதிவில‌க்க‌ல்ல‌.

1 comment:

  1. இறுதியில் எல்லாம் ஒன்று தான் சும்மா அடித்துக் கொள்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.