Header Ads



வன்முறைகளுக்கு முன், முஸ்லிம் பகுதிகளில் சுற்றித்திரிந்த அமித் வீரசிங்க - விசாரணைகளில் அம்பலம்

வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் குறித்து கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். 

பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயம்,  அவசரகால சட்டத்தின்  33 (ஈ) பிரிவின் கீழ்  அமித் வீரசிங்க குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக,  சிறப்பு பொலிஸ் குழுவின் விசாரணை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  அஜித் குமார நீதிமன்றுக்கு  இன்று அறிவித்த நிலையிலேயே, அது தொடர்பிலான சாட்சி சுருக்கத்தினை மன்றில் சமர்ப்பிப்பதற்காக  நாளை வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் வட மேல் மாகாணத்தில், குருணாகல், நிக்கவரட்டிய, குளியாபிட்டிய  மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களுக்குட்பட்ட  பகுதிகளில்  வன்முறைகள்  கடந்த 13 ஆம் திகதி பதிவான நிலையில்,  அந்த திகதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் அமித் வீரசிங்க குளியாபிட்டிய பொலிஸ் வலயத்தின் ஹெட்டிபொலை பகுதியிலும், நிக்கவரட்டி பொலிஸ் வலயத்தின் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் சுற்றித்திரிந்துள்ளமை அவரது தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் இன்று -28- நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

அத்துடன் அமித் வீரசிங்கவின் மஹசொஹொன் பலகாய அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும்  ஹெட்டிபொலை பகுதியைச் சேர்ந்த கலமுதுவே சுசீம தேரர் எனும் பிக்குவை தற்போது தேடி வருவதாகவும், வன்முறைகளின் பின்னர் அவரும் பிரதேசத்தை விட்டு தலைமறைவகையுள்ளதாகவும் இதன்போது  பொலிஸார் நீதிவனைன் கவனத்துக்கு கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)

2 comments:

  1. Why this Terror Amith Was not arrested by using Emergency Law??
    Is is Because of He is Sinhala Buddhist??
    Double side Racist Game .. Shame on you all...

    ReplyDelete
  2. why don't they arrested under emergency order? their barbarism invisible????

    ReplyDelete

Powered by Blogger.