Header Ads



சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய, முனாஜித் மௌலவி விமான நிலையத்தில் கைது

ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மௌலவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றைய -11- தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் - முதலியாகுளத்தில் வசித்து வரும் முனாஜிப் மௌலவி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த முனாஜிப் மௌளவி கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மௌலவி சவுதி அரேபியாவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்அவரை முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. This is too much and we do not need it.

    ReplyDelete
  2. இலங்கையின் சமூக நல்லிணக்கத்துக்கு இஸ்லாம் மத உபன்னியாசம் செய்வோருக்கு நாவடக்கமும் பொது அறிவும் அவசியமாகிறது. உபன்னியாசங்களில் மாற்று மதத்தவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறை பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். அவர்கள் மதிப்புக் கொடுத்து செய்யும் கருமங்களுக்கு அமைதி காத்து மரியாதை செய்ய வேண்டும் சிரித்துக் கொண்டும் அளவளாவிக்கொண்டும் இருப்பது அலட்சியம் செய்வது போன்றாகிவடும்.
    எல்லா விடயங்களிலும் மாற்று மதத்தவர்களுக்கு மாற்றமாக இருக்க வேண்டும் பெண்கள் சொல்வதற்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்பன போன்ற பிற்போக்கு வாதம் இன்னும் சில மார்க்க உபன்னியாசம் செய்வோரிடம் காணப்படுகிறது. மேற்படி விஷயங்கள் எந்த சந்தர்ப்பத்தில் என்ன விடயத்துக்காகச் சொல்லப்பட்டது என்ற மட்டுடன் நின்று கொள்ள வேண்டும். இல்லையென்றால் முஸ்லிம்கள் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் நசுக்கப்படும் நிலை தோன்றியே ஆகும்.

    ReplyDelete
  3. Need to put him behind bar for the rest of his life

    ReplyDelete

Powered by Blogger.