Header Ads



"முஸ்லிம் சமூகத்தில் இப்படி ஒரு குழு, இனி உருவாகமல் இருக்க முயற்சிக்க வேண்டும்"

தம்மை தேசப்பற்றாளர்கள் என்று நீருபிக்க 
இலங்கை முஸ்லிம் சமூகம் அதிகம்
அக்கறை காட்டுவதை அவதானிக்க முடிகிறது.
// சிங்களவர்களை ஓவராக புகழ்ந்து தள்ளுவது//
// முஸ்லிம்கள் செய்யும் சின்ன சின்ன
நலவுகளையெல்லாம் பெரிது படுத்திக்காட்டுவது//
//ஆமிக்காரர்களின் லொரியை முஸ்லிம்கள் தள்ளிக்கொடுப்பதை எல்லாம் செய்தியாக
வெளியிடுவது//
//முஸ்லிம்கள் எல்லோரும் தீவரவாதிகள் அல்ல 
என்று கட்டுரை எழுதுவது//
//முஸ்லிம்களுக்கு சார்பாக பேசும் வீடீயோக்கள்,
செய்திகளை முந்தியடித்து கொண்டு ஷெயார் செய்வது//
இப்படி தன்னைத்தானே சொறிந்து கொள்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான சில விடயங்களை 
செய்ய முஸ்லிம்கள் முன்வரவேண்டும்.
பள்ளிகளின் ஆயுதங்கள் கைப்பற்றபட்டால் அல்லது அப்படியான பொய்யான செய்திகள் பரப்பப் பட்டால் அந்த ஆயுதங்களின், செய்திகளின் பின்னனியை கண்டுபிடித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
தீவிரவாத நோக்கத்துக்காக யாரும் பள்ளிகளை
பயன்படுத்தி இருந்தால் அவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும்.
இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பாதுகாப்பு,
அதன் பயன்பாடு போன்றவற்றில் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் தீவிர சிந்தனை 
உள்ள இளைஞர்கள், மெளலவிகள், இயக்கங்கள் அதன் செயற்பாடுகள் குறித்து மிக மிக அவதனாமக இருக்க வேண்டும்.
எங்களது வீட்டில் இருப்பவர்கள்,பக்கத்து வீட்டில் 
இருப்பவர்கள் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் எப்படியான சிந்தனைப் போக்கை
உடையவர்கள், எதை வாசிக்கிறார்கள், எதைக் கேட்கிறார்கள் என்பது மாதிரியான விடயங்களில்
கவனமாக இருக்க வேண்டும்.
இது ஒரு தீவிரப்போக்குடைய முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்த ஒரு செயல். 
இப்படியான சிந்தனை உள்ள ஒரு சிறு குழுவேனும் முஸ்லிம் சமூகத்தில் உருவாகமல்
இருக்க முயற்சிகள் செய்ய வேண்டும் 
அந்த முயற்சிகளை ஏனைய சமூகங்களும்
புரிந்துகொண்டு விளங்கும்படியாக செய்ய வேண்டும்.
நமது வட்டத்தில் "சியாரத்த" உடைக்கனும்,
"ஜிஹாத்" செய்யனும் என்று அரப்படிச்ச கேசுகள் இருந்தா இப்பொழுதே அவர்களுடன் பேசி அவர்களுக்கு நிதானமாக சிந்திக்கூடிய, 
வாழ்க்கையை, மார்க்கத்தை, நாட்டு சூழலை, சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
"இது ஒரு சிறிய குழு செய்த வேலை அல்ல"
முழு முஸ்லிம் சமூகமுமே இப்படியானவர்கள்தான்
என்று நிறுவுவதற்கு சில இனவாத சிங்கள, தமிழ் ஊடகங்கள் பெறும் பிரயத்தனம் எடுப்பதை
அவதானிக்க முடிகிறது.
அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நாங்களும் பொய்ன்ஸ் கொடுக்காமல் இனியேனும் எம்மைச் சுற்றி நடக்கும் விடயங்கள் குறித்து விளிப்பாக இருப்போம்.

Safwan Basheer

1 comment:

  1. We should understand the facts that is all radical groups within Muslims qaeda ,Taliban,Shabab, Bokoharam or any other groups emerged from one one ideology that is Wahhabism,So it is our duty to eradicate and remove this mentality from our community.

    ReplyDelete

Powered by Blogger.