Header Ads



ஞாசாரர் தனது தாயார் சகிதம், ஜனாதிபதியுடன் சந்திப்பு


கலபொட அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். 

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

3 comments:

  1. ஒரு தேரரும் உலமாவைப் போன்றவர்தான். சகல மதங்களும் அன்பு, சகவாழ்வு, காருண்யம் மற்றும் நம்பிக்கையுடன் வாழ்தல் போன்ற நற்குணங்களைத்தான் கற்பிக்கின்றன. முஸ்லிம்களாகிய நாங்கள் மத குருமார்களுக்கு மிகுந்த மரியாதையையும் கண்ணியத்தையும் வழங்குகின்றோம். சகல மதகுருமார்களும் ஒன்றிணைந்து நாட்டின் கண்ணியத்தையும் மக்களின் சக வாழ்வினையும் மேம்படுத்துவதற்காக உழைத்தால் இலங்;கையைப் போன்ற நாடு வேறெங்கும் இருக்க முடியாது. பிரச்சினை என்னவென்றால் இந்நாட்டில் வாழும் எவரும் எமது நாட்டின் வளங்களைப் பேணி நாட்டை உயிர்ப்பிக்க விரும்புவதே இல்லை. எமது நதாட்’டின் துர்ப்பாக்கியம் சகலவற்றிற்குள்ளும் அரசியலே மிகுந்து காணப்படுகின்றது. எம்மிடையே காணப்படும் பிளவுகளுக்கு இதுவே காரணியாகும்.

    ReplyDelete
  2. இனி சிங்க வேட்டைதான் 😅😅😅😅😂

    ReplyDelete
  3. இவன பேதத்துக்கு ஒரு நாய வழக்க இருந்துச்சு

    ReplyDelete

Powered by Blogger.