May 24, 2019

'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி

மனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை உருவாக்கும் என்பது தொடர்பில் எச்சரிக்கிறேன்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம்கள் ஷாபி மற்றும் ஹனபி மத்ஹப் ஆகியவற்றை பின்பற்றி வந்தவர்கள் என்பதை அவர் நன்கு அறிவார் என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டமாகிய முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் இந்த மத்ஹப்களை அடிப்படையாக வைத்தே அன்றைய உலமாக்களாலும் சட்டத்தரணிகளாலும் வரையப்பட்டது.

அலி சப்ரி கலந்து கொண்ட நேர்காணல் இலங்கை முஸ்லிம்களின் உடை நடை பாவனை மற்றும் உப கலாசார ( Sub culture) பாரம்பரியம் தொடர்பில் பல விடயங்களை பேசிய போதிலும் யாதேனும் ஒரு மத்ஹபை பின்பற்றுவது என்பதும் இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியத்துடன் ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்தது என்பதை அவருக்கு இத்தால் அறியத்தருகிறேன்.

Judicial Precedent என்று அழைக்கப்படும் முத்தீர்ப்புக் கோட்பாடு பற்றி குறித்த சட்டத்தரணி நன்கு அறிவார்.

பலதசாப்தகாலங்களுக்கு முந்திய வழக்குகளுக்கு காலம் சென்ற நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை அதுபோன்ற நிகழ்வுகளை கொண்ட இன்றைய வழக்குகளுக்கும் பிரயோகிக்கலாம் என்பதே முத்தீர்ப்புக் கோட்பாடு பற்றிய எளிய விளக்கம்.

அது போன்ற பிரயோகமுறைமையை வழங்குவதே மத்ஹப்களின் மரபு. அவற்றை பின்பற்றுவது நமது பாரம்பரிய முஸ்லிம்களின் உலமாக்களின் பண்புசார் ஒழுக்கம்.

குர்ஆனும் ஹதீஸூம் மாத்திரம்தான் இஸ்லாம் என்று கூறுவது இஸலாத்தின் ஆய்வு முறைமையை அதன் தொன்மத்தை மறுதலிப்பதாகும். அத்தகைய குதர்க்கங்கள்தான் அடிப்படைவாதத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்தன என்பதை அடிப்படை வாதத்தை எதிர்கும் சட்டத்தரணி அலி சப்றி புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் அடிப்படை வாதம் இஸ்லாமிய இயக்கங்களால் மாத்திரமல்ல மதசார்பற்ற ( Secular Education) கல்வி முறையாலும் தோற்றுவிக்கப்படுகன்றன என்பதற்கு சட்டத்தரணி அலி சப்றியின் வாதமும் ஒரு சான்று.

இலங்கை ஆடை மரபுக்குள் முஸ்லிம்களின் பாரம்பரிய ஆடை என்பது எப்படி Sub Culture என்று அவர் கூறுகின்றாரோ அதே போல் இஸலாமிய கல்வி முறையில் மத்ஹப்களை கற்பதும் பின்பற்றுவதும் Sub culture தான்.

இவர் போன்ற சட்டத்தரணிகள் மேற்குலகின் குளிர்ச் சூழலின் கலாசாரமான கோட் ,சூட் , டை ஆகியவற்றை அணிவது எத்தகைய Sub Culture என்பது தொடர்பில் ஒரு சர்ச்சையை தொடர்வது எப்படி ஆரோக்கியமில்லையோ அவ்வாறானதுதான் "ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல " எனும் வாதமும் ஆரோக்கியமல்ல என்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக முன் வைக்க முயல்கின்றேன்.

இலங்கையின் சிவில் நடை முறைக் கோவை ஒரு சட்டமாக இருந்தாலும் முக்கிய வழக்குகளை தொகுத்து ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ எழுதிய நூல் சிவில் சட்டத்தரணிகளுக்கு மிகவும் உபயோகமானது. இன்னும் பின்னர் வந்த ஓய்வு பெற்ற நீதிபதி U.L.A.மஜீத் அவர்கள் எழுதிய முக்கிய குறிப்புகளுடன் கூடிய வழக்குகளை கோர்த்த சிவில் நடை முறை தொடர்பான நூல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோல் எல்லா விதமான துறை களிலும் உண்டு.

அது போன்றதே இஸ்லாத்தில் மத்ஹப்களும் குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றை மூலாதாரமாக கொண்டு அறிவும் ஞானமும் காெண்ட இமாம்களால் தொகுக்கப்பட்டவை.

இவை தொடர்பில் கவனம் செலுத்தாமல் கண்டனம் தெரிவிக்காமல் அகில இலங்கை உலமா சபையும் அதன் தலைவர் றிஸ்வி முப்தி அவர்களும் இருப்பார்களேயானால் அது கள்ள மௌனமே அன்றி வேறில்லை.

பிரித்தானியர் காலனித்துவ காலத்தில் மதசார்பற்ற கல்வி முறைமையை பாடசாலைகளில் தோற்றுவித்த போது அன்றைய நமது முஸ்லிம் உலமாக்கள் அத்தகைய கல்வி முறைமையை எதிரத்ததற்கான காரணம் மார்க்க ஞானம் இன்றி இவ்வாறு பலர் தேன்றுவார்கள் என்ற அச்சம்தான் என்பதை பற்றியும் சிந்திப்போமாக!

சட்டத்தரணி மர்சூம் மௌலானா

9 கருத்துரைகள்:

நாடு எங்கும் கலவரமாய் இருக்கு. ஊரே எரியுது. எரியிற வீட்டுக்குள் இருந்து பின்கதவால ஓடிறதா முன்கதவால ஓடிறதாசரி என யாரோ சண்டை போடிற சத்தம் கேக்குது. கூரை பத்தி எரியுது என்று யாராவது சொல்லுங்க மக்கா.

Correct, he and the other lady who appeared in that TV interview are unaware of the religious conceptions and injunctions, being a lawyer does not meal that he can interpret Islam the way he thinks. Our masses aldo think a lawyer knows everything,

அய்யோ இனியாவது இப்படியான விடயங்கலை விடுங்கள்.அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.யார் யார் எவ்வாறு அவனை வணங்குகிறார்கள் என்பதை அவன் அறிவான்.அல்லாஹ் அதை பார்த்துக் கொள்வான்.தயவு செய்து இனியாவது சிறு சிறு விடயங்கலை பகிரங்கமாக்கி அடுத்த சமூகத்துக்கு எம்மை காட்டிக் கொடுத்தது போதும்.நிறுத்துங்கள்

This Marsoon Moulana must read Islamic legal philosophy and its application in minority contexts. All what Ali Sabri said are right and nothing wrong. This four school legal thoughts are their own interpretation: not all of these ideas are viable today. Nothing wrong in choosing most viable legal ideas from these 4 schools or any other school. Well done Ali Sabri..Mr Moulana read Islamic legal history once again.

பாரம்பரிய முஸ்லிம் என்று வருகிற வார்த்தைகள் முற்றாக தடை செய்ய வேண்டும். ஜப்னா முஸ்லிம் இத்தகைய வார்த்தை பிரயோகங்களை சுமந்து வரும் கட்டுரைகளை புறக்கணிக்க வேண்டும். இது சுன்னி ஷீஆ போன்று, இலங்கை முஸ்லிம்களை இரண்டாகப் பிரித்து அவர்களுக்குல் பிரிவினையையும், சண்டையையும் உண்டாக்குவதற்கான ஏற்பாடு என்றே கருதுகிறேன்.

Dear Brother Marsum Moulana,
மத்ஹபுக்கள் என்பவை ஒவ்வொரு இமாம்களினதும் வழிகாட்டுதல்களாகும். ஆனால், அவ்வழிகாட்டுதல்களுக்கு இமாம்கள் எடுத்துக்கொண்ட அடிப்படைகள் குர் ஆனும் ஹதீஸும்தான். எனவே, குர் ஆனையும் ஹதீஸையும் கொண்டு, இஜ்மா, கியாஸ் என்ற ஏனைய சட்ட மூலாதரங்களுடன், முறைப்படி ஆராய்ந்து வழங்கப்பட்டவைதான் அவ்வழிகாட்டுதல்கள் எனப்படும் மத்ஹபுக்கள்.
எனவே, அடிப்படை என்பது குர் ஆனும் ஹதீஸும்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால், எல்லா இமாம்களினதும் அடிப்படை ஒரே குர் ஆனும் ஒரே ஹதீஸும் என்றால், மத்ஹபுக்களுக்குள் சில வித்தியாசமான தீர்ப்புகள் எங்கிருந்து வந்தன என்று கேட்கலாம். அதற்கான பிரதானமான காரணம், :அக்காலத்தில், இன்றுள்ளது போல், ஹதீஸ்களெல்லம் முற்று முழுதாக எல்லா இமாம்களுக்கும் கிடைத்திருக்ககவில்லை. எனவே கிடைத்த ஹதீஸ்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு இமாமும் தீர்ப்புக்கள் வழங்கினார்கள்.
மேலும், எல்லா இமாம்களும் சாதாரணமானவர்களல்ல. அறிவிலும் மார்க்க ஞானத்திலும் மிகச்சிறந்தவர்கள். அவர்களுக்குக் கிடைத்தவற்றைவிட மேலும் ஏராளமான ஹதீஸ்கள் எதிர்காலத்தில் திரட்டப்படலாம் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது, எனவேதான், அந்த நான்கு இமாம்களும், “எந்த ஹதீஸும் எனது தீர்ப்புக்கு மாறுபடுமானால், எனது தீர்ப்பை புறந்தள்ளிவிடுங்கள்” என்று பொறுப்போடு கூறிச்சென்றுள்ளார்கள்.
எனவே, குர் ஆனும் ஹதீஸும்தான் அடிப்படை என்று நான்கு இமாம்களும் கூறிச் சென்றிருக்கும்போது, நாம் ஏன் அடித்துக்கொள்ளவேண்டும்? Further, all the FOUR IMAMS have clearly ruled out that there is no place for Judicial Precedent in Islamic Ruling! We always get back to the Quran and Hathees!

முஸ்லிம்கள் பாரம்பரிய முஸ்லிம்கள் இடைக்கால முஸ்லிம்கள் என்று ஒன்று இல்லை முஸ்லிம் என்றால் ஒரே கொள்கைதான்

அவர் சொல்ல வரும் கருத்தை சரியாகவிளங்க முற்படுவது பொருத்தமாகும். குறுகிய வட்டம்விளக்கங்களுக்குள் சுருண்டு கொள்ளாமல் விளங்க முற்பட வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி கூறும் எல்லாக்கருத்தும் சரியெனச்சொல்லவில்லை. ஆனால் இஸ்லாம் எல்லாக்காலத்துக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடியது. எனவே கால சூழல் மாற்றங்களுக்கு நெகிழும் தன்மையுடையதே இஸ்லாம். ஆனால் ஆனால் அடிப்படை அம்சங்கள் இறுதி நாள்வரை மாறவோ மாற்றவோ முடியாதவை. ஆனால் கிளை விஷயங்கள் இறுக்கமற்றவை. அதாவது இஸ்லாத்தின் தூதை எடுத்துச் சொல்லும் அதே முறையில் ஜுப்பாவைஎல்லா இடத்துக்கும் கட்டாயப் படுத்தல் அறிவுடைமையல்ல.

அவர் சொல்ல வரும் கருத்தை சரியாகவிளங்க முற்படுவது பொருத்தமாகும். குறுகிய வட்டம்விளக்கங்களுக்குள் சுருண்டு கொள்ளாமல் விளங்க முற்பட வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி கூறும் எல்லாக்கருத்தும் சரியெனச்சொல்லவில்லை. ஆனால் இஸ்லாம் எல்லாக்காலத்துக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடியது. எனவே கால சூழல் மாற்றங்களுக்கு நெகிழும் தன்மையுடையதே இஸ்லாம். ஆனால் ஆனால் அடிப்படை அம்சங்கள் இறுதி நாள்வரை மாறவோ மாற்றவோ முடியாதவை. ஆனால் கிளை விஷயங்கள் இறுக்கமற்றவை. அதாவது இஸ்லாத்தின் தூதை எடுத்துச் சொல்லும் அதே முறையில் ஜுப்பாவைஎல்லா இடத்துக்கும் கட்டாயப் படுத்தல் அறிவுடைமையல்ல.

Post a comment