Header Ads



முஸ்லிம்களே இங்கு நாம் சொல்வதை கேட்டு வாழுங்கள், அல்லது சென்று விடுங்கள் என பேசும் இனவாதிகளே

இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அரேபியரின் வம்சாவளியினர் என்பது திரிபுபடுத்தப்பட்ட வரலாறாகும்!

கடல்வழி வர்த்தகத்துடன் தென்னிந்திய இலங்கை கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மற்றும் மலையாளம் பேசும் சுவனர்களுடன் அரேபிய வர்த்தகர்களுக்கு இஸ்லாத்திற்கு முன்பிருந்தே தொடர்பு இருந்திருக்கிறது.

அரேபியர்கள் மூலம் இஸ்லாம் இந்தப் பகுதிகளில் பரவ ஆரம்பித்திருக்கிறது, மாறாக இலங்கை வந்த அரேபியர்கள் சிங்கள தாய்மாரை திருமணம் செய்ததால் தான் இலங்கை சோனகர் தோற்றம் பெற்றனர் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்குமான வரலாறு அல்ல, அது ஒரு சிறு பகுதியினருக்கு மாத்திரமே பொருந்தும்.

அவ்வாறு சிங்களத் தாய்மார்களுக்கும அரபிகளுக்கும் பிறந்தவர்கள் சோனகர்கள் என்றால் தாய்மொழி சிங்கலாமாக அல்லது அரபியாக (தகப்பன் மொழி) இருந்திருக்கும், அதனால் தான் இஸ்லாத்தை ஆரம்பகாலத்தில் அரபுத் தமிழில் முன்னோர்கள் கற்றார்கள்.

வட இந்தியாவில் இருந்து ஆரிய சிங்களவர் இலங்கைக்கு வர முன்னரும் இந்த நாட்டில் தமிழ் பேசும் இந்துக்கள் போல், நாகர்கள் அல்லது சுவனர்கள் எனும் எமது வம்சமும் பூர்வீகம் கொண்டிருக்கிறது.

இந்த திரிபு படுத்தப் பட்ட வரலாற்றை வைத்துக் கொண்டு அரேபியாவில் இருந்து வந்த முஸ்லிம்கள் இங்கு நாம் சொலவதைக் கேட்டு வாழுங்கள் அல்லது அங்கு சென்று விடுங்கள் என்று பேசும் இனவாதிகளும் இருக்கின்றனர்!

2500 வருட பின்புலத்தைக் பௌத்தர்கள் போல் 2019 வருட பின்புலத்தைக் கொண்ட கிறிஸ்தவர்கள் போல், இலங்கை முஸ்லிம்களுக்கும் 1440 வருட இஸ்லாமிய பின்புலம் இருக்கிறதே தவிர, எம் எல்லோருக்கும் இந்த பிராந்தியத்தில் தான் பூர்வீகம் இருக்கிறது என்பதனை எந்தவொரு சமூகமும் மறந்து விடலாகாது!

Inamullah Masihudeen 

3 comments:

  1. இதனை பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முஸ்லிம் பிரதிநிதியும் பேசுவது மட்டுமல்லாது சிங்களவர்களின் காதுகளை துழைக்கள் கூடியவாறு சிங்கள மீடியாக்களில் பிரச்சாரம் செய்யவும் வேண்டும்.

    ReplyDelete
  2. இலங்கையில் உலகின் முதல் மனிதர் நபி ஆதம் (ஸல்) அவர்களின் வருகையோடே முஸ்லிம்களின் வரலாறு இந்த நாட்டில் ஆரம்பம் ஆகிற்று.உலகின் முதல் மனிதர் வந்து காலாடி வைத்த இடமே "பவாத மலை"என்று வரலாறு சொல்லுகின்றன.
    உலக வரலாற்றில் முஸ்லிம்கள் வணிக துறைகளிலும் கடல் சார்ந்த கப்பல் மற்றும் போக்குவரத்து துறைகளிலும் உயர்ந்த அனுபாவம் அக்காலங்களில் கொண்டு இருந்தார்கள் அதன் அடிப்படையில் முஸ்லிமகள் இந்த நாட்டில் கலைப்பிடம் தரிப்பிடங்களாக இருந்தும் சிறு சிறு எண்ணிக்கையாக ஆங்காங்கே வாழ்ந்தும் வந்து இருக்கின்றார்கள் இது முஸ்லிம்களின் வரலாறு அதன் பின்னர் தான் வேற்று மத மக்கள் இந்த நாட்டை வந்து குடியமர்ந்து தங்களின் வரலாற்றை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. Useful article. But whats the purpose in appearing in Tamil media. These should appear in Sinhala papers & media.

    ReplyDelete

Powered by Blogger.