Header Ads



"நாம் இருவர், நமக்கு மூவர்" குடும்ப கட்டுப்பாட்டுச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் - காலியில் சம்பவம்

போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என பௌத்த பிக்குகள் பலரினால் போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்து அப்பிரதேச சபை உறுப்பினர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட போது ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காலி உப பிரதான சங்க சபைத் தலைவர் வீரபானே ஹேமாராம தேரர் உட்பட 14 தேரர்களினால் இந்த யோசனை சபை உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை நேற்று (21) இடம்பெற்ற மாதாந்த சபைக் கூட்டத்தில் முன்வைத்த போதே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய மக்கள் தொகை நில அளவை விடவும் அதிகரித்துள்ளனர். இதனால், நாட்டிலுள்ள சகல இன மக்களும் தமது மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இதற்காக வேண்டிய சட்டமொன்று நாட்டில் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இந்த யோசனையை முன்வைத்துள்ள தேரர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

ஒரு குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனித மற்றும் பொருளாதார ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் இதுபோன்ற தீர்மானங்களுக்கு வந்துள்ளதாகவும் இந்த யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை காலத்தின் தேவையாக கருதி ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எனப் பாராமல் இலங்கை பாராளுமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குறித்த தேரர்கள் அந்தப் பிரேரணையில் நியாயம் கூறியுள்ளதாகவும் இன்றைய தேசிய நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.   

5 comments:

  1. If someone gets more than three children, what will this pradesiya saba do?? This kind of laws exist only in China. I think we have to make a complaint at human rights commission against this saba and stop this nonsense at the beginning itself.

    ReplyDelete
  2. This is not a simple matter. These guys are thinking long term plan. Nowadays Sinhalies are Majority in Sri Lanka and others are less. So if they bring such stupid laws in island wide minority communities cannot reach the majority level at any cause. Stupid laws should be thrown on their face if they bring in the Parliament.

    ReplyDelete
  3. Agree with Mr Saakbish

    ReplyDelete
  4. நாம் இருவர் நமக்கொருவா் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்திய சீன அரசாங்கம் அது தவறு என்று சொல்லுகின்ற நிலை உருவாகியுள்ளது. காரணம் உழைக்கும் வாலிபர்களை விட முதியோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

    ReplyDelete
  5. IRUAR MOOVAR.MUZALIL SHATTAM KONDUWARUPAWARHAL, MATRAWARKALUKKU MUNMAZIRIAHA,SHIZUKAATATTUM.

    ReplyDelete

Powered by Blogger.