Header Ads



கொடூர பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த, முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இலங்கையில் வாழும் அனைத்து இனத்தவரும், மதத்தவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆவது நினைவு நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மத வழிபாட்டில் ஈடுபட்டு, தமது கடவுளின் முன்னால் இருக்கும் போது, கொடூரமான முறையில் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவருக்கும் மோட்சம் கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றேன்.

தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என்பதையிட்டு கவலையடைகின்றேன். நான் பேசுதை புரிந்து கொள்ள கூடிய எவராது இருந்தால், நான் பேசியது சரியா, பிழையா என்பதை பின்னர் கலந்துரையாடுங்கள்.

மட்டக்களப்பு என்பது 30 ஆண்டுகளாக போரில் பாதிக்கப்பட்ட இடம். அந்த போரின் பாதிப்பு நீங்கி 10 ஆண்டுகள் கடந்து செல்லும் முன், எமது நாட்டில் எம்முடன் வாழும் மற்றுமொரு இன மற்றும் மதத்தினால், இந்த கொடூர தாக்குதலை நாம் சந்திக்க நேரிட்டது.

அனைவரும் இலங்கை மக்கள் என்று வாழும் சிறப்புரிமையை பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்த நகரில் எம்முடன் வாழ்ந்த சிலர் பயங்கரவாதிகளாக மாறும் வரை வேடிக்கை பார்த்த தலைவர்கள், ஆட்சியாளர்கள், பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு பிக்குகள் என்ற வகையில் எமது கவலையை தெரிவித்து கொள்கிறோம்.

நாம் இலங்கையில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாயின் பயங்கரவாதிகள் தலை தூக்க இடமளிக்க வேண்டாம் என முப்படையினர் மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

இப்படியான கீழ்த்தரமான கொடூர செயல்கள் நடக்க இடமளிக்க வேண்டாம். இரவு பகலாக இறைவனை வழிபடும் இடத்தில் வாள்களையும், பொல்லுகளையும் வைத்திருப்பது வெட்க கேடானது.

முஸ்லிம் மக்கள் கடந்த காலத்தில் போன்று தொடர்ந்தும் ஒற்றுமையாக வாழ விரும்பினால், உங்களுக்கு தெரிந்த எவராவது பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவராக இருந்தால், அவர் பற்றி பாதுகாப்பு தரப்பினரிடம் அறிவியுங்கள்.

இந்த கொடூர பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த ஏனைய முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முஸ்லிம் சமூகம், இந்த கொடூர பயங்கரவாதிகளை பிடிக்க இடமளிக்காது அவர்களை பாதுகாத்து, முழு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்த இடமளிக்க வேண்டாம்.

நாட்டின் தேசிய ஐக்கியம் இல்லாமல் போனது. நாட்டில் ஆட்சியாளர் இல்லை. உறவுகளை இழந்தவர்கள் துயரத்தில் இருக்கின்றனர். வீதி வீதியாய் அலைக்கின்றனர். நாட்டின் அபிவிருத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

முப்படையினர் மீது குற்றம் சுமத்த எவரும் முன் வர வேண்டாம். எமது புலனாய்வு பிரிவினர் மீது குற்றம் சுமத்த முன்வர வேண்டாம். அவர்கள் தமது கடமையை சரியாக செய்த காரணத்தினாலேயே 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.

போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியான சூழ்நிலையில், இந்த அடிப்படைவாதிகள் எப்படி எழுச்சி பெற்றனர். அரசியல்வாதிகள் வழங்கிய தலைமைத்துவம் காரணமாகவே அடிப்படைவாதிகள் எழுச்சி பெற்றனர்.

எதிர்காலத்தில் இப்படியான நினைவு நாட்கள் நடைபெறக் கூடாது என பிரார்த்திக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. நாங்கள் எப்போதோ காட்டிக் கொடுத்து விட்டோம்,ரானுவத் தளபதி,பிரதமர்,ஜனாதிபதி அனைவரும் பாராட்டியும் விட்டனர்.ஆனால் முதலில் பச்சை பச்சையாய் நீங்கள் இனவாதம் பேசுவதை நிறுத்தினாலே போதும் முக்கால்வாசி பிரச்சினை முடிந்து விடும்

    ReplyDelete
  2. தமிழனை காட்டிக்கொடுத்தோம் , முஸ்லீம்களையும் காட்டிக்கொடுத்து எட்டப்பனின் பக்தனாகிவிட்டோம் .

    ReplyDelete
  3. பிக்கு கோமாவிலா இருந்த நாங்கள் காட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். முதல் பிக்குக்கு தகுதியில்லதவர்களை மகா சங்கம் அடையாம் கண்டு பௌத்த மதத்தின் புனிதத்தை காப்பாந்துங்கள்

    ReplyDelete

Powered by Blogger.