Header Ads



6 வருடத்திற்கு முன், இஸ்லாத்துக்கு வந்தவரின் அனுபவம்


ஒரு மூனு நாளைக்கு முன்னாடி நம்ம கடைக்கு கேம் விளையாட வர்ர பையன் ஒருத்தன் நான் ரிவர்டட் முஸ்லிம்னு கண்டு பிடிச்சிட்டான்.

அன்னிக்கி ஃபுல்லா என்கிட்ட நா எப்படி இஸ்லாத்துக்கு வந்தேன்னு துருவி துருவி விசாரிச்சிட்டே இருந்தான்.

அதுக்கப்ரம் மறுபடியும் இன்னிக்கி கேம் விளையாட கடைக்கு வந்த அவன்.

"அண்ணா நா உங்கள பத்தி எங்கப்பாக்கிட்ட சொன்னேன்"

அப்படின்னு சொன்னான்.

"என்னடா சொன்ன?" னு கேட்டதுக்கு

"நான் இஸ்லாத்துக்கு மாறுனவருனு"சொவ்லிருக்கான்.

"அதுக்கு உங்கப்பா என்னடா சொன்னாரு?"னு கேட்டேன்.

"அந்த அண்ணன ஒரு வாட்டி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா" னு சொன்னாரு.

"எதுக்குடா" னு கேட்டேன்.

"உங்களுக்கு எங்க வீட்ல விருந்து வைக்கனுமாம்" அப்படினு சொன்னான்.

-------------------------------------------------------------------
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் புதிய நபர்களை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மதிப்பதில்லை. கண்ணியப் படுத்துவதில்லை என்றெல்லாம் புலம்பல்ஸ் வருவதை அதிகமாக முகநூல்களில் கண்டிருக்கிறேன்.

ஆனால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அறு வருடங்கள் கடந்தோடி விட்டது. முஸ்லிம்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட கண்ணியமான நிகழ்வுகளை ஐம்பது பக்கம் புத்தகமாகவே தொகுக்கலாம். அவ்வளவு நிகழ்வுகள் இருக்கிறது.

ஒரே ஒரு காரணம் தான்.

நாம் அல்லாஹ்விற்காக இந்த மார்க்கதை ஏற்றுக் கொண்டுள்ளோம். சோ அவனது கட்டளைகளை நம் வாழ்வில் பிரதிபலித்து அந்த ரஹ்மானை கண்ணியப் படுத்தினால். அவன் நம்மை கண்ணியப் படுத்துவான்.

நம் செயல்கள் அனைத்தும் நம் எண்ணங்களை பொருத்தே அமையும்.(நபிமொழி)

அஷ்ரஃப் தேவா

1 comment:

  1. Congrats brother thank you very much take it easy to get everything finely better in future.

    ReplyDelete

Powered by Blogger.