May 06, 2019

விஷேட மூன்­ற­டுக்கு அதி­ரடிப்படை பாது­காப்­புடன், 4 ஆம் மாடியில் மதூஷிடம் விசா­ரணை ஆரம்பம்

தனது மகனின் பிறந்த நாள் களி­யாட்ட  நிகழ்வின் போது ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தாபி 6 நட்­சத்­திர ஹோட்­டலில் வைத்து  கைது செய்­யப்­பட்டு டுபாயில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல பாதாள உலகத் தலை­வனும் சர்­வ­தேச  போதைப்­பொருள் கடத்தல் மன்­ன­னு­மான  மாக்கந்­துரே மதூஷ் என அழைக்­கப்­படும் சம­ர­சிங்க ஆராச்­சி­லாகே மதூஷ் லக்‌­ஷித டுபா­யி­லி­ருந்து நேற்று நாடு கடத்­தப்­பட்­டுள்ளார்.

 நேற்று  அதி­காலை 5 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த யூ.எல்.226 எனும் விமா­னத்தில் மாக்­கந்­துரே மதூஷ் நாடு­க­டத்­தப்­பட்­டி­ருந்தார். விமான நிலை­யத்தில்   குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் அவரைப் பொறுப்­பேற்­ற­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

 ஏற்­க­னவே நேற்று முன்­தினம் இரவு யூ.எல். 226 எனும் விமா­னத்தின் பய­ணிகள் பட்­டியல் கட்­டு­நா­யக்க விமான நிலைய உளவுத் துறைக்கும் சி.ஐ.டி.க்கும் கிடைத்த நிலையில் அதில் மதூஷ் வரு­வது உறுதி செய்­யப்­பட்ட நிலையில், இரா­ஜ­தந்­திர தக­வல்கள் ஊடாக அதனை மேலும் உறுதி செய்து மதூஷை பொறுப்­பேற்க தயா­ராக இருந்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு அவரை இவ்­வாறு தமது பொறுப்பில் எடுத்­துள்­ளது.

கட்­டு­நா­யக்க விமான நிலைய சி.ஐ.டி. பொறுப்பில் எடுக்­கப்­பட்ட அவர் அங்கு சில மணி நேரம் மட்­டுமே தடுத்து வைக்­கப்­பட்ட நிலையில், மூன்­ற­டுக்கு விஷேட அதி­ரடிப் படை பாது­காப்­புடன் நேற்று முற்­பகல் வேளையில் உட­ன­டி­யாக  கொழும்பு கோட்­டையில் உள்ள  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­க­மான 4 ஆம் மாடிக்கு அழைத்து வரப்­பட்டார். 

தற்­போது அவர் அங்கு தடுத்து வைக்­கப்­பட்டு சிறப்பு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், மதூஷின் கணக்கில் உள்ள அனைத்து கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்­தல்கள் தொடர்­பி­லான குற்­றங்கள் தொடர்­பிலும் விசா­ரணை செய்யும் பொறுப்பு முழு­மை­யாக சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

முன்­ன­தாக ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில்  கைது செய்­யப்­பட்ட மாகந்­துரே மதுஷ், இலங்­கையில் தமக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக அந்­நாட்டின் நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்து தன்னை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி­யி­ருந்தார். அதன் தீர்ப்பு எதிர்­வரும் 9 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

எவ்­வா­றா­யினும், மாகந்­துரே மதுஷை நாடு கடத்­து­மாறு இலங்கை அரசின் சார்பில் வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, அந்­நாட்டு அதி­கா­ரி­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அதன்­படி அமீ­ரக அரசு, கொள்கை அளவில் எடுத்த தீர்­மா­னத்தை இடை­யீட்டு மனு­வூ­டாக அந் நாட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்த நிலை­யி­லேயே மதூஷ் இலங்­கைக்கு  நாடு கடத்­தப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 

 2015 ஆம் ஆண்டு மாகந்­துரே மதூஷ் வர்­ண­கு­ல­சூ­ரிய அஜித் அரங்க எனும் பெய­ரி­லான போலி பெயரில் தயா­ரிக்­கப்­பட்ட கடவுச் சீட்டில் டுபாய்க்கு சென்­றுள்ளார்.  அதில் அவ­ரது முக­வ­ரி­யாக இலக்கம் 241/ ஏ, ஜா எல வீதி , கம்­பஹா என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  எனினும் மதூஷின் உண்­மை­யாக முக­வரி மாவ­ரல பொலிஸ் பிரிவில் உள்ள மாகந்­துரே எனும் ஊராகும். அங்கு தற்­போது மதூஷின் மனைவி வசித்து வரு­கின்றார். 

மதூ­ஷுக்கு எதி­ராக  சுமார் 50 கொலை­களும் கொலை முயற்சி சம்­ப­வங்கள் மற்றும் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் குற்­றச்­சாட்­டுக்­களும்  உள்­ளன.

 பொலிஸ் தலை­மை­யக தக­வல்­களின் பிர­காரம், அதில் பிர­தா­ன­மாக 2017.மே.9 ஆம் திகதி  பிலி­யந்­த­லையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சுற்­றி­வ­லைப்பு பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் ரங்க ஜீவ மீது  துப்­பாக்கிச் சூடு  நடத்­திய சம்­ப­வத்தில் மதூஷ் முக்­கிய சந்­தேக நப­ராக  சேர்க்­கப்­பட்­டுள்ளார். அச்­சம்­ப­வத்தில் பொலிஸ் கான்ஸ்­டபிள், சிறுமி ஒருவர் என இருவர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். மேலும் பலர் காய­ம­டைந்­தனர்.

2017.பெப்ர்­வரி மாதம் 27 ஆம் திகதி களுத்­துறை பகு­தியில் சிறைச்­சாலை பஸ் வண்டி மீது தாக்­குதல் நடத்தி இரு சிறை அதி­கா­ரிகள், சமயன் எனும் பாதாள உலக குழு உறுப்­பினர் உள்­ளிட்ட 5  சந்­தேக நபர்கள் என 7 பேரைக் கொலை  செய்த சம்­ப­வத்­திலும் மதூஷ் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

 இதே­வேளை 2018.3.27 அன்று  சாந்த குமார அல்­லது கொஸ்­மல்லி என்­ப­வரை கடத்தி கொன்று  அவ­ரது தலையை வேறாக வெட்டி கொழும்பு - வாழைத்­தோட்டம் பொலிஸ் பிரிவில் கொண்­டு­வந்து போட்ட சம்­ப­வத்­திலும் மதூஷே பிர­தான சந்­தேக நப­ராக விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர்.  இத­னை­விட பல கொலைகள் மற்றும் கொள்­ளைகள், போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் மதூஷ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் ச்சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார். 

இத­னை­விட 2006.ஜூன் 11 ஆம் திகதி கம்­பு­று­பிட்டி பகு­தியில் வைத்து தென் மாகாண முன்னாள் அமைச்சர் டேனி ஹித்­தெட்­டி­யவை கொலை செய்­தமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பல நீதி­மன்­றங்­க­ளாலும் மதூ­ஷுக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்ட  பிடி­யா­ணை­களும் உள்­ளமை விஷேட அம்­ச­மாகும்.

இவ்­வாறு ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் இருந்து  நாடு கடத்­தப்­படும் பாதாள உல­கக்­குழு தலைவர் மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்­டோரை பாது­காப்புப் பிரிவின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு விசேட குழு­வொன்று பொலிஸ் தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்தக் குழுவில் அரச புல­னாய்வுப் பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்வு  பிரிவு, போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ஆகி­ய­வற்றின் 25 அதி­கா­ரிகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்தன்ர். குறித்த குழு 24 மணித்தியாலங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

அத்துடன் இவ்வாறு நாடு கடத்தப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவென  சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான ஷானி அபேசேகர, சமிந்த தனபால, பொலிஸ் அத்தியட்சர்களான ருவன் குனசேகர, நிசாந்த டி சொய்ஸா மற்றும் ஹேமந்த ஆகியோரை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட  விஷேட மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அவர்களின் மேற்பார்வையில் கீழேயே தற்போது மதூஷிடம் சிரப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.

இதனைவிட ஜனாதிபதி கொலை சதி விவகாரம்  தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)

2 கருத்துரைகள்:

nothing will happen he will come out soon with politics support

இந்த மதூஸ் ஒரு பயங்கரவாதி இவரால் பல கொலைகள் நிகழ்ந்துள்ளது இவரின் பெயரை மக்கள் செவியுரும்போது பீதியுடன் இருக்கின்றார்கள் இவர் பௌத்தமதத்தை சேர்ந்தவர் இவர் செய்யும் இந்த கொடூரங்களுக்கு அனைத்து பௌத்த மக்களையும நிந்திக்க முடியுமா?

இந்த கொடூரங்களை செய்ய இவர் எந்த கலாசாலையில் படித்துக்கொண்டார் இலங்கையில் எந்த பாடசாலையிலாவது படித்துக்கொடுக்கப்படுகின்றதா? அல்லது அவரின் பௌத்த கோயில்களில் படித்துக்கொண்டார் என்று சொல்லமுடியுமா? அவ்வாறு நினைத்தால் அது ஒரு பெரிய அபாண்டமும்,மங்காத மடமை சிந்தனையாகும்

இவ்வாறே 21/4/2019 அன்று இஸ்லாமிய பெயரைமட்டும் வைத்துக்கொண்ட சில கொடூரக கொலை விரும்பிகளால் நிகழ்ந்த அந்த கொடூரங்களுக்கும் இஸ்லாமிய மார்கத்திட்கும் அதை தெளிவான முறையில் கற்பித்து கொடுக்கும் இலங்கையில் உள்ள இஸ்லாமிய அரபு கல்லூரிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்று பூமியில் அமைதியை விரும்பும் ஒவ்வொரு நற்சிந்தனையுடய மனிதனும் உணர்ந்து தெரிந்து கொள்வான்!

Post a comment