Header Ads



இலங்கையில் அடைக்கலம் புகுந்துள்ள, 416 காதியானிகள் அமெரிக்காவுக்கு பறக்கிறார்கள்


வெளிநாட்டவர்கள் 1698 பேர் இலங்கைக்கு புகழிடம் கோரி வருகைதந்துள்ளனர் என அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று -08- இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ஹெரான் விக்ரமரட்ன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த 1698 பேரில், 869 பேர் அகதிகள் என்ற முறைமைக்குள் வகைபடுத்தப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையினால் ஏதிலிகள் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

40 பேர், எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களில் நாடுகடத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.

குறித்த 1698 பேரில், 1074 பேர் நீர்கொழும்பு, பஸ்யாலை முதலான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களில் 416 பேர் அமெரிக்காவில் குடியேறுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவில் 7 பேரும், ஃப்ரான்ஸில் 3 பேரும், தனிப்பட்ட ஸ்பொன்சர் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய கனடாவில் 160 பேரும் குடியமருவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதேநேரம், மேலும் 234 பேரின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆயிரம் பேரளவிலேயே தற்போது உள்ளனர் என்றும், அவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் சர்வதேச சட்டத்திற்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஹெரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. இந்த உண்மைகளை தெரியாமை காரணமாக பல இனவாதிகல் மிகவும் குழம்பிப்போய் ஓலமும்,ஓப்பாரியுமாய் கடந்த பல நாட்கல்லாக சமூக வலைத்தளங்களில் உலா வருகிறார்கள்

    ReplyDelete

Powered by Blogger.