Header Ads



தேசிய பட்டியல் Mp கள் தொடர்பில், புதிய யோசனை முன்வைப்பு


தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பான புதிய யோசனையை சட்டவரைவுக்கு உட்படுத்தும் பணிகள், மார்ச் - 12 இயக்கத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள குறித்த யோசனையானது, மார்ச் - 12 இயக்கத்தின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களினால், தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக அதன் பிரதிநிதி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாத தரப்பினருக்கு, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், புத்திஜீவிகளை சட்டவாக்க சபைக்குள் உள்ளீர்ப்பதும் தேசியப் பட்டியல் உறுப்புரிமையின் நோக்கமாகும்.

எனினும், தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தங்களது தனிப்பட்ட நலன்களைக் கருத்திற்கொண்டு, வரப்பிரசாதங்களுக்காக கட்சிமாறும் நடவடிக்கையில் ஈடுபட்டதை கடந்த 5 நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அறியமுடிவதாக ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அதனை சட்டமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.