Header Ads



வியட்நாமில் நடைபெறும் சர்வதேச கூட்டுறவு, பணிப்பாளர் மாநாட்டில், இலங்கைப் பிரதிநிதியாக M றியாஸ்

சர்வதேச கூட்டுறவு  பணிப்பாளர் ( ICA - AP) மாநாடு வியட்நாமிலுள்ள " மின்ஹ் சிடி"  நகரில் ஏப்ரல் " 16 - 19" 2019  வரைக் காலப்பகுதியில் தற்போது  நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் இலங்கை இளைஞர் கூட்டுறவு வலுவூட்டல் சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது றியாஸ்  இலங்கைக்கான பிரதிநிதிகளில் ஒருவராக கலந்து கொண்டதுடன், சர்வதேச (ICA -  Director General )  புறூனோ ரோலண்ட்ஸுடன் சிநேகபூர்வமாக இலங்கை இளைஞர்களின் தொழில் வாய்ப்பு மற்றும் எதிர்வரும் ஜூலையில்  நடைப்பெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாடு கலந்தாலோசிக்கப்பட்டதுடன் வளர்ந்து வரும் எமது நாட்டு இளைஞர் , யுவதிகளுக்கு சுமார் ஐம்பது பேருக்கு இம்மாநாட்டில் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு அனுமதி தருமாறு ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான  பணிப்பாளர் பாலு ஐயர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கமைய  ஐம்பது இளைஞர் , யுவதிகளுக்கு இன்று  அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கையில் நடைபெறும் கூட்டுறவு இளைஞர் மாநாட்டில் மூலம் இலங்கையில் பாரிய முன்னேற்றத்தை அடையாளம் என இளைஞர்  கூட்டுறவு வலுவூட்டல் சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது றியாஸ் தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.