Header Ads



பயங்கரவாத செயல்களுடன், தவ்ஹீத் அமைப்புகளை தொடர்புபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ

இலங்கையில் கடந்த 21.04.2019 அன்று 08 இடங்களில் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் இரு இடங்களில் குண்டுத் தாக்குதல்களுக்கு தயாராக இருந்த ஒரு வாகனம் அழிக்கப்பட்டதுடன், இன்றும் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட லொரி மற்றும் வேன் ஒன்று கொழும்பில் நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த குண்டுத் தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் மரணித்திருப்பதுடன், 400க்கும் மேற்பட்டவர்கள் கடும் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

ஆற்ற முடியாத கவலையில் இருக்கும் தாக்குதலில் மரணித்த சகோதரர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் “தேசிய தவ்ஹீத் ஜமாஅத் – National Thawheed jamath (NTJ) என்ற அமைப்பினர் என சர்வதேச ஊடகங்களும், உத்தியோகபூர்வமற்ற சில தகவல்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

தவ்ஹீத்  அமைப்புகளுக்கும் குண்டுத் தாக்குல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இந்நிலையில் குறித்த தாக்குதல்களுக்கும் ”தவ்ஹீத் ஜமாஅத்” என்ற பெயர் கொண்ட அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக உள்ளூர் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், சமூக வலை தளங்களும் செய்தி பரப்பி வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட எந்தவொரு தவ்ஹீத் பெயர் கொண்ட அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென்பதுடன், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) பெயரையோ அல்லது SLTJ, ACTJ, UTJ, போன்ற தவ்ஹீத் பெயர் கொண்ட எந்தவொரு அமைப்பின் பெயரையோ பயன்படுத்தி தவறான செய்தி பரப்புவதை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) செயலாளர் அப்துர் ராசிக்கின் பெயர் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

குறித்த குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் - National Thawheed jamath (NTJ) என்ற அமைப்பின் நிறுவனர் ”ஸஹ்ரான் ஹாஷீம்” என்பவரை பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் ஸஹ்ரான் என்பவருக்கு பதிலாக சகோ. அப்துர் ராசிக் அவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் வெளியிட்டு வருகின்றன.

குண்டு வெடிப்பு சம்பவத்துடன் எவ்விதத்திலும் தொடர்புபடாத சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தையும், அமைப்பின் செயலாளரின் பெயரையும் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதுடன், இதற்குப் பிறகும் அமைப்பின் பெயரையோ, செயலாளரின் புகைப்படத்தையோ பயன்படுத்தி தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ) நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ கைது செய்யப்பட வில்லை.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

குறித்த குண்டுத் தாக்குதல்களுக்கும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுடன், இது தொடர்பில் அமைப்பின் தலைமை, மாவட்ட, கிளை நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ யாரும் கைது செய்யப்படவில்லை என்பதை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.

முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் பாதுகாப்பு பிரிவு கவனமெடுக்கவில்லை.

குறித்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டு பேசப்படும் ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் தொடர்பிலும் அவர் தீவிரவாத குழுக்களை ஆதரித்து பகிரங்க பிரச்சாரம் செய்கிறார். சமூக வலை தளங்கள் மூலம் இளைஞர்களை தம் பக்கம் ஈர்க்கிறார் என்றும் ஸஹ்ரான் ஹாஷிம் மீதும் அவர் சார்ந்தவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல தடவைகள் பாதுகாப்பு பிரிவினருக்கும் நாம் அறிவித்துள்ளோம்.

ஸஹ்ரான் ஹாஷிம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 03 வருடங்களாக தொடர்ந்து எச்சரித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் அவற்றை அவர்கள் கவனத்தில் எடுக்காமையே இந்த மிலேச்சத்தனமாக தாக்குதல்களுக்கு காரணம் என கடந்த 22.04.2019 அன்று தேசிய தொலைக் காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் நெல்லிகல வதுரகும்புறே தர்மரத்ன தேரர் மிகத் தெளிவாக தெரிவித்திருந்தமையையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் எவ்விதத்திலும் மனித நேயம் கொண்ட யாராளும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதுடன், இத்துடன் தொடர்புபட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுக்கிறது சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்.

M.A.L.M ரிஸான்,

தலைவர் – சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ

கொழும்பு.

ஊடக தொடர்புகளுக்கு,

M.F.M ரஸ்மின் (துணை செயலாளர் – CTJ

0761378725 / 0771081996 (WhatsApp)

7 comments:

  1. போங்கடா டேய்,நீங்கல் தவறு செய்யாவிட்டாலும், உங்கள் 5 வகையான தவ்ஹீத் ஜாமத்தின் உருவாக்கம்தான் கடந்த 10 வருடங்களாக எமக்கெதிரான பெரும்பாண்மை மக்களின் துவேசம் அதிகரிக்க காரனம்.இப்போ உங்களுக்கு வெட்கம் இல்லையா அறிக்கை விட.அடேய் உங்களுக்கும் சொந்தம்,பந்தம் உண்டுதானே.ஏன் 1000 கு மேற்பட்ட ஆண்டுகளாக நிம்மதியாக இருந்த Muslim கலின் நிம்மதியை கெடுக்கின்ரீர்கல்.மக்களால் அடித்து நொறுக்குவதுக்கு முன் மரியாதயாய் உங்கள் கபட இயக்கங்களை கலைத்து விட்டு, உழைத்து வாழுங்கள்

    ReplyDelete
  2. Muslimgalai teeviravadihal enru sonnal adanai evvaru etka mudiyadho Thawheed anaivarayum teeviravaadigal enru solvadai etka mudiyadu.

    ReplyDelete
  3. Ella muslimgalum teeviravadi enru solvadu evvaru tavaro Tawheed vaadigalai teeviravadi enru solvadum tavaru

    ReplyDelete
  4. அடுத்த அறிக்கைகள் மீண்டும் தேவையில்லை.அனைத்து விதமான தவ்ஹீத் அமைப்புக்களும் கலைக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. நீஙகள் காஸாவுக்காக எதிர்பபு ஆர்ப்பாட்டம் செய்த போது முன்னால் ஜனாதிபதியின் போட்டோக்களைத் தூக்கிச் சென்றீர்கள். அப்போதே நீங்கள் சந்தேகத்துக்குரியவரகளாகவே தோன்றினீர்கள்.சமூகத்தைக் கேவலப்படுத்தும் விடயத்தில் ஐஸஐஸ் இன் அரைவாசியாக செயற்பட்டீர்கள். நீங்கள் தான் உண்மையா முஸலிம்கள் எனக் காண்பிப்பதற்காக மும்முரமாக செயற்பட்டீர்கள்.துவேச அரசியல் வாதிகளின் பின்னால் குளிர்; காய்ந்தீர்கள். இப்போது அவர்கள் உங்கiளைக் கைவிட்டதனால் நடுங்குகிறீர்கள். கோழைகளாக மாறிவிட்டீர்கள். அனைத்து தௌஹீத் ஜமாத்தும் தீவிர வாதத்தை விதைத்தே இருக்கிறது

    ReplyDelete
  6. Saharan தொடர்பு பட்டது 50% உண்மைதானா சந்தேகமா?

    ReplyDelete
  7. Ella theeviravathikalum Tawheedukul than irukirangal.

    ReplyDelete

Powered by Blogger.