Header Ads



மஹிந்தவை முத்தமிட நினைக்கின்றேன்: மங்கள சமரவீர

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஓர் முத்தம் கொடுக்க வேண்டுமென நினைக்கின்றேன் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையர்றிறய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகி வெளிவிவகார அமைச்சினை ஏற்றுக்கொண்ட போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவரை முத்தம் கொடுத்து வரவேற்றார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நிதி அமைச்சர் உரையாற்றிய போது,

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றிய போது ஏற்பட்ட வருத்தம் எவ்வளவு என்றால் எனக்கும் அவருக்கு ஓர் முத்தம் கொடுக்க வேண்டும் என நினைக்க தோன்றியது.

அது வேறு எதற்காகவும் கிடையாது, இன்று அந்தப் பக்கம் இருந்து சத்தம் போடும் எல்லேரையும் விடவும் எனக்கு மஹிந்த ராஜபக்சவிற்கு வரலாறு நன்றாகத் தெரியும்.

உங்களைப் போன்ற ஓர் சிறந்த தலைவருக்கு இவ்வாறான ஓர் எதிர்க்கட்சி பொருத்தமற்றது, அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இதை விட நல்ல ஒரு எதிர்க்கட்சி கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இது அன்டன் பாலசிங்கத்தின் பாணியிலான முத்தமாக இருப்பது போல் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.