April 28, 2019

முஸ்லிம்களுக்கு எதிராக நாம், விரலை நீட்டவில்லை - பேராயர் மல்கம் ரஞ்சித்

(அஸ்ரப் ஏ சமத்)

கொழும்பு 7 பௌத்தலோக மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ்  அலுவலகத்தில் ்கடந்த ஞாயிறு நடைபெற்ற பயங்கர வாத தாக்குதல் சம்பந்தமாக சர்வமதத் தலைவா்க் இணைந்து ஊடகவியலாளா் மாநாடொன்றை  இன்று (28) பி.பகல் 3.00 மணிக்கு நடாத்தினாா்கள்.

இவ“ ஊ்டக மாநாட்டினை கலாநிதி ஒமல்பே சோபித்த தேரா் தலைமையில் நடைபெற்றது.  இவ் ஊடக மாநாட்டில் சகல மதத் தலைவா்களும் மெழுகுவாத்தி ஏற்றி உயிா் நீத்தவா்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்கள்.  கலாநிதி இத்பான்கே தம்மலங்கார தேரா்  கிரிஸ்த்துவ மதத்தின் சாா்பில்  மல்கம் கார்டினா் ரன்ஜித் ்ஆண்டகை,  இந்து மதத்தின் சாா்பில்  சிவசிறி கு.வை. க வைத்தீஸ்வர குருக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவா் அஸ்சேக் றிஸ்வி முப்தி,  அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவா் ஜகத் சுமதிபால ஆகியோறும்  கலந்து கொண்டு கருத்துக்களைத்  தெரிவித்தனா்.

மல்கம் கார்டினா் ரண்ஜித் -  

கடந்த ஞாயிறு புனித நாளில் ஆலயங்களில் கொலை செய்த தற்கொலைதாரா்களின் பின்னா் ஒரு பாரிய அரசியல் அல்லது வெளிநாட்டுச் சக்தி உள்ளது.  அதனை எமது பாதுகாப்புப் பிரிவினா்  ஆராய்ந்து வெளிப்படுத்தல் வேண்டும். எமது மக்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடவில்லை அவா்கள் இத் தாக்குதலுக்காக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக விரலை நீட்டவில்லை. எதிா்காலத்திலும் நாம் அவா்களை எதிராக வன்முறையில் ஈடுபட விடப்போவதும் இல்லை.  இந்த உலகில் 1ஆம் உலகப் போா் 2ஆம் உலகப் போா் பிற்பாடு சில நாடுகள் ஆங்காங்கே தமது ஆயுத உற்பத்திகளை விற்பதற்காக சில நாடுகளை துாண்டி அங்கு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு அதி்ல் ்அவா்கள் ஆயுதங்களையும் வழங்களையும் சுறையாடுவாா்கள். அந்த வகையில் கொரியா, கம்போடியா, ஆப்கணிஸ்தான், ஈரான்-ஈராக், ஈராக் -குவைத் .சுடான் ஆபிரிக்க  இஸ்ரேல் பலஸ்தீன் சிறியா, போன்ற நாடுகளை துாண்டி விடுவாா்கள் அந்த  வகையில் தான் எமது நாடு கடந்த 27 ஆண்டுகள் யுத்தத்ம் செய்து அதில் பாடம் கற்று மீண்டு எழுந்தோம். அதில் தமக்கு நிறைய பாடம் கற்றுக்கொண்டோம் அந்த வகையில் நாம் மதங்கள், இன்னும்மொறு மத்திற்கு அவா்களது கலை கலாச்சார விழுமியங்களுக்கு நாம் அழுத்தம் கொடுப்பது சரியில்லை அதுவும் கூடாது ஆகவே நாம் இந்த நாட்டில் சிறந்த பாதுகாப்புப் படையினா் ஆதரவு ஒத்துழைப்பும் வழங்கி அண்மைய குண்டுதாரிகளை அடியோடு கழைந்து இந்த நாட்டினை மீள கட்டியெழுப்புவோம் என ரண்ஜித் ஆண்டகை அங்கு கூறினாா்்

3 கருத்துரைகள்:

ரஞ்சித் ஆண்டகையின் maturity இலங்கைவாழ் மக்கள் சகலருக்கும் இருந்தால் இந்நாட்டில் இரத்தக்கறை படிய வாய்ப்பே இல்லை

Yes, Kardinal Father. Your statement is true and correct. Former USA President Robert Nixon what's says to US whole Christian people's. I think you know about that so whole world know soon who is no 1 terrorist,criminals and extremist
Dear Father you should read surah Al Maryam in Al Qur'an. Then you know everything and should read whole Al Qur'an for yours open huge minds.

தலைபணிந்து பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பல்லாண்டு பாடி வாழ்த்துகிறேன். இலங்கையில் உங்களுக்கு நிகரான மனிதாபிமானமுள்ள இன்னொரு மத தலைவரை நான் அறிந்ததில்லை. பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீடு வாழ்க

Post a Comment