Header Ads



முஸ்லிம்கள் பெண்களின், ஆடை விவகாரத்தில் கட்டுப்பாடு


-Sivarajah-

ஜனாதிபதி இன்று .22. தேசிய பாதுகாப்பு சபை – அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார்.

இதனைத்தவிர உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று முஸ்லிம் அமைச்சர்கள் ரிசார்ட் – ஹக்கீம் – ஹலீம் – மற்றும் பைசர் முஸ்தபா எம் பி உட்பட்ட பிரமுகர்களை சந்தித்தது.

தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விளக்கப்பட்டது. குறிப்பாக முஸ்லிம்கள் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது – அது குறித்தான சில நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக பாதுகாப்பு தரப்பு இங்கு கூறியுள்ளது.

10 comments:

  1. புலனாய்வுத்துறையின் அசமந்த போக்கை மக்கள் கதைக்காம் இருப்பதற்கு இவர்கள் எதைப்பற்றி கதைத்து முடிவு எடுக்கின்றார்கள் கவனியுங்கள் பெண்கள் முகத்தை மூடுவதற்கும் தற்கொலை தாக்குதளுக்கும் என்ன சம்மந்தம் தற்கொலைதாரிகள் அந்த இடங்களுக்கு முகத்தை மூடிக்கொண்டா செயல்பட்டார்கள்!

    ReplyDelete
  2. கொச்சிக்கடை தேவாலயதிட்கு போகவேண்டாமென்று தற்போதய அரசாங்க அமைச்சர் ஹரின் பெர்னாடோ அவர்களின் தந்தை அவை எச்சரித்துள்ளார் அந்த வியங்களை எவ்வாறு அறிந்து கொண்டார் அவைகளை தெரிந்திருந்தும் ஏன் பாதுகாப்பு பொறுப்புதாரகளுக்கு அறிவித்து நடவடிக்க எடுக்கவில்லை பாதுகாப்பு அமைச்சை வைத்துள்ள ஜனாதிபதி அந்த அமைச்சின் பொறுப்புதாரிகளுக்கு எவ்வாறு இந்த விடயம் தெரியாமல் இருக்கும்!?

    ReplyDelete
  3. காலம் கடந்த மிகச்சிறந்த தீர்மானம்.

    ReplyDelete
  4. நடந்த பிரச்சினைக்கும் முஸ்லிம்களிn ஆடைக்கும் என்னடா சம்பந்தம் !!!

    ReplyDelete
  5. Finally they made a good decision.

    ReplyDelete
  6. Very good decison, according to the situa
    tion.

    ReplyDelete
  7. Suhaib our life only short.aahira
    Is our real life.dunya will bold us

    ReplyDelete
  8. face cover, burqa a insult to the sri Lankan muslim ladies

    ReplyDelete
  9. இலங்கையில் நிகந்ழ்த மிருகத்தனமான ஈனசெயல் கண்டிக்கத்தக்கது. இது இனம் மதம் பேதம் தாண்டி மிருகத்தனமான கேவலமான ஒரு குழவினரின் செயற்பாடு இவர்களை மனிதர்கள் என கூறுவதை விட மனித சமூகத்தின் எதிரிகள் என அடையாளப்படுத்தலாம்.அழகான இத்தேசத்தில் நிஜமான அமைதிக்காக பிரார்த்தித்தவனாக. இத்த்தாக்குதல் திட்டத்துக்கு பின்னால் பல மர்மங்கள் மறைபொருளாக காணப் படுகின்றன.வெளிவரும் தகவல்களின் படி பல புதிர்கள் புரியாது காணப் படுகின்றது.இந்த அடிப்படையில் இவ்வளவு திட்டமிட்டு தாக்குதல் நடாத்தும் அளவு இரசாயனவியலில் பாண்டித்தியம் பெற்ற ஒரு சமூகமாக இஸ்லாமிய சமூகத்தை கண்டுகொள்ள முடியுமா எனபதும்.இன்னும் இத்தகைய தாக்குதல்களுக்கு தி்ட்டமிட நீண்ட காலம் தேவை.இவை அனைத்தும் இவ்வாறான ஒரு சிறிய நாட்டில் நுணுக்கமாக செய்ய கூடிய ஆற்றல் திறமை என்பது ஒரு சில நபர்களால் முடியவே முடியாது ஏனெனில் சுமார் முப்பது வருட கால யுத்தவரலாற்றில் விமானம் வைத்து தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளால் கூட இவ்வாறு தாக்குதல் நடாத்த முடியாத அளவு இலங்கை ராணுவமும், உளவுப்பிரிவும் செயற்பட்டது என்பது உலகிறந்த உண்மை.இவ்வாறு இருக்க சுமாராக வேன்கள் நிரம்ப வெடிபொருட்கள் கைப்பற்றியதாகவும் தகவல்கள் கசிகின்றன.இவ்வாறு வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் அளவு திறமை வாய்ந்த தொழிற்சாலைகள் மறைமுகமாக இயங்கிவந்தமைக்கான சாத்தியக்கூருகள் மிகக்குறைவு,இன்னும் இங்கு இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் அதிகமானவை கிறிஸ்தவ தேவாலயங்களும்,கிறஸ்தவ விசேட தினமும் ஆகும்.குறிப்பாக கிறஸ்தவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்தும் இடையில் முறுகல் நிலைகள் என்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது.இன்னும் இந்திய ஊடகங்களின் அதிகமானவை இலங்கையில் புலனாய்வு பிரவின் ஆய்வுகளுக்கு முன்னரே செய்திகளில் முஸ்லிம்களின் பெயர்பட்டியல்கள் உலாவந்தமையையும்,இன்னும் இந்திய பிரதமரின் முதல் அறிக்கையும்,அவரின் தேர்தல் பிரச்சாரப்பாணியில் இலங்கையை அதிகம் அதிகம் உதாரணம் காட்டுவதை அவதானிக்கலமா.இவ்வாறான புதிர்களுக்கு விடை காணும் போது ஒரு சமூகத்தை குத்திக்காட்டி அவர்களை கொச்சைப்படுத்துவது என்பது இலங்கை தேசத்தின் எதிரிகளுக்கு தீணி போடுவது போல் ஆகிவிடும்.எனவே சிந்தனைகளை சமூகங்களின் பால் அம்புகளாக சிதரடிக்காது,நடந்து கொள்வது காலத்தின் தேவையும் அனைவரின்தும் கடப்பாடும் ஆகும்.மேலும் இலங்கையில் அதிகம பெருமதி வாய்ந்த செல்வங்களும் இலங்கையின் முக்கியத்துவம் உலக நாடுகள் தமக்கிடையில் கூறுபொடுவதற்கான போட்டித்தன்மைய அதிகரித்துள்ளது.ஆகவே பொதுப்படையாக இலங்கை தேசம் அழகானது ஆறுகளால்,கடலால் சூழப்பட்ட முத்து ஆகவே அதன் அழகில் பெறுமை கொள்ளும் பாக்கிய அனைத்து இலங்கை பிரஜைக்கும் சமஉரித்தாகும்.இவ்வாறு இரத்த ஆறுகளை ஏற்படுத்தும் விஷக்கிருமிகளை அழிப்பது அனைத்து இலங்கை பிரஜைகளின் மீதும் கட்டாய கடமை.இங்கு தான் நாம் அனைவரும் ஒன்று பட்டு நாட்டை கட்டியெழுப்ப ஒன்று பட வேண்டிய தருணம் செழிப்பான மண் எமக்குரியது அதை காப்பது அதற்காக செய்யும் தியாகம். வேற்றுமைகளை மறந்து எம் தேசத்தை கட்டியெழுப்புவோம்.சுத்தமான நீருக்கு பதிலாக இரத்தம் படிந்த சரித்திரங்களாக மாறாது ஒன்றாய் இணைந்து கட்டியெழுப்புவோம் தேசத்தை,தேசம் செழிக்கட்டும், துரோகிகள் அழியட்டும்,சமாதானம் நிம்மதி மலரட்டும்.இவ்வண்ணம் மண்ணின் நேசன்.

    ReplyDelete

Powered by Blogger.