Header Ads



அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு நாடு திரும்பும் கோத்தா, ஜனாதிபதி தேர்தல் பணிகளை ஆரம்பிக்கிறார்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் விண்ணப்பத்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கையளித்துள்ளார். அமெரிக்க தூதரகம் அதனை எழுத்துமூலம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து கோத்தபாய தேவையான அனைத்து ஆவணங்களையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி லண்டன் புறப்பட்டுச் சென்ற கோத்தபாய அங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.

தனது குடியுரிமையை இரத்து செய்வது சம்பந்தமான நடவடிக்கைகளுக்காக அவர் ராஜாங்க திணைக்களம் மற்றும் வெளிவிவகார திணைக்களங்களில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளதாக தெரியவருகிறது.

குடியுரிமையை இரத்துச்செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் 16 ஆம் திகதி கோத்தபாய, இலங்கை திரும்பவுள்ளார்.

இதனையடுத்து கோத்தபாய தனது ஜனாதிபதித் தேர்தல் பணிகளை ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

6 comments:

  1. That is why SLFP not supported Mahinda & Co to vote against budget...

    ReplyDelete
  2. Pollak kuduththu adi vangap poreenga pola.

    ReplyDelete
  3. I request the Muslim Community NOT TO VOTE to Gota. He has promised to his friends that he will treat Muslims like Jews are treating Palstinians. So don’t dig your own grave.

    ReplyDelete
  4. Who is this jew noor nizam.basterd who are you to say this??

    ReplyDelete
  5. Mr. Noor Nizam, please take off your slogan "The Muslim Voice". You are NOT the voice of the Muslims! You are free to voice your own opinions but you cannot promote your own views as the Voice of Muslims.

    ReplyDelete
  6. Guys don't simply fight among yourselves, only Allah (SWT) knows what is hidden, as He decrees what is right and who should be the Leader of a Nation or Organisation. Each voter can cast his/her vote and await the final results, that's it. Let me quote an old Adage here, "In politics there are no permanent friends or permanent enemies only permanent Interests".

    ReplyDelete

Powered by Blogger.