Header Ads



கல்முனைக்கு தொடரும் அநியாயங்கள்

இலங்கையின் கிழக்குமாகாண அம்பாறை மாவட்டத்தின் பிரதான நகரமான கல்முனையில் அண்மைக் காலமாக இடம்பெறும் இன முரண்பாட்டுத் தூண்டலுக்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டுவரும்  வடக்கு பிரதேச செயலகப் பிரிவு  தரப்படுத்தல் கோசம் தொடர்பான பதிவே இதுவாகும், 

#கல்முனை_மாநகரம்,

கல்முனை மாநகரமும் ,அதன் நிர்வாகமும் நீண்ட வரலாற்றைக்கொண்டது ,அத்துடன் அதன் இன உறவுப் பாரம்பரியமும், , ஒன்றித்துச் செயற்படும் பண்பாட்டு தன்மைகளையும்  கொண்டிருப்பதுடன் ,இலங்கை  முஸ்லிம்களின் வியாபார, மற்றும் அரசியல் அடையாள தலைநகர்  என்ற பின்புலத்தையும், பல்லின பாரம்பரியத்தையும்  கொண்ட நகராகும்.

#பிரதேச_செயலகம், 

இலங்கையின் நிர்வாகப் பிரிப்புக்கு அமைய பிரதேச செயலகங்கள் மக்களின் அன்றாட வாழ்வுக்கான பல பணிகளைப் புரிவதுடன் அப்பிரதேச மக்களின் நிர்வாகக் கட்டமைப்பை  செயற்படுத்தும் ஒரு அமைப்பாகும்,இது பூரணமாக அரச கட்டுப்பாட்டிலான  நிர்வாக அமைப்பாகும் , அவ்வாறான  பணிகளையே கல்முனை பிரதேச செயலகமும் தனது பிரதேச எல்லைக்குள்ளே செய்து வருகின்றது, 

#பிரதேச_செயலக_பிரிப்பும்_விரிசலும்,

கல்முனைக்கான பிரதேச செயலகத்தில் இருந்து,இனவாத நோக்கத்தில் 1989.04.12 அன்று முயினுத்தீன் அவர்கள் AGA ஆக இருக்கும் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய இனவாதக்  கும்பல் குறித்த பிரதேச செயலகத்தின் ஒரு பகுதியினை பிரிக்க வைத்து அதனை தனியான ஒரு அலகாக இயங்க வற்புறுத்தியதன் அடிப்படையிலும், யுத்தகால  அரச நிர்வாக செயலின்மை காரணமாகவும் குறித்த பகுதி #உப_பிரதேசசெயலகமாக ஏற்கப்பட வேண்டிய கட்டாய நிலை உண்டாகி இருந் தது , 

அதன்பிற்பாடு, நிர்வாகத்திற்கு வந்தவர்கள் தமது விருப்பப்படி அதன் பெயரைப் பயன்படுத்தி மக்களை பிழையாக வழிப்படுத்தி வந்துள்ளனர், என்பதை தகவல் அறியும் சட்டம் வெளிப்படுத்தி உள்ளது

குறித்த இனரீதியான பிரிப்பின் பின்னர், தமிழ்,பிரதேச செயலகம், முஸ்லிம் பிரதேச செயலகம் என்ற பிரிவினை  திட்டமிட்டு நிர்வாக ரீதியாகவும், பொதுமக்களிடையேயும் ஏற்படுத்தப்பட்டது, இப்பிரிவினைக்கான முழுப்பொறுப்பையும்  இனவாத ஆயுதக் குழுவும் ,அதனோடிணைந்த நிர்வாகிகளுமே பொறுப்பேற்க வேண்டும்,

#பிரதேச_செயலக_பிரிப்பு (அ)#நியாயங்கள்,

குறித்த நிர்வாக வேறாக்கம் இடம்பெற்றதன் காரணம்,அக்காலத்தில் தனிநாடு கோரிய ஆயுதப்போராட்டமும், முஸ்லிம் வெறுப்பு மனப்பான்மையும், ஆயுத அடக்கு முறையுமே தவிர வேறு எதுவுமில்லை, மாறாக சாதாரண தமிழர் முஸ்லிம் பொதுமக்கள் இதனை விரும்பவும் இல்லை இதற்கான முறையான கோரிக்கை எவராலும்  முன்வைக்கப்படவும் இல்லை, மாறாக இது ஒரு கட்டாய இனக்கலைப்பு செயலாகவே கருத வேண்டி உள்ளது, 

#பிரிவினையும்_பிந்திய_கோசங்களும்,

குறித்த உப செயலகம் இதுவரை காலக்கட்டாயத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதனை தரமுயர்த்தி இன்று ஒரு பிரதேச செயலகமாக்க மேற்கொள்ளப்படும் "பலவந்த" அழுத்தங்களின் பின்னே பலவேறு அரசியல் ,இனவாத சக்திகள் உள்ளன தெளிவாகப் புலப்படுகின்றது, மட்டுமல்ல  தமது அநியாய பிரிப்பை ஆதரவாக்கிக் கொள்ள பொதுமக்களின் உணர்வைத்தூண்டி வன்முறையை வரவழைக்கும் பின்புலமே இதன் பிரதான இலக்காகவும், அது அன்றாட பொது வாழ்வில் பல பிரச்சினைகளையும் உண்டு பண்ணுகின்றது,

#ஏன்_பிரிப்பும்_தரப்படுத்தலும்,

குறித்த உப பிரதேச செயலகத்தை கல்முனை பிரதான செயலகத்தில் இருந்து 1989:04:12 அன்று பலவந்தமாகப் பிரித்தது, எவ்வளவு நியாயமற்றதோ, அது போன்றதே இன்றைய தரமுயற்தல்  கோரிக்கையுமாகும், தமிழ் பிரதேச செயலகம் என்ற பெயர் மொழி ரீதியிலான பிரிப்பா? அல்லது இன்ரீதியிலான பிரிப்பா? இதன் எல்லைகள் வர்த்தமானி பிரகடனத்தில் உள்ளனவா?? இல்லை எனில் இதன் நோக்கம்  என்ன? இன ரீதியான பிரிவினைக் கோசம் என்பது மட.டுமே, 

#ஒற்றுமை_கோசங்கள்

  சிறுபான்மையினர், தமிழ் மொழி பேசும் சமூகத்தினர்  ,பரம்பரை உறவுகள் போன்ற பல ஒற்றுமைக்கான அரசியல்  அடைமொழிகளை,  காலத்திற்கு காலம் அரசியல் வாதிகள்  கூறுவதுடன்  அதனைப் பின்பற்ற வேண்டும் எனும் தமிழர் அரசியல்வாதிகளின்  கோரிக்கைகள்  கல்முனை விடயத்தில் ஒரு பிரதேச செயலகத்தில் ஏன்  ஒன்றித்து நிர்வாகம் புரிய முடியாது?   என்ற விடயத்தில்  அர்த்தமற்றுப் போவதை எந்தவகையிலும் ஏற்க முடியாது, 

மட்டுமல்ல குறித்த அதிகார எல்லைக்குள் வைத்தியசாலைகள், மத தாபனங்கள், வியாபாரத்தலங்கள் , சமூக நிகழ்வுகள் போன்றவற்றில் அன்றாடம் தமிழர்,முஸ்லிம்பொதுமக்கள் இணைந்தே வாழ்கின்றனர், கல்முனை கடற்கரை  கொடியேற்றப்பள்ளியும், திரௌபதி அம்மன் தீப்பள்ளயமும், இன்றும் இனங்களை இணைக்கின்றன,ஆனால் பிரதேச செயலகத்தில், மட்டும் ஒன்றிக்க முடியாது என்ற மனநிலை என்பது எதனை அடிப்படையாகக் கொண்டது, அங்கு மொழியோ, சிறுபான்மையோ, எமது ஒற்றுமைக்கான அடையாளமாக ஏன்  கவனிக்கப்படவில்லை??,

#தமிழ்_பேசும்_சமூகம், 

இலங்கையில் சிங்களமொழி பேசும் பெரும்பான்மை இனத்திற்கு மாற்றீடாக ஒன்றிணைய இந்த ஒரு மொழிச்சமூகம் என்ற தமிழ் பேசும் ஒற்றுமைக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது, ஆனாலும் தமிழர், முஸ்லிம் உரிமைசார் விடயங்களில் முஸ்லிம்களை புறக்கணிக்கவும், தமிழ் மொழி தமிழரின் மொழி எனவும், அதனை முஸ்லிம்கள் "#வாடகைமொழியாகப் பேசுகின்றனர்," என்று முஸ்லிம்களை ஓரத்துச்சமூகமாக ஒதுக்கி வைக்கவும் இதே கோசம் முன்வைக்கப்படுவதுண்டு ,இதுவே கல்முனை பிரதேச செயலகப்பிரிப்பிலும் இடம்பெற்றிருக்கின்றது, மாறாக மொழிசார், நிர்வாகம் சார் எதுவித நியாயமான காரணங்களும் இப்பிரிவினைக் கோரிக்கைக்கு இருப்பதாகத் தெரியவில்லை, இனவாதத்தைத் தவிர,

#முஸ்லிம்_முன்மாதிரிகள்,

அதே மாவட்டத்தில் உள்ள காரைதீவு எனும் தமிழர் பெரும்பான்மை பிரதேச சபையில் #மாவடிப்பள்ளி, #மாளிகைக்காடு போன்ற முஸ்லிம் பிரதேசங்களும்,பள்ளிவாசல்கள், வியாபாரத்தலங்கள் என்பனவும், #நாவிதன்வெளி பிரதேச சபையின்கீழ் சென்றல்கேம், கொளனிப் பிரதேசம் போன்ற பல முஸ்லிம் வாழ்விடங்கள், சொத்துக்கள் என்பன ஒன்றிணைக்கப்பட்டு தமிழர்களால் நிர்வகிக்கபடுகின்றன, 

இவை ஒரு காலத்தில் தனி முஸ்லிம் நிர்வாகப்பிரதேசங்களில் இருந்து  பிரித்தெடுக்கப்பட்ட முஸ்லிம் வாழ்விடங்களாகும், அம்மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை இன்றும் வழங்கி வருகின்றனர், ஆனால் கல்முனையில் மட்டும் தமிழர்களுக்கு குறித்த நிர்வாக அலகின்கீழ் வாழ முடியாது என்ற கோரிக்கை முன்வைப்பின் நியாயம் என்ன? இது ஏனைய பிரதேசங்களிலும் எதிர்காலத்தில் தாக்கத்தை உண்டு பண்ணி பிரிவினையைத் தூண்டாதா?, 

அதே போல் கல்முனை பிரதேச செயலாளராக, எல்லா இனத்தவர்களும் கடமை புரிந்துள்ளனர், ஓரிரு வருடத்திற்கு முதல் #மங்கள_விக்கிரமாராச்சி என்ற சிங்கள மொழி பேசும் பிரதேச செயலாளர் ஒருவரும்  இங்கு கடமை புரிந்ததும்  குறிப்பிடத்தக்கது, 

#தீர்வுகள்,

கல்முனையில் 1989 ல் ஆயுத முறையில். ஏற்படுத்தபட்ட உப பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை எதிர்த்து கல்முனையைச் சேர்ந்த நஸீர் ஹாஜி என்பவர் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் ஒரு வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார் ,குறித்த வழக்கு இலக்கம் /300, இது எதிர்வரும் 30:04:2019 அன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது, இலங்கையின் சட்டப்படி நீதி தொடர்பான தீர்மானங்களை நீதிபதிகளே மேற்கொள்வர் , அதற்கு கட்டுப்பட்டு நீதியின் முடிவை அமல்படுத்தக் கட்டுப்படுவது அனைவரதும் கடமை, 

மாறாக, வேண்டுமென்று மக்கள் ஊர்வலத்தையும், இனவாத்த்தையும் தமிழர் தரப்பின் " உணர்வாளர்கள் "என்ற பெயரால் கோயில்களிலும், சமூக ஊடகங்களிலும் தூண்டுவதை உடனடியாக,நிறுத்துவதுடன், தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமை பற்றிச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு குறித்த செயற்பாட்டாளர்களுக்கு உள்ளதுடன், அதற்கான உயர்மட்ட நடவடிக்கைகளை அரசியல்வாதிகளும் மேற்கொள்ள வேண்டும்,

#எதிர்கால_நடவடிக்கைகள்,

குறித்த கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் வேண்டுமென்றே இனவாத த்தை தூண்டுவதும், முஸ்லிம்களின் அடையாளமான கல்முனைக்கு எதிரான அழிப்பு நடவடிக்கைகளில் திட்டமிட்டு செயற்படும் தீவிரத்தன்மை, எதிர்காலத்தில் தமிழர் தரப்பினால் எதிர்பார்க்கப்படும் "இணைந்த வடகிழக்கு" என்ற தாயக    கனவில் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை எனலாம், அந்நேரத்தில் முஸ்லிம்கள் குறுக்கே நிற்பதற்கான உந்துதலை கல்முனை விடயம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை,

ஏனெனில் வடபுலத்தின் தலைநகராகவும் தமிழர் அடையாளமுமாக உள்ள யாழ்ப்பாணத்தை கூறு போட்டால் எவ்வாறான தவிப்பு  மனநிலையை தமிழர் தரப்பு அடையுமோ, அதே நிலையே இன்றைய கிழக்கு முஸ்லிம்கள் உள்ளனர் என்ற உணர்வு ரீதியான கோரிக்கையின் நியாயங்களை உரியவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்,

எனவேதான் ஒருமொழிச்சமூகம், சிறுபான்மை,பிட்டும் ,தேங்காய்ப்பூவும் என்ற அனைத்து கருத்தியல்  ஒற்றுமைக்கோசங்களையும் அவசரமாக நடைமுறை செயற்பாட்டிற்கு கொண்டுவந்து, குறித்த கல்முனை விவகாரத்தில் தமிழர் தரப்பின், அரசியல்தலைவர்கள், சமூகஅமைப்புக்கள், புத்திஜீவிகள் போன்ற ஆர்வமுள்ள அனைவரும் தமது முன்மாதிரிகளை வெளிக்காட்டி சாதாரண பொது மக்களிடையேயான "#இனஉணர்வுப்_பதற்றத்தை தீர்க்க அவரசமாக முன்வருவதே இதற்கான தீர்வாக அமையும் ,இன்றேல் ஊர்வலங்களும், ஹர்த்தால்களும், நிச்சயாக இதுவரை காலமும் பாதுகாத்த இனஉறவைப்  பாதித்து விடும் என்பதே என்போன்ற இன ஒற்றுமைனை விரும்பும்  பலரின் கணிப்பாகும்,

முபிஸால் அபூபக்கர் 
SENIOR LECTURER

3 comments:

  1. இனவாத கட்டுரை

    ReplyDelete
  2. இலங்கயில் ஒரு இனம் புறநடை இல்லாமல் எல்லா இனங்களுமே தாம் தாம் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசங்களில் உண்மைபேசி நீதியுடன் செயல்படுவது குறைவு. உதாரணத்துக்கு மன்னாரில் பெரும்பாக தமிழர் சமூக சக்திகளின் பார்வையில் முஸ்லிம்களும் மொனராகலயில் சிங்கள சமூக சக்திகளின் பார்வையில் மலைகத் தமிழர்களும் கல்முனையில் கல்முனைகுடி முஸ்லிம் சமூகசக்திகளின் பார்வையில் தமிழர்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகளை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  3. நண்பா, கல்முனை ஒரு பிரதேச செயலகமாக இருந்தது. பின்னர் கல்முனை (குடி) முஸ்லிம், சாய்ந்தமருது முஸ்லிம் கல்முனை வடக்கு தமிழ் என பிரிக்கபட்டது. கல்முனை முஸ்லிம்களைப் பிரித்து சாய்ந்த மருது பிரதேச செயலகம் உருவாக்கியமை முஸ்லிம் ஒற்றுமைக்கு பாதகமில்லை என்கிறவர்கள் கல்முனை வடக்கு தமிழ் மாவட்ட செயலக பிரிப்பு தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமைக்குப் பாதகம் என்பது சரியா? மேலும் இலங்கை அரசின் நிர்வாகப்பிரிவை புலிகள் ஆயுதத்தால் உருவாக்கினர் என்பது என்பது அபத்தமில்லையா? காலத்துக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை ரத்துச் செய்துவிடமுடியுமென நம்புகீறீர்களா? கல்முனை முஸ்லிம் கல்முனை தமிழ் செயலக எல்லைகளில் மாற்றம் தேவையெனில் காலம் தாழ்த்தாமல் அதைப்பற்றி பேசலாமே.

    ReplyDelete

Powered by Blogger.