Header Ads



மைத்திரிபாலவின் ஆதரவு யாருக்கு..?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்தான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீள்பரிசீலனை செய்து வருவதாக மிக நம்பகரமாக அறியமுடிகின்றது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் – போட்டியிடுவது தொடர்பான தனது முடிவை இறுதி நேரத்தில் வாபஸ் பெற்று – தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக சொல்லப்படும் கோட்டபாயவுக்கு அவர் ஆதரவை வழங்கக் கூடுமென சொல்லப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு செல்லும் முன்னர் தனக்கு நெருக்கமான கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்த மைத்ரி ,முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை பொதுவெளியில் கண்டபடி விமர்சிக்க தேவையில்லையென பணித்தாரென அறியமுடிகின்றது.

இது குறித்து தகவல் வெளியிட்ட ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் ,கோட்டாவுடன் ஒரு நட்பை பேணி வரும் மைத்ரி அவருடன் புரிந்துணர்வு அடிப்படையில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்வாரென்று தெரிவித்தன.

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக இப்போது மைத்ரி தெரிவித்து வருவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே என்றும் அந்த வட்டாரங்கள் கோடிட்டுக் காட்டின . tn

1 comment:

Powered by Blogger.