Header Ads



முஸ்லிம் - கிறிஸ்த்தவ நல்லிணக்கத்திற்கு, இந்தப் பள்ளிவாசல் அழகிய உதாரணம் - ஒற்றுமையை குலைக்க முடியாது


இந்த அழகிய பள்ளிவாசலுக்கு “யேசுவின் அன்னை பள்ளிவாசல்” (மேரி தி மதர் ஆஃப் ஜீஸஸ் மாஸ்க்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நல்லிணக்கத்திற்கு அழகிய எடுத்துக்காட்டு.

ஆண்டாண்டு காலமாய் இந்த நல்லிணக்கத்தைத்தான் இஸ்லாம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நல்லிணக்கத்திற்கு முன்னோடியே திருக்குர்ஆன்தான்.

திருக்குர்ஆனில் “மர்யம்” (அன்னை மேரி) என்று ஓர் அத்தியாயமே உண்டு. (அத்தியாய எண்: 19)

“உலகின் மிகச் சிறந்த, உயர்ந்த பெண்மணிகளில் ஒருவர் மர்யம் (அன்னை மேரி)” என்று பாராட்டுகிறது குர்ஆன்.(பார்க்க 66:12)

இயேசுவின் பிறப்பை மிக அழகிய முறையில் உயிர்த்துடிப்புடன் வர்ணிக்கிறது மாமறை குர்ஆன். (பார்க்க 19:22-26)

இவை எல்லாமே வேத வசனங்களாகவே- இறைவனின் வார்த்தைகளாகவே இறுதிவேதத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மறுமை நாள் வரை இந்த நல்லிணக்கம் தொடரும்.

இடையில் சில சூழ்ச்சி மதியாளர்கள் இந்த அற்புதமான நல்லிணக்கத்தைக் குலைக்க முயன்றாலும் இறையருளால் வேதக் கருத்துகளே வெற்றி பெறும்.

நல்லிணக்கம் தழைக்கும்.

-சிராஜுல்ஹஸன்

7 comments:

  1. உலகின் யூத சமூகத்
    திற்கு இது வெறுப்பு
    க்குரிய பள்ளிவாச
    லாக இருக்கும்...

    ReplyDelete
  2. Where is the Mosque located ?????

    ReplyDelete
  3. Where is the Mosque situated ??

    ReplyDelete
  4. Where is this Mosque 🕌?

    ReplyDelete
  5. located in al mushrif area abudhabi UAE
    build in 1989 by sheikh al Nahyan president of uae

    ReplyDelete
  6. இலங்கையிலா இருக்கின்றது? எந்த நாடு என்று கூறனுமே

    ReplyDelete

Powered by Blogger.