Header Ads



வெள்ளிக்கிழமை கோத்தா நாடு திரும்புகிறார் - பாதிப்பு இல்லை என்கிறது மகிந்த அணி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

கலிபோர்னியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச, அங்கு வாழும் இலங்கை மக்களையும் சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இதனால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மஹிந்த அணி இன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எதிர்வரும் வெள்ளியன்று கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புகிறார் என அறியமுடிகின்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் ஆவணங்களை கடந்த 6ஆம் திகதி அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. What the "Mahinda Pela" (மஹிந்த அணி ) has stated is fully correct, Insha Allah. Muslim voters should understand that this is also to distract the support Sri Lanka Muslims have begun to show towards Gotabaya Rajapaksa's Presidential candidature. Things have changed since the Presidential Elections - January 8th.,2015 and the General Elections – September 14th., 2015. The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Civil Society Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights”. They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.