Header Ads



தீவிரவாதக் குழுக்கள் கற்பிப்பது, இஸ்லாமாக இருக்காது - சந்திரிக்காவுக்கு சுடச்சுட பதிலடி

இலங்கையில் இஸ்லாமிய மத்ரஸா பள்ளிகளை மூடிவிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த பள்ளிகள் தீவிரவாதத்தை போதிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்னர் மத்ரஸா பள்ளிகள் இலங்கையில் இருந்து அகற்றப்பட்டன.

எனினும், இது தொடர்பில் நடப்பு அரசாங்கத்திடம் கூறிய போதும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குரிய பாடசாலைகளில் படித்த பல மாணவிகள் அதில் இருந்து விலகி, மத்ரஸாக்களில் இணைந்தனர். இந்தநிலையில் ஆனந்தா, நாலந்தா மற்றும் விசாகா போன்ற கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று சந்திரிக்கா கோரியுள்ளார்.

இதேவேளை, இதன்போது கருத்துரைத்த மௌலவி பாரிஸ் பாருக், மத்ரஸா என்பது அறநெறி வகுப்புக்களாகும். இவற்றை எவரும் வந்து பார்வையிட முடியும். இந்நிலையில் தீவிரவாதக் குழுக்கள் கற்பிப்பது இஸ்லாமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. இந்த களத்திலேயே பலர் இப்போதும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக வன்முறை தனமான கருத்துக்களை எழுதுகிறார்களே? தீவிரவாத குழுக்களும் இவற்றை தானே கற்பிக்கிறார்கள்? மௌலவி பாரிஸ் பரூக் குறிப்பிட்டது போல மத்ரஸா பள்ளிகளில் தமிழ் மற்றும் தமிழ் தெரிந்த சிங்களவர் நிரந்தர பார்வையாளராக நியமிக்க படவேண்டும். அவர்களுக்கு சம்பளமும் செலவுகளும் அந்தந்த பள்ளிகளால் வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. சந்திரிக்கா எவ்வளவுதான் படித்திருந்தாலும் இப்படி மதரசாக்களை மூடுமாறு கூறுவது சிறுபிள்ளைத்தனம். இந்த ஐஎஸ் இயக்கம் இலங்கையில் உருவாக்கப்பட்ட இயக்கம் இல்லை இலங்கை மதரசாக்களில் உருவாக்கப்பட்ட இயக்கம் இல்லை. இது கடந்த 15 வருடங்களாக உலகில் உள்ள பல மேற்கத்திய நாடுகள் சமூக பொருளாதார அரசியல் காரணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்திலுள்ள அனேகமானவர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் எல்லாம் மதரசாக்களில் போய் கல்வி கற்றவர்கள் இல்லை.ஒரு சிலர் மாத்திரமே மதரஸாக்களில் கல்வி கற்று அரபி மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் தவிர அனேகமானவர்கள் ஐஎஸ்ஐஎஸ்ஸின் கருத்துக்களை பிரதிபலிக்கும் பின்னணியில் வாழ்பவர்கள். இலங்கையில் மதரசாக்கள் பல நூறு வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றன.

    ReplyDelete
  3. First of all, before say something against a religious body, Chandrika as an ex President of this country and daughter of well reputed prominent parents and families, she should have thorough knowledge on the subject. There may be one or two Moulavies involved in terrorist activities. That should not allow her to request closer of Madrasas on the whole. If she thinks like that she has to remember that the fate of her father. The Silver Tongue was brutally killed by a terrorist Monk who would have studied in a Privena.

    ReplyDelete

Powered by Blogger.