Header Ads



சிறுவயது முதலே மத்ரஸாக்களில், தீவிரவாத சிந்தனை விதைக்கப்படுகின்றது - ஓமல்பே சோபித்த தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

அம்பிலிப்பிட்டிய போதிராஜ விகாரையில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் ஈடுபடுவதாக இருந்தால், அவரது உள்ளம் அதற்காகவே பண்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய மத்ரஸாக்களில்தான் மதவாதம் ஊட்டப்படுகின்றது. சிறுவயது முதலே மத்ரஸாக்களில் இந்த தீவிரவாத சிந்தனை விதைக்கப்படுகின்றது. தனது உயிரை மதத்துக்காக தியாகம் செய்ய போதிக்கப்படும் முக்கிய நிலையமே இந்த மத்ரஸாவாகும்.

இந்த மத்ரஸாக்களில் ஆங்கிலம், தமிழ், அரபு என்பன மாத்திரமே போதிக்கப்படுகின்றன. சிங்களம் போதிக்கப்படுவதில்லை. இந்த மத்ரஸாக்களுக்கான ஆலோசனைகள் கல்வி அமைச்சிடமிருந்து கோரப்படுவதுமில்லை. அவர்களுக்கு செல்ல அனுமதிப்பதுமில்லை.

கிழக்கு மாகாணத்தில் சரீஆ பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் எதிர்காலத்தில் இந்த அடிப்படை வாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், இந்த மத்ரஸா பற்றிய கண்காணிப்பை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

4 comments:

  1. We should not generalise this issue at all. some few radicals took some wrong decision but we can not blame all for this mistake.

    ReplyDelete
  2. இதற்கு ஊழல் அரசாங்கம் தான் பொறுப்பு.

    ReplyDelete
  3. சொல்லும் போது எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.
    ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது அதட்குறிய ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.
    ஆதாரமற்ற செய்திகள் உண்மை ஆகாது

    ReplyDelete

Powered by Blogger.