Header Ads



இலங்கையில் உள்ள மத்ரஸாக்களிலேயே, இஸ்லாமிய பயங்கரவாதம் உருப்பெறுகின்றது - விமல் வீரவன்ச

இலங்கையில் மதரஸாக்களிலேயே இஸ்லாமிய பயங்கரவாதம் உருப்பெறுகின்றது. ஆகவே நாட்டில் அடிப்படை வாத அமைப்புகளை  முதலில் தடை செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினர். 

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

வனாத்துவில்லுவவில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட பின்னரும் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட போதும் இது தொடர்பாக ஆராயுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  இந்த விடயத்தில் விசாரணைகளை முன்னெடுத்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் தற்போது மீண்டும் 10 வருடங்களின் பின்னர் பிள்ளைகளை வெளியில் அனுப்ப முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 

இவ்வாறாக அச்ச நிலைமையை மீண்டும் கொண்டு வந்தது யார்? 2015 ஜனவரி 8ஆம் திகதி அச்ச நிலைமை இல்லாது செய்யப்பட்ட நாட்டையே தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.  ஆனால் மீண்டும் அந்த நிலைமையை உருவாக்கியுள்ளனர். வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடு என இவர்களால் கூற முடியவில்லை. சர்வதேச பயங்கரவாதம் என்றே கூறுகின்றனர்.  அடிப்படை வாதத்திற்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்கு இவர்கள் இடமளிக்கவில்லை. தவ்ஹீத் ஜமா அத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய ஏன் இன்னும் நடவடிக்கையெடுக்கவில்லை எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

1 comment:

  1. True.but this incident not arrange Muslims.but last time bodubala sena making same no any one shouting. Why?

    ReplyDelete

Powered by Blogger.