Header Ads



பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது, தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம்

பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும் நீர்கொழும்பு கட்டுவான கட்டாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்திலும் மட்டக்களப்பு சீயோன் ஆலயத்திலும் வாழிபாடுகள் இடம்பெற்றவேளை தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அப்பாவிப் பொதுமக்கள் மிகவும் மிலேச்சத்னமாக கொல்லப்பட்டனர். இதுவரை 310 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 500 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.