April 25, 2019

பொதுமக்களை கொல்பவர்கள், உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது - தேசிய தவ்ஹீத் ஜமாத்

பொதுமக்களையும் குழந்தைகளையும் பெண்களையும் கொல்பவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது என தேசிய தௌவீக் ஜமாத்தின் தலைவர் தௌபீக் மௌலவி தெரிவித்தார்.

தேசிய தௌவீக் ஜமாத் மௌலவி ஷஹ்ரான் என்பவரினால்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் காலப்போக்கில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போக்கினை கொண்டிருந்ததன் காரணமாக தமது அமைப்பில் இருந்து விலக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடியில் உள்ள தேசிய தௌவீக் ஜமாத்தின் பள்ளியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,

தேசிய தௌவீக் ஜமாத் மௌலவி ஷஹ்ரான் என்பவரினால்தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் காலப்போக்கில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போக்கினை கொண்டிருந்ததன் காரணமாக தமது அமைப்பில் இருந்து விலக்கப்பட்டார். அதன்காரணமாக மௌலவி ஷஹ்ரான் என்பவருக்கும் தமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தமது அமைப்பு மௌலவி ஷஹ்ரானால் ஆரம்பிக்கப்பட்டபோதும் 2017ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஏற்பட்ட கலவரம்; ஒன்றையடுத்து அவர் தலைமறைவாகியிருந்த நிலையில்

அரசாங்கக்திற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துவந்த நிலையில் அவரை தமது அமைப்பில் இருந்து நீக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாம் என்பது தெளிவான மார்க்கம். இஸ்லாத்தின் சட்டங்கள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களையும் பெண்களையும் கொலைசெய்யக்கூடாது என இஸ்லாம் தெளிவாக கூறியுள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல்களில் பல சிறுவர்களும் பெண்களும் உயிரிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டவர்கள் உண்மையான இஸ்லாமியராக இருக்கமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்கள் எமது அமைப்பின் மீது குற்றங்களை முன்வைத்தாலும் இந்த தாக்குதலுக்கும் தமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனம் அவர் தெரிவித்தார்.

7 கருத்துரைகள்:

not only children and females, but also, innocents and religious devotees and more... just you can defend and fight against who attack against your believe (religion), life, self respect and your belongings...

சும்மா பொத்திக்கிட்டு போடா

Before preaching go and see how divided you are among your own Thowheed group. I think it's time for you to come together as a united group or get lost..Also help the police to identify the remaining suspects in your group.

5 வகையான தவ்ஹீத் ஜமாத்தாரே உங்களிடம் நாம் கேட்பதெல்லாம்.நினைத்த நேரத்தில் நீங்கள் ஒவ்வொருவராக பிரிவதுக்கும்,பிரிந்த பின் உங்களுக்கென பள்ளிகள் உருவாக்கவும் எங்கிருந்து பணம் மற்றும் வாய்ப்பு,வசதிகள் வருகிறது.அந்த பணம் கிடைக்கும் இடத்தில் எவ்வகையான காரணங்களை கூறுகிறீர்கள்

இலங்கை அரசாங்கத்துக்கு எரிரான போக்கை கொண்டிருந்ததனால் அவனை தமர் அமைப்பிலிருந்து விலக்கியதாக கூறும் இவர் ஏன் அவனை பொலீசில் புகார் செய்யவில்லை?
அப்போதே .இதனை செய்திருந்தால் இப்போ இந்த நிலை வந்திருக்காதே?

25:69. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
மேலே கூறப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் மூன்றுபெரும்பாவங்களை அல்லாஹ் சுட்டிக் காட்டி அவற்றில் ஈடுபடுபவர்கள் நிரந்தரமாக( ஆயிரமாயிரம் வருடங்கள் நரகில் தள்ளப்பட்டு நிரந்தரமாக நரகவேதனையை பல மடங்கு அனுபவிப்பார்கள் என அல்குர் ஆன் கூறும்போது, அநியாயமான மனிதர்களைக்கொலை செய்பவர்கள் நிரந்தரமாக நரகத்தில் நிலையாக தற்றப்படுவார்கள் என அல்லாஹ் மிகத் தெளிவாக க்கூறும்போது ‘மேலே உள்ளவர் ‘ பெண்களையும் பிள்ளைகளையும் அநியாயமாகக்கொலை செய்பவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது எனக்கூறும் போது எமக்கு இவருடைய கூற்றில் சந்தேகமும் ஆச்சரியமும் தோன்றுகின்றது.
அநியாயமாக மக்களைக் கொலை செய்பவன் யாராக இருந்தாலும் அவன் நரகத்தில் தள்ளப்பட்டு நரகவேதனையை இரட்டிப்பாக அனுபவிப்பான் என அல்லாஹ் மிகத் தெளிவாகச்சொல்லும்போது மேலே உள்ள மனிதன் ‘ அநியாயமாகக் கொலையில் ஈடுபடுபவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது’ எனக்கூறுகின்றார், இவருடைய கருத்துப்படி உண்மையான முஸ்லிம்,பொய்யான முஸ்லிம் என முஸ்லிம்களில் இரு குழுவினர் இருப்பது தெளிவாகின்றது. பொதுமக்களை எந்தவிதமான நியாயமின்றி கொலைசெய்பவன் அவனுடைய பெயரும் குடும்பப் பாரம்பரியமும் தோற்றமும் அவனுடைய நடத்தையும், பின்னணியும் எதுவாக இருந்தாலும் மரணத்தின் பின் அவன் நரகம் சென்று நரக வேதனையைப் பலமடங்கு அனுபவிப்பான் என்ற அல்குர்ஆன் வசனத்தை நாம் முழுமையாக நம்மி விசுவாசித்து முழுமையாக ஏற்று அதனைப் பின்பற்றுகின்றோம். தெளிவான அல்குர் ஆன் வசனங்களில் இரு வேறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை.
எனவே, அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, மனிதர்களை நியாயமான காரணமின்றி (சட்டத்தின் மூலம் கொலைசெய்யப்பட்ட உறவுக்காக பழிக்கும்பழி வாங்கல் போன்றவை தவிர்ந்து) கொலைசெய்வது, விபச்சாரத்தில் ஈடுபடுவதுபோன்ற மூன்று பயங்கரமான குற்றங்களுக்கும் மரணத்தின் பின் உள்ள தண்டனை அவர்கள் மூவரும் நிரந்தரமாக நரகநெருப்பில் தள்ளப்பட்டு ஆயிரமாயிரம் வருடங்களுக்கு இரட்டிப்பாக நரகநெருப்பை சுவைப்பார்கள் என்றால், இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களைப் படுகொலைசெய்தவர்கள்,ஹோட்டல்களில் தங்கி, உணவருந்தும்போது அவர்களைப் படுகொலைசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்துக்கும், அல்லது உலகில் எந்த மூளையிலாவது அல்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றும் சமூகத்துக்கும், இந்த கொலைகாரர்களுக்கும் ஒரு உறவோ தொடர்போ கிடையாது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்தது போல் இந்த கொலைகாரர்கள் அல்லாஹ்வுடைய இந்த பூமியில் தகனம்செய்வதற்கு அருகதையற்ற பிணங்கள் அவற்றை ராஜாளி, பருந்துகள் அல்லதுவேறு காட்டு மிருகங்கள் என்னவேண்ட்டுமென்றாலும் செய்யட்டும் என காட்டில் வீசப்படவேண்டிய பிணங்கள்.

2; 191 அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறுவதுபோல், ‘ ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும்’ இத்தகைய மாபாதகமான கொலையும் நாட்டில் குழப்பத்தையும் ஏற்படுத்திய இந்த கொலைகார ர்களை நிச்சியம் இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, இல்லாமால் செய்யும் வரை இனி இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிம்மதியும் எதிர்காலமும் நிச்சியம் இருளாகவே இருக்கும் என நாம் மிகவும் கவலையுடன் நம்புகின்றோம்.

இத்தகைய நெருக்கடியாக நிலைமையில் நிலைமைகளைப் பொறுமையாக எதிர்நோக்கி அனைவருக்கும் நல்ல வாழ்க்கையை வழங்குமாறு அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

நீங்கள் எல்லோரும்
ஒரு குட்டையில் ஊறி
ய மட்டைகள்...
ஒரே அஜந்தா பாட
த்திட்டத்தம் சிந்தனை
ப்போக்கில் எல்லோ
ரும் ஒன்றுதான்.
சஹ்ரான் இரத்தப்புற்
றுநோய் என்றால்
நீங்கள் தோல்புற்று
நோய்...

Post a Comment