Header Ads



முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்களினால், ஆபத்து கிடையாதென உறுதிபடக் கூறுகிறேன் - மெல்கம் ரஞ்சித்


கிறிஸ்தவர்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஆபத்து கிடையாது என்பதனை உறுதிபடக் கூற முடியும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடும் நபர்கள் எந்தவொரு மதத்தையும் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் கர்தினலை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் நபர்களினால் இவ்வாறான கொடூரத் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவர்ளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது எனவும் நீண்ட காலமாக இந்த பிணைப்பு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமிய முறைப்படி தாக்குதல் நடத்தியதாக கூறினாலும் இந்த எதுவும் இஸ்லாமிய மார்க்கத்தின் வழியானது அல்ல என தெரிவித்துள்ளார்.

எம்மீது தாக்குதல் நடத்திய தரப்பினருக்காகவும் நாம் பிராhத்தனை செய்கின்றோம் எனவும், இஸ்லாமிய மக்கள் மீது நாம் கைதூக்கிவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு நாமும் ஒர் வகையில் காரணம் எனவும், சமூகத்தில் காணப்படும் பல்வேறு ஏற்றத்தாழ்வு நிலைமைகளே இந்த தீவிரவாதத்தை தூண்டுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. இது 100% உண்மை

    ReplyDelete
  2. கர்தினால் மெல்கம்
    ரஞ்சித் அவர்களுக்கு
    உயர்வான நன்றிகள்.
    மிக உயர்வான பண்
    பாடும் அமைதியும்
    நிறைந்த சமூகம்
    முஸ்லிம்பெயர்தாங்கி
    ய அரக்கர்களினால்
    தாக்கப்பட்டமைக்கு
    இருகரம் ஏந்தி நாம்
    மன்னிப்புக்கோருகி
    றோம். நூற்றுக்கணக்
    கான முஸ்லிம்களாகி
    ய நாம் உங்கள் பாட
    சாலைகளிலேயே உய
    ர்கல்வியை பெற்றோ
    ம். உண்மையில் எம
    க்கு அறிவுஞானத்திற்
    கு வழிகாட்டியவர்கள்
    நீங்கள்...பின்னாற்க
    ளில் தோன்றியுள்ள
    தௌஹீத் ஜமாஅத்
    போன்ற இயக்கங்கள்
    முஸ்லிம் மாணவர்க
    ளை தனிமைப்படுத்
    தி மூளைச்சலவை
    செய்வதன் விளைவு
    இன்று உங்கள்மீதான
    இக்காட்டுமிராண்டித்
    தாக்குதல் எனக்கருது
    கிறோம்.
    ஏசுநாதர்(ஈஸா நபி)
    ஒருநாளில் வெளிப்ப
    டுவார் என்பதன்
    கோட்பாட்டில் நீங்களு
    ம் நாங்களும் நாங்க
    ளும் பூமியில் சமாந்
    தரக்கோட்டில் வாழ்ந்
    துகொண்டிருக்கிறோ
    ம்.
    இலங்கைவாழ் முஸ்
    லிம்கள் சார்பாக உங்
    களிடம் மீண்டும் மீண்
    டும் மன்னிப்பை வே
    ண்டிநிற்கிறோம்.

    ReplyDelete
  3. இலங்கையில் உள்ள சமூகத்தில் ஒழுக்கசீலர்களை அதிக விகிதாசாரத்தில் கொண்டுள்ள சமூகம் கிறிஸ்தவ சமூகமே. அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள். உங்களுக்கும் உங்கள் சமூகத்துக்கும் இறைவன் மன ஆறுதல் அளிப்பானாக.ஆமேன்.

    ReplyDelete

Powered by Blogger.