Header Ads



இலங்கை தாக்குதல் குறித்து, சர்வதேச ஆய்வாளர்களின் கருத்துக்கள்


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் ஓர் இஸ்லாமிய அமைப்பு தொடர்பு பட்டிருத்தல் என்பது, இஸ்லாத்தின் மீதான குற்றச் சாட்டுக்களும் இஸ்லாமோபோபியா என்ற இஸ்லாமிய எதிர்ப்பு வாதமும் அதிகரிக்கலாம் எனவும், இதுவே மேற்கு நாடுகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்ற செல்வாக்குமிக்க தலைப்பாகும் என கலிபோனியா பல்கலைக் கழகத்தின் பாதுகாப்புக் கற்கை நெறிக்கான பேராசிரியர் ஆரிப் ஹத்தார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்குக் கிடைத்த எச்சரிக்கைகள் மூலோபாய எச்சரிக்கைகளாகும். ஏனெனில் அவை குறிப்பிடத்தக்க இலகுவான இலக்குகள் மீது நடாத்தப்படும் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய சில தகவல்களாகும். இது, தாக்குதல் நடாத்துபவர்களின் பெயர்கள், தாக்குதலுக்குரிய நேரம், தாக்குதலுக்குரிய சாதனங்கள் பற்றிய செயற்பாட்டுத் தகவல்களைத் தரும் தந்திரோபாய எச்சரிக்கைகளில் இருந்து வேறுபட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21.04.2019 அன்று இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அல் ஜஸீரா செய்தி நிறுவனம் பல்வேறு துறைசார்ந்தவர்களிடம் நடாத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.  தொடர்ந்து அவர் கூறுகையில்,

‘இலங்கை மக்களைப் பொருத்தவரை, உள்நாட்டில் குண்டுகளைத் தயாரிப்பதும் அவற்றை 21 இல் நடைபெற்றது போன்று பல இடங்களுக்கு விநியோகிப்பதும் இலகுவான ஒன்றாகும். இலங்கையில் ஏறத்தாள 25 வருடங்கள் தொடராக நிகழ்ந்த உள் நாட்டு யுத்தத்தின் போது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் வரலாற்றை நோக்குகையில் இலங்கை மக்கள் வெடிபெருள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை அறிந்து வைத்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

தீவிர வாத அமைப்புக்கள் வெடிகுண்டு பற்றிய எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, தம்பால் மக்களின் கவனத்தை ஈர்த்தல். மற்றயது, உண்மையான தாக்குதலாயின் அதன் சேதங்களைக் குறைத்தல் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியவர்களிடையே சிறப்பான ஒருங்கமைப்பு காணப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதனால் தான் 15 நிமிட இடைவெளிக்குள் ஆறு தாக்குதல்களை நடாத்த முடிந்துள்ளது. நான்கு தற்கொலைத் தாக்குதல் குண்டுதாரிகளே அவற்றை நிறைவேற்றியுள்ளதாகவும் இத்தாக்குதல் பற்றி அக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பத்திரிகையாளர் ஹாபில் பாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் கலாநிதி ராஜேஸ் வினோகபல் இச்சம்பவம் குறித்து குறிப்பிடுகையில்,

‘மேற்படி தாக்குதல்களின் பிரதிபலிப்பு இலங்கையில் முஸ்லிம்களை மிகவும் பாதிக்கக் கூடியதாக இருக்கலாம். முஸ்லிம்கள் இத்தாக்குதல்களைக் கடுமையாக கண்டித்த போதும் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீதே சுமத்தப்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தகவல் – Asheik Faslur Rahman

1 comment:

  1. isis wara karanam illangayil mannaril gas kandu pidithadhey. adhu americawuku kidaika ilanayil america army nilayaha thanga atpaduthiya sadhi. adhu matrum indri trinco harbour 3 world waruku ilangaiku awasiyamahum.adhuwillamal american base ulahilaye periya base ilangayil uruwaka thittam theetuhindraner. save sri lankan muslim and non muslim mind...............etc

    ReplyDelete

Powered by Blogger.