Header Ads



பாலியல் தேவைகளை, சட்டபூர்வமாக செய்யுங்கள் என இஸ்லாம் சொல்கிறது - சிங்கள சமூகத்திற்கு அம்ஹர் மௌலவியின் விளக்கம்

இது நீங்கள் நான்கு திருமணங்கள் செய்வதைப்பற்றியது....

நானும் நீங்களும் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த குடிமக்கள்.

அப்படியிருக்கும் போது உங்களுக்கு நான்கு திருமணங்களை செய்வதற்கு அனுமதி இருக்கிறது எனக்கு அந்த தெரிவு இல்லை.

இது எனது தனிப்பட்ட உரிமை மீறப்படுவது போன்று அல்லது பாகுபாடான நீதியாக தெரிகின்றதே! இதனைப்பற்றி....?

இல்லை, முதலாவதாக நீதியை பொறுத்த வகையில் பொது நீதி, தனிப்பட்ட நீதி என்றிருக்கிறது.

குர்ஆன் திருமணம் தொடர்பில் இட்டிருக்கும் கட்டளையினை பின்பற்றுகிறோம். 

நாங்கள் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் குர்ஆனின் சட்டங்களையே பின்பற்றுகிறோம். அது நாட்டின் பொது நீதியை, சட்டத்தை தகர்ப்பதாக பொருள்படாது.

இஸ்லாம் சொல்லும் தனிப்பட்ட நீதியை கடைப்பிடிக்கும் போது அது பொது நீதியை பாதிக்காத வண்ணமே நடந்து கொள்கிறோம்.

இரண்டாவது , இது பெளத்த தர்மம் போதிக்கப்படுகிற/ பெளத்தர்கள் கூடுதலாக வாழுகிற ராஜ்ஜியம். இருந்த போதும் அதிகமான விபச்சார விடுதிகள் இங்கே இருக்கின்றன. 

மஸாஜ் நிலையங்கள் என்ற பெயரில் நான் முன்னர் சொன்னது போன்று பல விடயங்கள் நடக்கின்றன.

திருமணத்திற்கு அப்பாலான பாலியல் தொடர்புகள், சட்ட விரோத பாலியல் நடவடிக்கைகள் என்பன மலிந்து காணப்படுகின்றன.

இஸ்லாம் உங்களது பாலியல் தேவைகளை சட்டபூர்வமாக செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறது.

மூன்றாவது, இஸ்லாம் வெறும் அழகிற்காக அல்லது கவர்ச்சிக்காக மாத்திரம் திருமணம் செய்து கொள்ளும் படி சொல்லவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் திருமணம் பெண்ணுடைய நான்கு விடயங்களை கவனத்தில் கொண்டு செய்யப்படுகிறது.

முதலாவது அழகு இரண்டாவது பொருளாதாரம் மூன்றாவது பரம்பரை நான்காவது நற்பண்புகள். யார் நான்காவதை தேர்ந்தெடுக்கிறாரோ அவர் வெற்றி பெற்றவர் என்று உபதேசித்துள்ளார்கள்.

மற்றது நான் நிறைய பொது வேலைகளில் சம்பந்தப்படுபவன் என்ற வகையில் ஆடைத்தொழிற்சாலைகளில் நிறைய பெண்களை சந்திக்க முடிகிறது, அவர்களுள் பலருக்கு 35, 36 வயதுகளாகிறது. ஆனால் ஏதேதோ காரணங்களால் இன்னுமே அவர்களுக்கு திருமணமாகவில்லை.

இஸ்லாம் சொல்கிறது உங்களிடம் போதிய பொருளாதாரம் இருக்கிறதா? உடல் ஆரோக்கிய பலமிருக்கிறதா? அவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள முடியுமா? சட்டபூர்வமாக திருமணங்களை செய்துகொள்ளுங்கள்.

மாறாக அந்த திருமணங்கள் வெறும் அழகிற்காக, கவர்ச்சிக்காக, நூறு வீதம் காம ஆசையினை தீர்த்துக்கொள்வதற்காக, பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக மாத்திரம் அமைந்து விடக்கூடாது.

Mujeeb Ibrahim

No comments

Powered by Blogger.