Header Ads



முஸ்லிம் தரப்பிலுள்ள, சிலர் குழப்புகின்றனர் - தமிழ் கூட்டமைப்பிடம் ரணில் புலம்பல்

கல்முனை தமிழ் கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை தற்காலிக தீர்வுகளை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அதேசமயம் கல்முனை தமிழ் பிரதேசசபையை தரமுயர்த்துவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்த பிரதமர் எல்லை சர்ச்சைகளை தீர்க்க குழுவொன்றை அமைக்கவும் உடன்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலான கலந்துரையாடல் இன்று பாராளுமன்றத்தில் நடந்தது.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள்  கலந்து கொண்டனர்.

கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லைஎனவும் முஸ்லிம் தரப்பிலுள்ள சிலர் மட்டுமே அதனை குழப்புவதாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பகுதிகள், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும்- அது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள்- என முஸ்லிம் தரப்பால் வலியுறுத்தப்படுகிறது என குறிப்பிட்ட பிரதமர் , இந்த எல்லைபிரச்சினை தீர்த்தால், பிரச்சினையில் கணிசமான பகுதியை கடந்து விடலாம் எனத் தெரிவித்தார்.

எனினும், தமிழ் பிரதேச செயலகத்தின் பகுதிகளை, கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து, தமிழ், முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முன்னர், முதற்கட்டமாக நிதி விவகாரங்களை கல்முனை தமிழ் உப பிரதேச செயலகமே கையாள வேண்டுமென குறிப்பிடப்பட்டது. எனினும், உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்கும் ஆளணி ஒதுக்கீட்டை தற்போது மேற்கொள்ளும் சட்ட ஏற்பாடுகள் கிடையாது என்பதால் இந்த சிக்கலை தீர்க்க, மாற்று ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டது.

இதன்படி, கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரை, கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் மற்றும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட செயலகமே மேற்கொள்ளும். கல்முனை பிரதேச செயலகத்தில் தற்போது கடமையிலுள்ள கணக்காளர், மாவட்ட செயலகத்திற்கு அழைக்கப்பட்டு, அங்கிருந்தே கடமைகளை செய்வார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர் றிஷார்ட் பதியுதீனும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

tamilan

1 comment:

  1. குரங்கிடம் அப்பம் புறிக்க சென்றால் இப்படித்தான். இருக்கிறதையும் புடுங்கிக்கொள்வார்கள். முஸ்லிம்களைப் பொறுத்து தவிர்க்க முடியாத கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபைக்கு ஆதரவளித்து கரையோர மாகாணத்தை பெறுவது மட்டுமே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். ”ஆமை சுடுவது மல்லாத்தி நமக்கது சொன்னால் பாவம்”

    ReplyDelete

Powered by Blogger.