Header Ads



சூடானில் என்ன நடக்கிறது...?


30 ஆண்டுகளின் பின்னர் பதவி விலகிய சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவத் இபின் ஓஃப் தெரிவித்துள்ளார்.

ஒமர் அல் பஷீர் இன்று பதவி விலகியுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல் இடம்பெறும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் சூடான் இராணுவம் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்தோடு குறித்த பகுதியில் மேலும் 3 மாதங்கள் வரை அவசரகால நிலையை நீடிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இருக்கும் அரசாங்கத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த மாதங்களாக ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.