Header Ads



"சும்மா" இருக்கும் இளைஞர்களை அவதானிப்போம் - இது முஸ்லிம் சமூகத்தின் கவனத்திற்கு...!

தொழில் இல்லாத அல்லது சும்மா  இருக்கும் இளைஞர்கள்தான் மார்க்கத்தின் பெயரால் அல்லது போதைப் பொருள் வியாபாரிகளின் பிடிக்குள் அவசரமாக அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

பொதுவாக எல்லா சமூகத்தோடும் கலந்து வாழக்கூடிய , முஸ்லிம்கள்,  ஒரு போதும் தீவிரப்போக்கு உடையவர்களாக இருப்பதில்லை.

அரசாங்கத் தொழில் செய்பவர்கள்,மாற்றுமத பாடசாலைகளில் கற்றவர்கள்,எல்லா இன மக்களும் வேலை செய்யும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்  இப்படியான சூழலில் இருக்கும் முஸ்லிம்கள்  ஒரு நாளும் ஏனைய மதத்தவர்களை வெறுப்புணர்வோடு பார்ப்பதில்லை.

தந்தையின் பணத்தில் திண்டு கொண்டு சும்மா இருப்பவர்கள்.

தனக்கு வேலை இல்லை என்பதனால் ஊரைத் திருத்த முற்படுபவர்கள்.

ஒன்லைனில் மார்க்கம் படித்து ஒன்லைனிலேயே முப்தி பட்டம் பெற்றவர்கள்.

இப்படியான இளைஞர்கள்தான் யாருடையதாவது எஜன்டாவுக்குள் இலகுவாக சிக்கிக் கொள்கிறார்கள்.

நடந்த சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.

இனியேனும் இப்படி மண்ட கலண்ட கேசுகள் சமூகத்தில் உருவாகமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக தந்தை எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்த்து  வைத்திருந்தாலும் தனது பிள்ளைகளுக்கு கல்வி, சுயமாக சம்பாதித்தல், சமூக அந்தஸ்துடன் வாழ்தல் போன்ற விடயங்களின் முக்கியத்துவத்தை சிறுவயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களது உள்ளங்களில் வாழ்வது குறித்த ஆசை,அன்பு,கஷ்டம்,கவலை போன்ற உணர்வுகள் துளிர்விடும்.

அப்படி இல்லாமல் அப்பாவிடம் பணம் இருக்கிறது,  வெளிநாட்டில் இருக்கும் அண்ணாவிடமிருந்து பணம்வரும்,  எல்லாவற்றுக்கும் அல்லாஹ் இருக்கிறான்.

நாம் எந்த முயற்சியும் செய்யாமல் மார்க்கம் பேசிப்பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் சுவர்க்கம் போய்விடலாம்  என்று நினைக்கும் மடையர்கள்தான் இந்த சமூகத்தில் உருவாகுவார்கள்.



Safwan

6 comments:

  1. இக்கட்டுரையை வாசிக்க நிம்மதியாய் இருக்கு. இப்படி சொல்லக்கூடிய சூழல் முன்னர் இருக்கவில்லை. பயங்கர வாதச் சூழல் உருவாகுது உங்கள் பிள்ளைகளை காட்டிகொடுக்காமல் இப்பவே கண்காணித்து நல்வழிப்படுத்துங்கள் என பல வருடங்களாக வலியுறுத்திவருகிறேன். அதற்க்கு காபிர் முனாபிக் பட்டங்கள் கிடைத்தது.

    ReplyDelete
  2. you are very correct, only the school education & school teachers will not be able to correct these type of cases, Their parent have a very important responsible to follow the children & the society, religious leaders should open their eyes towards the youths.

    ReplyDelete
  3. மத்ஹப்புக்கள் தரீக்
    காக்கள் தீவிர பிள
    வை சமூகத்தில் ஏற்
    படுத்தியதற்கான பதி
    வுகள் பெரிதாக உலகி
    ல் இல்லை.தவிர அவ
    ற்றின் மார்க்க போத
    னைகள் அன்பையும்
    பண்பையும் அடித்தள
    மாகக்கொண்டு அமை
    ந்தவை. பொதுவாக
    எல்லோரும் மனிதர்
    கள் என்ற பொதுக்
    கோட்பாட்டுக்குள்
    செயற்படுகின்ற தன்
    மை உடையவை.
    But தவ்ஹீத் இயக்
    கங்கங்கள் முஸ்லிம்
    கள் ஏனைய மனித
    ர்களை இழிவாக
    எண்ணும் போக்கை
    இளைஞர்களுக்குள்
    ஏற்படுத்துவதை முத
    ன்மையாகக்கொண்
    டு செயற்படுகின்ற
    ன.இச்சிந்தனைப்
    போக்கு இளைஞர்
    களை கவர்ந்திழுப்
    பதற்கான உத்தியா
    கவும் இருக்கலாம்.
    இவ்வழிமுறையும்
    கொள்கையும் சர்வ
    தேச பயங்கரவாதத்
    திற்கும் சாதகமா
    அமைந்துவிட்டதன்
    விளைவுதான் நாட்
    டில் இன்று நடக்கி
    றது.

    ReplyDelete
  4. நன்றி ஜெயபாலன் ஐயா,

    இப்படுகொலை சம்பவங்களால் ஏற்பட்ட அதிர்ச்சிகளிலிருந்து இன்னுமே முஸ்லிம் சமூகம் மீளவில்லை என்பதே உண்மை. ஒரு சில தறிகெட்ட இளைஞர் கூட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புமாகும். இவற்றை குடும்ப கட்டுமானங்கள், பள்ளிவாயல்கள், முஸ்லிம் அமைப்புகள் மூலமாக முடிந்த வரை கவனித்து நெறிப்படுத்துவது கடமையாகும். இவ்வாறான நடவடிக்கைகளை இந்த சமூகம் பொறுப்புடன் மேற்கொள்ளும் என்பதையும் எங்களால் நம்பிக்கையுடன் கூற முடியும்.

    இஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. இந்த மோசமான படுகொலைகளை புரிய உதவியோர், ஆதரவளித்தோர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ISIS அல்லது வேறெந்த தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் அவர்கள் வேரோடு பிடுங்கப்பட வேண்டும்.

    ஆனால் அவர்கள் ஏன் உருவானார்கள் என்பதையும் கண்டறிந்து அவற்றையும் தீர்க்க வேண்டும். முஸ்லிம் மீது வெறுப்பை உமிழ்வது நிச்சயமாக தீர்வாகாது.

    ReplyDelete
  5. 100% correct.ths s our motherland.buddhists,christians, hindu & muslims we all must live together.

    ReplyDelete

Powered by Blogger.