Header Ads



துஆ புத்தகங்களையும், இஸ்லாமிய சஞ்சீகைகளையும் அச்சத்தினால் எரிக்கும் அவலம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்து சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பள்ளிவாசல்கள், மையவாடிகளிலும்கூட, இந்த சோதனைகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் சோதனைக்கு வரும் முப்படையினர், தம்மிடமுள்ள  குர்ஆன் பிரதிகள், துஆக்கள் , அடங்கிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாமிய சஞ்சீகைகளையும் பார்த்துவிட்டு தம்மை கைது செய்யலாம் என்ற அச்சத்தினால், தம்மிடமுள்ள துஆ புத்தகங்களையும், இஸ்லாமிய சஞ்சீகைகளையும் அச்சத்தினால் எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அறியவருகிறது.

அந்தவைகயில் சில கைதுகளின் போது, அல்ஹஸனாத் சஞ்சிகை அங்கிருந்தாக மீடீயாக்களில் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, பல வீடுகளில் பயத்தின் காரணமாக அல்ஹஸனாத் சஞ்சிகையை நெருப்பில் எரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 comments:

  1. There is a problem of translation as well. They should give Prabodaya instead of Tamil version of Al-Hasanath. what a joke is this? Sri Lankan army need to know how to catch radicals. Not public.

    ReplyDelete
  2. இதை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்லது கர்த்தாள் வைப்பது தானே

    ReplyDelete
  3. naam vithaitha vithaihalin palan

    ReplyDelete
  4. இது நமது ஈமானுக்கான சோதனைக் காலம். நிதானமாகவும் புத்திக்கூர்மையுடனும் செயற்பட்டு இச்சோதனையில் வெற்றி பெறிவோம்.

    ReplyDelete
  5. தவ்ஹீத் பெயர் கொண்ட எதையும் வைத்திருப்பது குற்றமாக கருதும் பொழுது அவற்றை எரித்து விடுவது தான் சிறந்தது. அவை சஞ்சிகையாக இருந்தால் என்ன துவா புத்தகமாக இருந்தால் என்ன தற்போதைய சூழ்நிலையில் அவற்றை அழித்து விடுவதில் ஒன்றும் தவறில்லை என்று நான் நினைக்கின்றேன். பள்ளிவாயில்களிலும் மவ்லவிமார்கள் இடமும் வால்கள் இருப்பதைப் பற்றி ஒன்றும் யாருமே சொல்வதில்லையே இவர்களுக்கு ஏன் இதெல்லாம்? இவற்றை வைத்திருப்பதற்கான இவர்களின் நோக்கம் என்ன.

    ReplyDelete
  6. Please bring this to the higher officials who can do something

    ReplyDelete
  7. மிக உண்மை உங்களுக்கு கிடைத்துள்ளது. இதைவிட மோசமான நிலைமையே உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட மேசைக்கத்திகள் குசினியில் இருந்தாலும் அபகரிக்கப்பட்டதை காட்டிய ஊடக கானொளிகளையும் கண்டோம்.

    ReplyDelete
  8. Al hasanath not a dua qithsab
    That is monthly Magazine from jamathey islam

    ReplyDelete
  9. Ajan எதை எப்படி சமாளிக்க வேண்டுமென்று முஸ்லிம்களுக்கு தெரியும் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்டு சிறையிலிருக்கும் புலி தமிழ் பயங்கரவாதிகளை விடுவிக்க நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதை போல் நாம் தேச துரோக விடயங்களில் ஈடுபடமாட்டோம். ஆகவே நீங்கள் உங்கள் பின்னுறுப்பை கழுவிக்கொண்டிருப்பது சிறப்பு

    ReplyDelete
  10. Dear NGK,
    அஜான் சொன்னதில் என்ன தவருண்டு? அதுதான் காலப்போக்கில் நடக்கபோகிறது.
    அஜானொரு பிரமதத்தவர் என்பதால் எப்பொழுதும் நாம் அவரை குறைகாணக்கூடாது.
    நம்மவரின் மீடியாவை பிரமதத்தவர் பார்ப்பதற்கே நாம் இன்னும் அவர்களுக்கு நன்றி சொல்லனும்.

    ReplyDelete
  11. அல்ஹஸனாத் தொடர்பாக...


    நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக் கருதி நாடளாவிய ரீதியில் வீடுகள், நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதை சகலரும் அறிவர். பரிசோதிக்கப்பட்ட பல முஸ்லிம் வீடுகளின் வரவேற்பறையில் அல்ஹஸனாத் பிரதிகள் காணப்பட்டுள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் அல்ஹஸனாத் மாத இதழ் பற்றியும் பாதுகாப்புப் பிரிவினர் வினவியுள்ளனர். இது பற்றி அல்ஹஸனாத் வாசகர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.


    அல்ஹஸனாத் இதழை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் காரியாலயத்திற்கு வருகை தந்த பாதுகாப்புத் தரப்பினருக்கு எமது வெளியீடுகள் குறித்து நாம் விளக்கமளித்துள்ளதுடன் அல்ஹஸனாத் பிரதிகளையும் வழங்கி வைத்துள்ளோம்.


    எனவே, நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் அல்ஹஸனாத் வாசகர்களுக்கு குறிப்பாகவும் அல்ஹஸனாத் வெளியீட்டுடன் தொடர்பான சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.


    ▪ அல்ஹஸனாத் 1970ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படுகின்ற ஒரு குடும்ப மாத இதழ்.


    ▪ இது இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானிப்படுத்தப் பட்டுள்ளது.


    ▪ கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கைத் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்க சேவைகள் சபையிலும் (National Library and Documentation Services Board, Ministry of Education Services) பதிவு செய்யப்பட்டுள்ள அல்ஹஸனாத், சர்வதேச நியம சஞ்சிகை இலக்கத்தையும் (ISSN- International Standard Serial Numbering) பெற்றுள்ளது. (ISSN NO: 1391- 460X)


    ▪ இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பத்திரிகைகளுக்கான பதிவைப் பெற்றுள்ள அல்ஹஸனாத், வருடாந்தம் அதனைப் புதுப்பித்தும் வருகிறது. (Registered as News Paper in GPO/QD/132/NEWS/2019)


    ▪ அல்ஹஸனாத்தை வெளியிடும் ஊடக நிறுவனமான ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் இலங்கை கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.


    ▪ அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அங்கீகாரப் பிரிவினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளையும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் பெற்றுள்ளனர்.


    ▪ இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தரவுப் பதிவேட்டில் எமது வெளியீடுகள் அனைத்தும் வருடாந்தம் இற்றைப்படுத்தப்பட்டு (Update) கோவைப்படுத்தப்பட்டு வருகின்றன.


    நடுநிலைச் சிந்தனையை நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் வகையில் மார்க்க, சமூக, கலாசார, பண்பாட்டு அம்சங்களைச் உள்ளடக்கியதாக கடந்த 49 வருடங்களாக அல்ஹஸனாத் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


    எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இஸ்லாமிய குடும்ப இதழான அல்ஹஸனாத் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் அதன் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.


    தொடர்புகளுக்கு:
    0777874983
    0773783810
    0112689324

    --
    அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ்
    ஆசிரியர்,
    அல்ஹஸனாத்

    ReplyDelete
  12. استعين بالصبر والصلاة

    தோழுகையை கொண்டும்
    பொருமையை கொண்டும்
    உதவி தேடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.