Header Ads



கல்முனையில் பலஸ்தீன் தூதுவர், ஆற்றிய முக்கியத்துவமிக்க உரை


(எம்.என்.எம்.அப்ராஸ்)

 கல்முனை நகர் (பஸார்) பள்ளிவாசலுக்கு கடந்த நேற்று (1)  இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச்.தார் சைட்விஜயமொன்றை மேற்கொண்டார். இதன் போது  பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பலஸ்தீன் புனித பூமி தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கி   அங்கு  உரையாற்றினார் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார் மேலும்  தெரிவிக்கையில்

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் முஸ்லிம்கள் தரப்பால் யூதர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ, இடையூறோ இன்று வரை நடந்த வரலாறு  கிடையாது என்பது அனைவருக்கும்  தெரிந்த விடயமாகும்.

ஐரோப்பாவில் அன்று யூதர்களுகளுக்கு எதிராக அழிப்புகள் இடம்பெற்ற .அந்த சமயத்தில் அவர்களை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது முஸ்லிங்கள் என்பது வரலாராற்று உண்மையாகும்.

பலஸ்தீனத்திற்கு யூதர்கள் வந்தது விருந்தாளிகளாகத்தான்ஆனால் அவர்கள் எங்களை இன்று ஆக்கிரமித்து எங்கள் நிலங்களை பறித்து எங்களை அங்கிருந்து விரட்டினார்கள்.அதன் உச்ச கட்டிடமாகத் தான் மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமிப்பு செய்தார்கள் .

நாங்கள் இன்று வரை இந்த பலஸ்தீன் பூமிக்காய் இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறோம். பலஸ்தீன் பிரதேசம் என்பது ஓர் பரந்த பிரதேசமாகும்.

இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும் இது எமது புனிதஸ்தமென்று.இதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேனென்று ஒவ்வொரு முஸ்லிமும் இந்த விடயத்தில் தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் இறைவன் இஸ்லாம் என்ற மிக அற்புதமான மார்க்கத்தை கொண்டு எம்மை கண்ணியப்படுத்தியுள்ளான். இஸ்லாம் மார்க்கமானது அன்பின், விட்டுக்கொடுப்பு,சகோதர்த்துமான மார்க்கமாகும்.

 அண்மைக்காலமாக  பலஸ்தீன் புனித பூமியில்   பல வன்முறைகள்  இடம்பெற்று வருகின்றது. இதனை  கட்டுப்படுத்த அனைவரும் முன் வர வேண்டும் .
இந்த  பலஸ்தீனத்துகாய் அனைவரும் பிரார்த்தனை புரிய வேண்டும் என்றார்.


No comments

Powered by Blogger.